24 special

சற்றுமுன் : மோடியை பார்க்க சென்ற பராசக்தி டீம்....தலையில் கை வைத்த அறிவாலயம்..மொத்தமும் முடிந்தது

PMMODI,MKSTALIN
PMMODI,MKSTALIN

தேர்தல் கால அரசியலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட  ‘பராசக்தி’ திரைப்படம், எதிர்பார்த்த ஆதரவைக் கொண்டுவருவதற்குப் பதிலாக, திமுக தலைமையிலான கூட்டணிக்குள் தீராத அரசியல் சங்கடத்தை உருவாக்கியுள்ளது. திரை அரசியல் மூலம் தேர்தல் அரசியலை திசைமாற்றலாம் என்ற கணக்கே, இப்போது திமுக கூட்டணிக்கே விழுந்த இடியாக மாறியுள்ளது.


தமிழக அரசியலில் திரைப்படங்கள் எப்போதும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. குறிப்பாக தேர்தல் நெருங்கும் நேரங்களில், அரசியல் கருவை மையமாகக் கொண்ட படங்கள் வெளியாவது புதுமையல்ல. அந்த வரிசையில், ‘பராசக்தி’ திரைப்படமும் ஒரு திட்டமிட்ட அரசியல் கணக்குடன் உருவானதாகவே பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பரவலாக விற்கும் அரசியல் கதையாக ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்ததன் பின்னணி புரிந்துகொள்ளக்கூடியதே. திமுகவின் வரலாற்று அடையாளமாகக் காட்டப்படும் அந்தப் போராட்டம், தேர்தல் காலத்தில் உணர்ச்சிகளைத் தூண்டும் என படக்குழு கணித்திருக்கலாம். ஆனால் அந்த கணக்கில்தான் பெரும் தவறு ஏற்பட்டுள்ளது.

ஹிந்தி எதிர்ப்பு அரசியலை முன்னிறுத்திய திமுகவும், ஹிந்தியை ஆட்சிமொழியாக்க முயன்றதாக குற்றம் சாட்டப்படும் காங்கிரஸும் இன்று ஒரே கூட்டணியில் இருப்பது, இந்தப் படத்தின் அரசியல் தாக்கத்தை முற்றிலும் குழப்பிவிட்டது. இன்று மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தி திணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டில் எவ்வளவு அரசியல் இருக்கிறதோ, அதே அளவு அரசியல் அன்றைய ஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டிலும் இருந்தது என்பதே பலரின் வாதம்.இந்த நிலையில், ‘பராசக்தி’ திரைப்படம் திமுகவுக்கு தேர்தல் ஆதாயம் தரும் என்ற எதிர்பார்ப்பு முற்றிலும் பிழையாகியுள்ளது. மாறாக, கூட்டணிக்குள் உள்ள முரண்பாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து, எதிர்க்கட்சிகளுக்கே அரசியல் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது.

மேலும் த.வெ.க., தலைவர் நடிகர் விஜயின் ஜனநாயகன் பட தணிக்கை விவகாரத்தில், விஜய்க்கு ஆதரவாக லோக்சபா காங்கிரஸ் தலைவர் ராகுல் குரல் கொடுத்துள்ளதால், தி.மு.க., மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த 9-ம் தேதி வெளியாக இருந்த, விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு, தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், படம் வெளியாகவில்லை.

இப்பட சர்ச்சையில், விஜய்க்கு ஆதரவாக, காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, எம்.பி.,க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, விஜய் வசந்த் ஆகியோர் குரல் கொடுத்தனர்.இதையடுத்து, தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர்கள் நேரு, சிவசங்கர் போன்றவர்கள், காங்கிரசாரின் ஆதரவு குரலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், லோக்சபா காங்கிரஸ் தலைவர் ராகுலும், ஜனநாயகன் படத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இதனால், தி.மு.க., மேலிடம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இவ்வாறு முட்டலும் மோதலும் பொய் கொண்டிருக்கையில் டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது மேலும் காங்கிரசை அதிர்ச்சியடைய செய்துள்ளது. திமுக காங்கிரசை இதற்கு மேல் அசிங்கப்படுத்த முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளார்கள்.  இன்னும் சில நாட்களில் திமுக  காங்கிரஸ் கூட்டணி  உடையும் என கூற ஆரம்பித்துவிட்டார்கள். மேலும் சிவகார்த்திகேயன் சென்றது திமுக தரப்புக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது. தமிழ் திரை உலகம் தற்போது தேசியத்தின் பக்கம் திரும்புமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது