Tamilnadu

கெத்து காட்டிய குழந்தைகள், விழி பிதுங்கிய காவல்துறை வைரலாகும் வீடியோ !

hindu munnani
hindu munnani

விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் பெரிய அளவிலான சிலைகளை நிறுவி தமிழக மக்கள் கோலாகலமாக விழாவினை கொண்டாடுவார்கள்.ஒரு வாரத்திற்கு பிறகு இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். குறிப்பாக சென்னையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்ச்சி திருவிழா போல நடைபெறும் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரப்படும் விநாயகர் சிலைகள் கடலில் மிகுந்த பாதுகாப்புடன் கரைக்கபடும்.


ஆனால் கொரோனாவை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு திமுக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. கொரோனா இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் இந்த ஆண்டும் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்யக் கூடாது என தமிழக அரசு தடை விதித்துள்ளது.இந்தநிலையில் இன்று சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தடையை மீறி விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டன.

திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டையில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் ஒவ்வொரு ஆண்டும் மிகப் பெரிய விநாயகர் சிலைகளை வைத்து இந்து முன்னணியினர் வழிபாடு செய்வார்கள். மறைந்த இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் இங்கிருந்து தான் தடையை மீறி ஊர்வலமும் செல்வார். அதையொட்டி ஆண்டு தோறும் திருவல்லிக்கேணியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம். தமிழக அரசு தடை விதித்து இருந்த போதிலும் இந்து முன்னணியினர் சார்பில் இன்று காலை 6.30 மணியளயில் திருவட்டீஸ்வரன் பேட்டையில் 3.5 அடி விநாயகர் சிலையை வழிபாட்டுக்காக வைத்தனர். காவல்துறையினர் விநாயகர் சிலைகளை கைப்பற்ற முயன்றபோது சினிமா தியேட்டர் திறந்து இருக்கலாம் ஆனால் எங்கள் சாமியை நாங்கள் வழிபட கூடாதா எனவும் கேள்வி எழுப்பினர்.

இது போன்று பல்வேறு பகுதிகளிலும் தடையை மீறி பொதுமக்களும் இந்து முன்னணி மற்றும் பிற இந்து அமைப்புகளும் விநாயகர் சிலையை நிறுவி வழக்கம்போல் வழிபாடு நடத்தினர், இந்நிலையில் சேலத்தில் பள்ளி குழந்தைகள் மூன்று அடியில் விநாயகர் சிலை ஒன்றை வைத்து உறவினர்கள், ஊர் இந்து முன்னணி உதவியுடன் பந்தல் அமைத்து வழிபாடு நடத்தினர்.இந்நிலையில் அங்கு வந்த போலீசார் அந்த சிலையை கைப்பற்ற முயன்ற போது, விஜய் சேதுபதிக்காக தியேட்டர் திறந்து படம் பாக்க அனுமதி கொடுப்பீங்க ஆனா எங்க சாமிய எங்க ஊருல கும்பிட கூடாதா என கேள்வி எழுப்ப, குழந்தைகள் கேள்விக்கு பதில் கூற முடியாமல் விழி பிதுங்கி நின்றனர் காவல்துறையினர்.

இதே போன்று வேறொரு இடத்தில் வைக்கப்பட்ட சிலையை காவல்துறை பறிமுதல் செய்ய சென்ற போது, பொது இடத்தில் வைத்தால் தானே தவறு நாங்கள் எங்கள் தலைகளில் எங்கள் கணபதியை சுமக்கிறோம் என இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கொண்டு செல்ல அங்கும் காவல்துறையினர் என்ன செய்வது என தெரியாமல் நின்றனர்.சுப.வீரபாண்டியன் தடையை மீறி விநாயகர் சிலையை வைத்து பார்க்கட்டும் என தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசினார், ஆனால் இப்போது தடையை மீறி மாநிலம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து காண்பித்துள்ளனர். நன்றி :- வீடியோ மற்றும் தகவல் உதவி - இந்து முன்னணி