24 special

அமெரிக்காவின் முகத்திரையை கிழித்த இந்தியா.. உற்று நோக்கிய உலக கண்கள் .. டிரம்பை டீலில் விட்ட உலக நாடுகள்! Trump Tariffs on India

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு 50% வரிகளை விதித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் பதற்றம் அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றாமல் உறுதியாக நிற்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு காரணம் உல​கில் அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியா நீடிக்​கும் என்று  அமெரிக்கவை சேர்ந்த மார்​கன் ஸ்டான்​லி​யின் சர்​வ​தேச ஆய்​வறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.தற்போதைய சூழ்நிலையில் உலகில் துடிப்பான, துணிச்சலான பொருளாதாரத்தை கொண்ட நாடு என்றால் அது இந்தியாதான். உலகில் வேகமாக வளர்ந்துவரும் நாடு இந்தியாதான். 


இந்தியா கடந்த 9 ஆண்டுகளில், அமெரிக்கா, பிரிட்டன், சீனா ஆகியவற்றைவிடவும் வேகமாக வளா்ந்து கொண்டிருக்கிறது. அண்மையில் ஜப்பானை முந்திக் கொண்டு உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது. 2027-ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும் என நிபுணா்கள் கணிக்கின்றனா்.

ஒரு காலத்தில் இந்தியா உணவுப் பொருள்களைக்கூட இறக்குமதி செய்து கொண்டிருந்தது. இன்றைக்கு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது. போா்த் தளவாடங்களும், ஆயுதங்களும் இறக்குமதி செய்த காலம் போய் கடந்த 11 ஆண்டுகளில் ஆயுதங்களை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். 2014-15-இல் ஆயுத ஏற்றுமதி ரூ.686 கோடி. 2024-25-இல் ரூ.23,622 கோடி. கேனலிஸ் ஆய்வறிக்கையின்படி, உற்பத்தித் துறையில் 2025-இல் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்டிருக்கிறோம்.  ஏற்றுமதியில் சீனாவைப் பின்னுக்குத்தள்ளி உள்ளோம்.

இந்திய பொருளாதாரம் மிக வேகமான வளா்ச்சியைக் கண்டு வருகிறது. இதன் வருடாந்திர வளா்ச்சி 15.6% என்பது ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சியைவிடவும் 2.4 மடங்கு வேகமாகும்.இந்தியாவின் 65% மக்கள் 35 வயதுக்குக் குறைவானவா்கள். கடந்த பத்தாண்டுகளைவிட  மோடி ஆட்சியில் அந்நிய நேரடி முதலீடுகள் குவிந்துள்ளது இது காங்கிரஸ் ஆட்சியை விட  143% அதிகமாகும்.2014 தொடக்கத்தில் இந்தியாவில் 89 நாடுகள் முதலீடு செய்தன. இது 2025-இல் 112 ஆக உயா்ந்துள்ளது. தனி நபா் வருமானம்  இரு மடங்கு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வருமானம் இரு மடங்கு பெருகியுள்ளது என்பதுடன் இந்திய மக்கள்தொகையில் 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா் என்பதே முக்கிய செய்தியாகும்.

வலுவான அடித்தளங்கள், கட்டமைப்புகள், பிரம்மாண்ட உள்நாட்டுச் சந்தை, அதிக இளைஞா்களைக் கொண்ட மக்கள்தொகை மற்றும் அதிகரிக்கும் வாங்கும் திறன் ஆகியவை உலகின் மிக லாபகரமான முதலீட்டு நாடாகவும், அசைக்க முடியாத வலுவான பொருளாதார சக்தியாகவும் இந்தியாவை உருமாற்றியுள்ளது.நமது பொருளாதார வளா்ச்சிக்கு இந்த இளைஞா் பட்டாளமே அடிநாதம். மேம்பட்ட உற்பத்தி, கண்டுபிடிப்பு, நுகா்வு மூலம் பொருளாதார வளா்ச்சியை எட்டலாம். 3-ஆவது பெரிய பொருளாதார நாடு என்னும் இலக்கு நிச்சயம் சாத்தியமே.

இதையெல்லாம் பொறுத்து கொள்ள முடியாத அமெரிக்கா  நம் மீது வரியை விதித்துள்ளார். டொனால்ட் டிரம்பின் இந்த வரி விதிப்பின் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அமெரிக்காவின் கொட்டத்தை அடக்க  பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார். அதன்பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகிறார். இப்போது பிரேசில் அதிபர் லுலாவும் இந்தியா வருகிறார்.இந்த மூன்று நாடுகளும் அமெரிக்க டாலருக்கு மாற்று கரன்சியை பிரிக்ஸ் மூலமாக கொண்டு வர வேண்டும் என்று நினைக்கும் நாடுகள்.

தற்போது டிரம்பின் வரி விதிப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பு தலைவர்கள் இடையேயான பந்தத்தை அதிகரிக்கும் வகையில் உள்ளது. உலகில் பெரும்பான்மையான பொருள் வாங்குவதற்கும், விற்பதற்கும் அமெரிக்க டாலர் மதிப்பிலேயே விலை நிர்ணயிக்கப்பட்டு, டாலரை பயன்படுத்தியே வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த டாலர் மதிப்பிழப்பை ஆதரிக்கும் நாடுகளில் சீனாவும், ரஷ்யாவும் முன்னிலையில் உள்ளன தற்போது இந்தியாவும் இணைந்துள்ளதால் இந்த டாலர் மதிப்பீட்டை முடுக்கும் வகையில் அமெரிக்காவின் நடவடிக்கை அமைந்துள்ளது என உலக பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.