கிண்டல் செய்த துரைமுருகன் கைது ஒருமையில் பேசிய துணை நடிகை என்ன ஆனார் ?sharmila and duraimurugan
sharmila and duraimurugan

தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து ஒருமையில் பேசிய காரணத்தால் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் துரை முருகன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு வருகின்ற 25 ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிரானவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கேள்வி எழுந்துள்ளது !

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கனிமவள தாதுக்களை எடுத்து வேறு மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்வதை தடுத்து நிறுத்த கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மிக பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சாட்டை துரைமுருகன் ஆளும் கட்சிகள் மற்ற மாநிலங்களில் தங்கள் கனிம வளங்களை பாதுகாப்பாது போன்று தமிழகத்தில் இல்லை எனவும் ஒரு தாய் தந்தைக்கு பிறந்தவன் அவ்வாறு செய்யமாட்டான் என பேசியிருந்தார்.

இந்த வீடியோ காட்சி குறித்து ஆளும் கட்சியை சேர்ந்த திமுக எம்.பி மற்றும் சில திமுக பெண் நிர்வாகி உட்பட சிலர் முதல்வரையே தவறாக பேசிவிட்டார் அவரை உடனடியாக கைது செய்யவேண்டும் எனவும் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர், இதையடுத்து  திருநெல்வேலி நெடுஞ்சாலை வழியாக தன்னுடைய வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த துரைமுருகன் காரை வழிமறித்து அவரை கைது செய்துள்ளது காவல்துறை.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் முதல்வரை ஒருமையில் பேசிவிட்டார் என்ற காரணத்திற்காக கைது செய்தது காவல்துறை என திமுகவினர் பலர் விளக்கம் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள், இந்த சூழலில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறதா இல்லை திமுகவினரோ அல்லது அவர்கள் கூட்டணி கட்சியினரோ தவறு செய்தால் சட்டம் தன் கடமையை செய்யாதாது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாட்டின் உச்ச பட்ச அதிகாரத்தில் இருப்பவர் பிரதமர் அவர் குறித்து போலி தகவலை ட்விட்டரில் பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல் அவன் இவன் என ஒருமையில் பேசிய ஷர்மிளா என்ற சீரியல் துணை நடிகையை தமிழக காவல்துறை ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது, முதல்வரை பேசினால் கைது செய்வோம் பிரதமரை பேசினால் வேடிக்கை பார்ப்போம் என இருப்பது தமிழக காவல்துறைக்கு அழகா?

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் கலைஞர் கருணாநிதியை கேலி செய்யும் விதமாக நாகரீகம் அற்று செயல்படுகிறார் துரைமுருகன் அவருக்கானா பரிசை திமுக அரசு கொடுக்க வேண்டும் என நாகரீக வகுப்பு எடுத்த திமுகவை சேர்ந்த சல்மா, பிரதமரை அவதூறாக ஒருமையில் பேசிய துணை நடிகை ஷர்மிளா உடன் நிற்பதாக நேற்று மற்றொரு ட்விட் செய்துள்ளார், இப்போது உண்மையில் யார் நாகரீகம் அற்றவர்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கூலி தொழிலாளி கொலை வழக்கில் கொலை வழக்கு பதிவு செய்தும் இதுவரை தமிழக காவல்துறை திமுக எம். பி ரமேஸை கைது செய்யாதது ஏன்? சட்டம் என்பது அனைவருக்கும் பொது என்றால் துரைமுருகனை கைது செய்த காவல்துறை துணை நடிகை ஷர்மிளாவை எப்போது கைது செய்யப்போகிறது?

ஷர்மிளா விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவரை கைது செய்வதில் பயமா? இல்லை திமுக அரசாங்கத்தை கேள்வி கேட்பவர்களை மட்டுமே தமிழக காவல்துறை கைது செய்யுமா?  இன்னொரு குறிப்பு துரைமுருகனை காட்டிலும் பல்வேறு மடங்கு கீழ் இறங்கி மட்டமான விமர்சனத்தை முன் வைக்கும் சுந்தரவள்ளி மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன அவரை எப்போது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க போகிறது விடை தேடி காத்திருப்போம்? துரைமுருகன் பேசிய வீடீயோவை பார்க்க கிளிக் 


Share at :

Recent posts

View all posts

Reach out