24 special

தமிழ்நாட்டில இப்படி ஒரு கோவில் இருக்கிறது உங்களுக்கு தெரியுமா??

kondarangi hills , shivan
kondarangi hills , shivan

தமிழ்நாடு முழுக்க எத்தனையோ சிவன் கோவில்கள் இருப்பினும், மலை ஏறி சென்று சிவனை தரிசனம் செய்வது என்பது தனி ரகம் தான். மலை ஏறி செல்லும்போது போக போக சிவனை பார்த்திட வேண்டும் என்ற ஆர்வம் கூடும். மலையேறி செல்லும்போது பாதி வழியில் சென்ற பின் பார்த்தால் வானத்தின் உச்சிக்கு சென்றது போல் தோன்றும். அப்படிப்பட்ட மலை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் உள்ள கொண்டரங்கி மலையாகும். இம்மலை  லிங்கம் போன்றசிவன் வடிவத்தில் மிகவும் பிரம்மாண்டமாக அமைப்பு பெற்று இருக்கும். தரையிலிருந்து 3825 அடி உயரமானது. தொடக்கத்தில் இந்த மலையானது சமத்தாளமாக இருக்கும். அதன்பின் மலையேற்றம் தொடங்கும். போகப் போக மலை செங்குத்தாக இருப்பதினால் ஏறுபவர்களுக்கு மிகவும் சோர்வை உண்டாக்குவதாக உள்ளது. மேலும் ஏறுபவர்களின் மன வலிமையும் மற்றும் உடல் வலிமையையும் சோதிக்கும் மழையாக இது அமைந்திருக்கிறது. இந்த மலையில் செல்லும் போது நீர் தாகம் ஏற்படும் வண்ணம் இங்க ரெண்டு நீரிசுலைகள் உள்ளது. 


இது எக்காலத்திலும் வற்றாத சுனையாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு சுனையானது இரண்டாவது மலையிலும் மற்றொன்று மலையின் மேல் அமைந்திருக்கும் சிவபெருமான் பக்கம் அமைந்திருக்கும் என்று கூறுகின்றனர். போகப் போக மலையானது மிகவும் செங்குத்தாக மாறிக்கொண்டே இருக்கும். பாதி அளவு சென்றபின் மேகங்கள் மழையை உரசுவது போன்று தோன்றும். போகப் போக காற்றின் அளவு மிக அதிகமாக இருக்கும் எனவே சற்று கவனமாக செல்ல வேண்டிய கட்டாயம் அமைந்துள்ளது. இந்த மலையை ஏறி மேலே உள்ள கோவிலை அடைந்தவுடன் அங்கு சிவபெருமான் காட்சியளிக்கின்றார். இங்கு அமைந்துள்ள சிவபெருமான் சுயம்பு லிங்கமாக அமைந்துள்ளார். இந்த மலையின் மேல் சின்ன அளவாக கோவில் கட்டப்பட்டுள்ளது. அங்கு தொடக்கத்தில் ஒரு சிறிய விநாயகர், நந்தி மற்றும் நாகேஸ்வரர் காட்சியளிக்கின்றனர். மேலும் இங்குள்ள சிவனை மல்லிகா அர்ஜுன் என்றும் அழைக்கின்றனர். கோவில் முழுக்க முழுக்க குடைவரை கோயில் ஆகும். கோவில் முழுவதும் மலையே செதுக்கி செய்யப்பட்டது, கோவிலின் வரலாறு என்னவென்று பார்த்தால் இக்கோவில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. 

மேலும் இதற்கான கல்வெட்டு இருப்பதாகவும் அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆனா அந்த கல்வெட்டானது கோவிலில் கிடையாது. அந்தக் கல்வெட்டானது அரவம் குறிச்சி என்னும் ஊரில் இல்ல ரெங்கமலையில் பாண்டிய மன்னருடைய எட்டாவது நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு ஒன்று இருப்பதாகவும் மற்றும் அந்த கல்வெட்டில் இந்த கொண்டரங்கி மாலை பாண்டிய மன்னர் காலத்தில் வெட்டப்பட்டது என்று தகவலும் அந்தக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. ஆனால் புராணக் கதைப்படி இங்கு பஞ்சபாண்டவர்கள் வந்ததாகவும் அவர்கள் தங்கி இருந்ததாகவும் அந்த குகைகள் இன்றும் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் முக்கியமாக இந்த மலைக்கு மேல் உச்சியில் அம்மாவாசை பௌர்ணமி அன்று வந்து தியானம் செய்தால் இறந்து போன நம் முன்னோர்களிடம் பேச முடியும் என்று அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர். சற்று இன்னும் கொஞ்சம் மேலே ஏறினால் கொண்டடந்த மலையின் உச்சியை அடையலாம். இந்த மலையின் உச்சியில் வெப்பம் மிகவும் குறைவாகவே இருக்கும். சற்றுக் குளிர்ந்த இடமாக இருக்கும். மேகங்கள் நம் மீது தவழ்ந்து செல்லும் அழகினை ரசிக்கலாம். இங்கு சென்று வருபவர்களின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை அவர்களால் உணர முடியும். மேலும் அவர்களின் வேண்டுதல் என்னவாக இருந்தாலும் சிவபெருமான் நடத்தி வைப்பார் என்று நம்பப்படுகிறது.