24 special

அமெரிக்காவில் எகிறிய விலை.. டிரம்ப்க்கு எதிராக திரும்பிய அமெரிக்கர்கள்! தலைகீழான களம் ! ஆரம்பித்தது Trade War!

PMMODI DONALDTRUMP
PMMODI DONALDTRUMP

அமெரிக்க அதிபரான டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்தது முதலே வரிகளை விதிப்பேன் எனச் சொல்லி மிரட்டி வருகிறார். இப்போது ஒரு வழியாக அவர் உலக நாடுகள் மீது வரிகளை விதிக்க ஆரம்பித்துள்ளார். அமெரிக்காவுடன் வர்த்தக டீல் எட்டப்படாத அனைத்து நாடுகளுக்கும் டிரம்ப் வரிகளை விதித்து வருகிறார். இதனால் சர்வதேச வர்த்தகம் மோசமாகி வருகிறது.


இந்த வரிகள் வெளிநாட்டுப் பொருட்களின் விலையை அதிகரிக்கும். இதனால் அமெரிக்கர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவார்கள் என்று டிரம்ப் வாதிட்டார். ஆனால் நிலமை தலைகீழாக மாறி உள்ளது  அங்கு உள்ள உள்ளூர் தயாரிப்புகளின் விலை எறியுள்ளது இது அமெரிக்க மக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தரமானதாகவும் இல்லை. அமெரிக்காவின் உள்ளூர் தயாரிப்பான மரபணு உண்வுகளை தவிர்த்து வருகிறார்கள் அமெரிக்கர்கள். 

இதற்கிடையே  பல பொருட்களின் விலை அதிகரித்து வருகிறதாம். இதற்கிடையே டிரம்ப் வரிகளால் அமெரிக்காவில் பொருட்கள் எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்பதைக் காட்டும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மெர்சிடிஸ் சாண்ட்லர் என்ற அந்தப் பெண் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற வால்மார்ட் கடைக்குச் சென்று அங்குப் பொருட்களின் விலை எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை ஒப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் ஆடைகள் விலை எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை சாண்ட்லர் காட்டுகிறார். பழைய விலை அகற்றப்பட்டு அல்லது அதற்கு மேல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. ஆனாலும் ஓரிரு பொருட்களில் பழைய விலை தெரியும் நிலையில், அந்த இரண்டையும் சாண்ட்லர் ஒப்பிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர் மேலும், "வால்மார்ட்டில் ஆடைகளைப் பாருங்கள். விலை இருக்கும் கீழ் பகுதி கிழிக்கப்பட்டுள்ளன. ஆனால், மிஸ்ஸான ஒரு டேக்கை பாருங்கள். பழைய விலை $10.98. ஆனால், புதிய விலை $11.98 ஆக உயர்த்தப்பட்டுள்ளது" என்கிறார்.

மேலும் அவர், "இது டொனால்ட் டிரம்ப்பின் வரிகளின் விளைவு" என்று கூறி, ஒரு குழந்தையின் ஆடையின் விலை $6.98-லிருந்து $10.98 ஆகவும், ஒரு backpack-ன் விலை $19.97-லிருந்து $24.97 ஆகவும் உயர்த்தப்பட்டிருப்பதை காட்டுகிறார். "இது $4 அதிகரிப்பு" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். பல விலை tag-கள் ஸ்டிக்கர்களால் மறைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறுகிறார்.

அவர் மேலும் கூறுகையில், "நான் சொல்வதை நம்பவில்லையெனில், நீங்களே அருகில் உள்ள வால்மார்ட் அல்லது டார்கெட் கடைக்குச் சென்று பாருங்கள். உங்களுக்கே புரியும்" என்று சாண்ட்லர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இது தொடரும் என்றும் அமெரிக்கர்களே சிரமத்தைச் சந்திக்கப் போகிறார்கள் என்றும் பதிவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "ஆஹா, நாம் வரி அதிகம் செலுத்த ஆரம்பித்துவிட்டோம். இனி எல்லாப் பிரச்சனையும் சரி ஆகிவிடுமா? என்ன லாஜிக் இது" என்று விமர்சித்துள்ளார். அதேபோல அங்குள்ள புகழ்பெற்ற டார்கெட் என்ற கடையில் வேலை செய்யும் ஊழியர், தங்கள் கடைகளிலும் எல்லாப் பொருட்களுக்கும், குறிப்பாக ஆடைகளின் பழைய விலை ப்டடியலை அகற்றத் தொடங்கிவிட்டதாகப் பதிவிட்டிருக்கிறார்.   "சீனா மற்றும் இந்தியா மீது அதிக வரி விதித்தால், பொருட்களின் விலை ஏன் அதிகரிக்கிறது? யாராவது எனக்கு விளக்க முடியுமா?" என்று குழப்பமான மனநிலையில் ஒரு பயனர் கேட்டுள்ளார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீதும் 50% வரிகளை விதித்திருந்தார். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதாகச் சொல்லி 50% வரியை டிரம்ப் அறிவித்தார். தற்போது 25% வரி அமலுக்கு வந்துவிட்ட நிலையில், கூடுதல் வரி 25% இந்த மாத இறுதியில் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. இதனால் இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தகத்தில் சுமார் 40% வரை பாதிப்பு ஏற்படலாம் என்றும் குறிப்பாக ஜவளி துறையில் பாதிப்பு மோசமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.