24 special

எம்பி தேர்தலில் களமிறங்கும் ராதிகா சரத்குமார்...பாஜகவின் செம்ம பிளான்..!

Radhika Sarathkumar, Stalin
Radhika Sarathkumar, Stalin

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக கண்டது வருகிறது. கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து தனது கட்சிகளுடன் கூட்டணியை வலுப்படுத்தி தொகுதி பங்கீட்டை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. தேர்தலை பொறுத்தவரை அதிமுக- திமுக என இரண்டு கட்சிகளும் இடையேயான போட்டி என்ற நிலையில் மூன்றாவதாக  பாஜக கட்சி இணைந்து மும்முனை போட்டியாக அமைந்துள்ளது. தென் மாவட்டங்களை பொறுத்தவரை முக்குலத்தோர், நாடார் உள்ளிட்ட ஓட்டுக்கள் அதிகமாக உள்ளது. அவர்களை பாஜக பொறி வைத்து அங்கு பெண் வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. 


பாஜக கூட்டணியில் அதிமுக வெளியானதை அடுத்து மும்முனை போட்டியாக தேர்தல் அமைந்துள்ளது. அதிலும், பாஜக தனது கூட்டணி கட்சிகளை கொண்டு பக்காவான பிளான் போட்டு வருவதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி இணையும் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் பாஜகவின் தனது கூட்டணியை உறுதிப்படுத்தினார். இதனால் தென் மாவட்டத்தில் உள்ள நாடார் சமுதாயத்தின் ஓட்டுக்களை சரத்குமார் கொண்டுவரவார் என சில தகவல் வெளியாகியது.

தென் மாவட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்களிலுள்ள ஒட்டுமொத்த நாடார் சமுதாய வாக்குகளையும், பாஜகவுக்குள் கொண்டு வரவேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறது. இதனால் சரத்குமாரை பாஜக தனது பக்கம் இழுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை, திருநெல்வேலி, கன்னியாகுமரி 2 தொகுதிகளை, பாஜகவிடம் கேட்டிருக்கிறாராம். எனினும், இந்த 2 தொகுதிகளையும் பாஜக ஒதுக்குமா? என்று தெரியவில்லை. இதில், திருநெல்வேலியில் போட்டியிட சரத்குமார் விரும்புவதாக தெரிகிறது.

ஆனால், நெல்லையில் ஏற்கனவே, பாஜகவின் மாநில துணை தலைவரும், சட்டப் பேரவை குழுவின் தலைவருமான நயினார் நாகேந்திரன் போட்டியிட விருப்பம் தெரிவிப்பதால் அங்கு பாஜக சரத்குமாருக்கு ஒத்துக்காது என்பது தெரிகிறது. இந்நிலையில் நடிகையும் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகின. இதற்கு காரணம், விருதுநகரில் சுமார் 12 ஏக்கர் இடத்தில் தன்னுடைய சொந்த செலவில் பெருந்தலைவர் காமராஜருக்கு மணிமண்டபம் அமைத்து கொடுத்துள்ளார் சரத்குமார். இதைத்தவிர, அங்கு வருங்காலத்தில் பள்ளிக்கூடம் கட்டி இலவச கல்வி வழங்கவும் நிறைய எதிர்கால திட்டத்தையும் வகுத்து வைத்திருக்கிறாராம்.

பாஜக ஒரு தொகுதி கொடுக்காமனால் அதனை விருதுநகரை கொண்டு சரத்குமார் லாக் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் தலைமை கட்சியான பாஜகவில் இருந்து எந்த வித அறிவிப்பும் வரவில்லை. சரத்குமார் ராதிகா விருதுநகரில் போட்டியிட பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறாராம். வரும் நாட்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது. விருதுநகரில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மாணிக்கம் தாகூர் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.