
இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவு அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. ட்ரம்பின் வரி நடவடிக்கை இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவைச் சீர்குலைத்து விடும் என்று அமெரிக்க அதிகாரிகளே எச்சரித்துள்ளனர் ந்தியாவின் மீது 50 சதவீத வரி விதிக்கும் ட்ரம்பின் உத்தரவை, முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செயலாளர் (Kurt Campbell) கர்ட் கேம்பல் விமர்சித்துள்ளார்.மேலும் பிரதமர் மோடியைப் பற்றி ட்ரம்ப் கூறிய கருத்துக்களால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள அவர், ட்ரம்பின் கோரிக்கைகளுக்கு இந்தியா அடிபணிய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான (Gregory Meeks) கிரிகோரி மீக்ஸ் டிரம்பின் அமெரிக்கா-இந்தியா கூட்டாண்மையை உறுதிப்படுத்தப் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பணிகளை எல்லாம் ட்ரம்ப் உடைத்து விட்டார் என்று வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார்.
இதேபோல், அமெரிக்காவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் (John Bolton) ஜான் போல்டன், ட்ரம்பின் வரிக் கொள்கை, நேர்மாறான விளைவை ஏற்படுத்தும் என்றும், வரும் காலங்களில் இந்தியாவை ரஷ்யா மற்றும் சீனாவுடன் நெருக்கமாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.சர்வதேச வர்த்தகத்துக்கான முன்னாள் அமெரிக்க வர்த்தக துணைச் செயலாளரும் மூத்த வெளியுறவுக் கொள்கை நிபுணருமான (Christopher Padilla) கிறிஸ்டோபர் படில்லா, ட்ரம்பின் செய்கையால், இருநாடுகளுக்குமான உறவில் சரிசெய்ய முடியாத அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.இந்தியா மீது ட்ரம்பின் 50 சதவீத வரி நடவடிக்கையால், டிரம்ப் தனது நாட்டிலேயே தனது செல்வாக்கை இழந்து வருகிறார் என்பதே நிஜம்.
இதற்கிடையே இந்தியாவிற்கு எதிரான போரில் பாகிஸ்தான் மண்ணை கவ்வியது. நம் நாட்டின் படை வீரர்கள் அடித்த அடியில் மண்டியிட்டது பாகிஸ்தான் ராணுவம். எங்களை அடிக்காதீங்க.. நாங்க தாங்க மாட்டோம்.. எங்களை விட்டு விடுங்கள் என்று பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சியது. இதையடுத்து நம் நாடு விட்டு கொடுத்தது. இந்த நிலையில் பாகிஸ்தானின் கதை முடிவுக்கு வரும் நிலை வந்தால் அணுஆயுதங்களை வீசி உலகின் 50 சதவீதத்தை அழித்துவிடுவோம் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் அமெரிக்காவில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்நிலையில் தான் அமெரிக்காவின் பென்டகன் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ‛‛ ஒசாம பின்லேடன் போல் அசீம் முனீர் செயல்பட்டு வருகிறார். இதனால் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் பாகிஸ்தானுக்கு அளிக்கும் சலுகைகளை நிறுத்த வேண்டும். இந்த சலுகைகளை பெற அவரது சித்தாந்தம் ஏற்றதாக இல்லை.
பாகிஸ்தானுக்கு பிரச்சனை வந்தால் உலகின் 50 சதவீத நிலப்பரப்பை அணுஆயுதம் கொண்டு அழிப்போம் என்று அவர் மிரட்டி உள்ளார். இந்த மிரட்டல் என்பது பாகிஸ்தான் ஒரு சட்டப்பூர்வ நாடாக இருப்பதற்கான உரிமையை இழந்து விட்டதற்கான அறிகுறியாகும். இதனால் எதிர்காலத்தில் அணுஆயுத தாக்குதலில் இருந்து உலகை காப்பாற்ற பாகிஸ்தானுக்குள் நுழைந்து அதனை பாதுகாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இல்லாவிட்டால் தாங்க முடியாத அளவுக்கு பெரிய அழிவு வரலாம்'' என்று வார்னிங் செய்துள்ளார்.
மேலும் இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், ‛‛இந்தியாவின் உரிமையை காக்க பிரதமர் மோடி எடுத்துள்ள முடிவு வரவேற்க்கத்தது. இந்தியாவை எந்த காரணம் கொண்டும் உதைக்க முடியாது என்பதை அமெரிக்கா உண்மையிலேயே கற்றுக்கொண்டுள்ளது. இது வரலாற்றில் நினைவுக்கூறப்படும் அத்தியாயமாக இருக்கும்'' என்று கூறியுள்ளார்.