24 special

நொறுக்கப்பட்டஅமெரிக்கா! மீண்டும் அவமானப்பட்ட டிரம்ப்.! அதிரடி காட்டிய மோடி..! வரிசை கட்டும் நாடுகள்!

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

அமெரிக்க அதிபருக்கு தற்போது நேரம் சரியில்லை. இந்தியா மீது வரி போட்டு தன்  தலையில் மண்ணை அள்ளி போட்டுகொண்டுள்ளார் டிரம்ப். அமெரிக்காவில் உள்ளேயே கட்டம் கட்டி கொண்டிருக்கின்றார்கள், வரி போடுவதால் டாலர்கள் கொட்டபோவதாக டிரம்ப் நினைத்து வருகிறார். இந்த வரி விதிப்பினால் 36 டிரில்லியன் கடனில் தத்தளிக்கும் அமெரிக்காவுக்கு ஒரு பிரயோசனமில்லை என  அமெரிக்க பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துளார்கள்.  ரஷ்யா என்பது பெரிய எண்ணெய் சந்தை அதனை உலக அரங்கில் முடக்கினால் எண்ணெய் விலை எகிறும் அது அமெரிக்காவுக்கே பாதிப்பாகும் இதனாலே முந்தைய ஜோ பைடன்  அரசு ரஷ்ய எண்ணெய் உலகத்துக்கே  அவசியம் என இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழிவிட்டது


கச்சா எண்ணெயை ரஸ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கிதூய்மைப்படுத்தி  உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது இந்தியா உலக பொருளாதாரத்தை  இந்தியா சமன்படுத்தியது, இப்போது டிரம்ப்  எடுக்கும் முடிவு இதற்கு தலைகீழானது என சொல்லும் பொருளாதாரவல்லுனர்கள்  மிக முக்கிய விஷயத்தை சுட்டிகாட்டுகின்றார்கள்"டிரம்பரால் உலகிற்கும் அமெரிக்காவுக்கும் எழும் இந்த ஆபத்தை முறியடிக்கும் ஒரே நாடக இந்தியா தான் இருக்கும். இந்திய பிரதமரை நரேந்திரமோடி, சில மிரட்டல்களால் அவரை வழிக்கு கொண்டுவரமுடியுமென டிரம்ப் கருதுகின்றார்

ஆனால் மோடி அசாத்தியமான மனிதர், புட்டீனை விட உறுதியானவர் தன் நாட்டின் நலனை காக்கும் கடும் வைராக்கியம் அவரிடம் உண்டு, டிரம்பரால் அவரை மிரட்டி பணியவைக்க முடியாது" அவருக்கு பின்னால் அனைத்து நாடுகளும் வரிசைகட்டி நிற்கிறது. அமெரிக்காவை எதிர்க்க.மேலும் டாலருக்கு எதிராக பிரிக்ஸ்  நாணயம் உருவாக்கிவிட்டால் அமெரிக்கா மொத்தமாக விழுந்து விடும் என டிரம்ப்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். 

அமெரிக்காவில் இருந்து இந்த செய்திகள் வர தொடங்கிய சில நிமிடங்களுக்குள் பிரதமர் நரேந்திர மோடி ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாகிஸ்தானை மண்டியிடச் செய்ததாகக் கூறிய அவர், ஆப்ரேஷன் சிந்தூர் இந்தியாவின் வலிமையை உலகெங்கும் பறைசாற்றியதாகத் தெரிவித்தார். உள்நாட்டு தொழில்நுட்பங்களும், மேக் இன் இந்தியா திட்டமும் இதற்குக் கைகொடுத்தாக அவர் பெருமிதத்துடன் கூறினார்.இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று தெரிவித்த அவர், எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாத வேகத்தில் இந்தியா வளர்ந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.இதன் மூலம் இந்தியாவை இறந்த பொருளாதாரம் என விமர்சித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோருக்கு மறைமுகமாகப் பதிலடியும் கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இந்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் "இந்தியாவின் வளரும் பொருளாதாரமே சிலரின் ஆத்திரத்துக்கு காரணம், எந்த சக்தியாலும் எங்கள் வளர்ச்சியினை தடுக்க முடியாது, எங்கள் நாட்டுக்கான நலனை நாங்கள் தொடர்ந்து தக்கவைப்போம் எந்த மிரட்டலுக்கும் பணியமாட்டோம்" என சீறி அறிக்கைவிட்டிருக்கின்றார். அதனை தொடர்ந்து மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் கடந்த ஆண்டை விட இந்தியா அதிவேகமாக ஏற்றுமதி செய்யும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரீஷியஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், சிலி, பெரு, நியூசிலாந்து  உள்ளிட்ட பலதரப்பட்ட  நாடுகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தங்களைத் தொடர்வதையும் சுட்டிக்காட்டினார்.இந்தியா யாருக்கும் அடிபணியாது  என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

 உலகம் பிரதமர் மோடியினை மிக சரியாக கணித்திருக்கின்றது நாட்டின் நலனை விட்டுகொடுக்க முடியாது, தேசமும் அதன் நலனும் முக்கியம் என வலுத்து நிற்கு பிரதமர் மோடியினை உலகமே  ஆச்சரியமாக பார்க்கின்றது அதிபர் காமெடியனாக  பார்க்க ஆரம்பித்துள்ளது உலகம். மிரட்டி பார்ப்பார் இல்லை அப்படியே பல்டி அடித்து காலை பிடித்து கொள்வார். அநேகமாக இன்னும் சில வாரங்களில்  பல்டி அடிக்கலாம் அப்படி அடிக்காவிட்டாலும் பரவாயில்லை இனி அமெரிக்கர்கள் முன் அவர் அடிக்கடி பல பல்டிகள் அடிக்க வேண்டியிருக்கும் .