24 special

வங்கதேச அரசியலில் முக்கிய திருப்பம்! இந்தியாவை தொட்டதால் வந்த வினை! மொத்தமாக மாறும் நிலை

PMMODI,SHEIKHHASINA
PMMODI,SHEIKHHASINA

வங்கதேசத்தில் சமீபத்தில் மாணவர் தலைவர் ஹாடி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து நடந்த கலவரத்தில், இந்திய துணை தூதரகம் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த படுகொலைக்கு இந்தியாதான் காரணம் என்றும் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். ஆனால், ஹாடியின் சகோதரர், இந்த படுகொலைக்கு யூனுஸ் தலைமையிலான வங்கதேச அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டியுளளது  பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 


அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வங்கதேசத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இந்த தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. தேர்தலில் இன்குலாப் மான்சா எனும் மாணவர் அமைப்பின் தலைவர், உஸ்மான் ஹாடி போட்டியிட இருந்தார். இவர் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வந்தவர். வங்கதேசத்தில் நடக்கும் குழப்பங்களுக்கு இந்தியாதான் காரணம் என்று கூறியவர்.இப்படி இருக்கையில் கடந்த டிச.12ம் தேதி மர்ம நபர்களால் துப்பாக்கியால்சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.  இந்த மரணம் வங்கதேசத்தில் புதிய கிளர்ச்சியை ஏற்படுத்தியது. ஹாடியை கொன்றது இந்தியாதான் என்றும், கொலையாளிகள் இந்தியாவுக்கு தப்பி சென்றுவிட்டனர் என்றும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இப்படி இருக்கையில்தான், ஹாடி கொலைக்கு இந்தியா காரணம் கிடையாது, யூனுஸ் தலைமையிலான அரசுதான் து இதை ஒரு பிரச்சினையாகப் பயன்படுத்தி தேர்தலை சீர்குலைக்க முயற்சிக்கிறீர்கள். தேர்தல் சூழல் பாதிக்கப்படாத வகையில் கொலையாளிகள் மீது விரைவான விசாரணை நடைபெற வேண்டும். அரசாங்கம் எங்களுக்கு எந்தவித தெளிவான முன்னேற்றத்தையும் கொடுக்கவில்லை. உஸ்மான் ஹாடிக்கு நீதி வழங்கப்படாவிட்டால், நீங்களும் ஒரு நாள் வங்கதேசத்திலிருந்து தப்பிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள்" என்று விமர்சித்திருக்கிறார்.

இந்த விமர்சனங்கள் யூனுஸ் அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஹாடியின் கொலைக்கு பின்னால் சீனா, அமெரிக்காவின் சித்து விளையாட்டுகள் இருக்கலாம் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மாலத்தீவு, இலங்கை போன்ற நாடுகள் சீனாவின் நட்பு நாடாக மாறியிருந்தது ஆனால் அதை இந்தியா பறித்தது. இது சீனாவுக்கு பெரும் இடியாக அமைந்தது, வங்கதேசத்தையும் இந்தியா பக்கம் சென்றுவிடக்கூடாத என்பதால் அங்கு மதம் சார்ந்த பிரச்னையை உருவாக்கியுள்ளது சீனா.   , எக்காரணத்தை கொண்டும் வங்கதேசம் சீனா பின்னால் சென்றுவிடக்கூடாது என, அமெரிக்காவும்  தீவிரமாக வேலை பார்க்கிறது. இப்படி இருக்கையில், வங்கதேசத்தில் இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இதனை வீழ்த்தி மீண்டும் வலதுசாரிகள் ஆட்சியை கைப்பற்றுவார்களா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. மேலும் . , வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதில், தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டார்.இந்து இளைஞர் கொலை: இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையே வங்​கதேச முன்​னாள் பிரதமர் கலீதா ஜியா​வின் மகனும், வங்​கதேச தேசி​ய​வாத கட்​சி​யின்செயல் தலை​வருமான தாரிக் ரஹ்​மான் 17 ஆண்​டு​களுக்கு பிறகு நேற்று ​நா​டு திரும்பி​னார். வங்கதேசத்தில்  தற்​போதைய சூழலில் வங்​கதேச தேசி​யவாத கட்சி மாணவர் சங்​கங்​கள் உரு​வாக்​கிய தேசிய மக்​கள் கட்சி, அடிப்​படை​வாத கட்சியான ஜமாத் - இ – இஸ்​லாமி ஆகியவை தேர்​தல் களத்​தில் உள்​ளன.இந்நிலையில், வங்​கதேச முன்​னாள் பிரதமரும், பிஎன்பி கட்​சி​யின் தலை​வரு​மான கலீதா ஜியா உடல்​நலக் ​குறை​வால் பாதிக்​கப்​பட்டுள்​ளார். இந்த சூழலில் கலீதா ஜியா​வின் மகனும், பிஎன்பி கட்​சி​யின் செயல் தலை​வரு​மான தாரிக் ரஹ்​மான் பிரிட்​டனில் இருந்து நேற்று வங்​கதேச தலைநகர் டாக்கா​வுக்கு திரும்​பி​னார். இது இந்தியாவின் வேலை என அரசியல் நோக்கர்கள் கூறிவருகிறார்கள்