24 special

இதுதான் ட்விஸ்ட்... ஒன்றுசேரும் இந்தியா,ரஷ்யா சீனா.... டிரம்ப்க்கு உரைக்கும்படி சொன்ன உலக நாடுகள்..

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

இந்தியா அமெரிக்கா பிரச்சனை உலக பிரச்சனையாக மாறி வருகிறது. தினமும் உலக தலைப்பு செய்திகளின் இந்தியாவின் பெயர் அடிபட தொடங்கியுள்ளது. இந்தியா வல்லரசு நாடாகவே மாறிவிட்டது என உலக நாடுகள் இந்தியாவின் பின் வரிசை கட்டி நிற்க ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கிடையில் அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அமெரிக்க  அதிபர் டிரம்ப்க்கு எதிர்ப்பு குரல்கள் எழதொடங்கிவிட்டார்கள். 


ஆயுத வியாபாரத்தை மட்டுமே நம்பி இருக்கும் அமெரிக்கா, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஆயுத கொள்முதல் செய்வதை தாங்க முடியவில்லை. இந்தியா தானாக ஆயுதம் தயாரித்து விற்பதும் பிடிக்கவில்லை. அதனால்தான் இந்த வரி விதிப்பு!தானே உலகின் வலிமையான சக்தி; தான் சொல்வதை தான் உலக நாடுகள் கேட்க வேண்டும் என்ற ஆணவத்தில் ஆடுகிறார் டிரம்ப்.

ஆனால் டிரம்ப் முகத்தில் ஓங்கி ஓங்கி குத்தி கொண்டிருக்கின்றது கனடா, இன்னொரு பக்கம் மெக்ஸிகோவும் கடும் ஆத்திரத்தில் இருக்கின்றது , மெக்ஸிகோ எல்லையில் ராணுவத்தை நிறுத்துவேன் என்ற டிரம்பரின் மிரட்டலை அது புறந்தள்ளி எதிர்த்து நிற்கின்றது. ஜப்பான் இனி அமெரிக்காவினை முழுக்க நம்பமுடியாது என தனக்கான பாதையில் கவனம் செலுத்துகின்றது, ஐரோப்பிய நாடுகள் பல அமெரிக்க அடாவடிகளை எதிர்க்கின்றன‌

இன்னொரு பக்கம் அமெரிக்காவுக்கு சொந்த நாட்டிலே எதிர்ப்பு வலுக்கின்றது, இறக்குமதி வரி என்பது மக்கள் தலையில் விழும் விலைவாசி என்பதால் அமெரிக்க விலைவாசி எகிறி மக்கள் தெருவுக்கு போராட வந்துள்ளார்கள். அமெரிக்க செனட்டர்களில் தங்கள் அதிபரை விமர்சிப்பது நாட்டுக்கு இழுக்கு என மவுனம் காக்கும் பிரிவு உண்டு, சிலர் இதனை விட நாட்டுக்கு இழுக்கு அவமானம் வரமுடியாது என சிலர் கடுமையாக அமெரிக்க அதிபரை  சாடுகின்றார்கள்டிரம்ப்பின் திட்டம் அமெரிக்க கடன்களை அடைக்காது மாறாக அமெரிக்க பொருளாதாரத்தை சிதைத்துவிடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியா, சீனா, என எல்லா தேச மக்களும் அமெரிக்காவை வெறுக்கின்றார்கள், இந்த வெறுப்பு அராபியா ஆப்ரிக்கா தென் அமெரிக்கா என எல்லா இடமும் பரவுகின்றது. இன்றைய தேதியில் உலகில் அதிகம் வெறுக்கபடும் தலைவர் டிரம்ப் தான், இது இன்னும் கூடி கொண்டு செல்லுமே அன்றி குறையாது. டிரம்பின் நடவடிக்கைகள் எல்லாம் நிலைகுலைந்து விடும் என்பது தான். பொருளாதாரத்தை உயர்த்துவற்காக என்ற அவரின் வரிவிதிப்பு முற்றிலும் முட்டாள்தனமானது.

இந்த நிலையில் அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேல் இந்தியா அமெரிக்கா வர்த்தக போர் குறித்து இந்தியா எங்களுக்கு மிக சிறந்த நட்புநாடு , எந்த சூழலிலும் அது சிக்கலுக்குள்ளாவதை நாங்கள் விடமாட்டோம் உலகின் அமைதிக்கும் நிலைதன்மைக்கும் வலுவான இந்தியா அவசியம் இந்தியாவுக்கு ஏற்படும் இடர்கள் உலக அமைதிக்கான அபாயம் என்பதால் அதனை அனுமதிக்கமாட்டோம், இந்தியாவினை பலபடுத்த எல்லா காரியங்களையும் செய்வோம்.டிரம்பை சமாதானபடுத்த சில ஆலோசனைகளை நான் இந்திய பிரதமருக்கு வழங்குவேன், விரைவில் நான் இந்தியா சென்று என் நண்பர் மோடியினை சந்திப்பேன், இந்தியா எந்த சூழலையும் கடக்க நாங்கள் துணையாய் இருப்போம் இந்தியாவின்  நலன்களை காக்கும் கடப்பாடு எமக்கு உண்டு என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளது அமெரிக்காவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

அதே போல் ரஷ்யா மற்றும் சீனாவிடம் இருந்து இந்தியாவை நகர்த்தும் அமெரிக்காவின் நடவடிக்கையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது,'' என அந்நாட்டு முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறியுள்ளார். இவர் டிரம்பின் உற்ற நண்பர். மேலும் உலக நாடுகளுடன் வர்த்தக போரை ஏற்படுத்தியதன் மூலம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறார் என்று அமெரிக்காவின் பிரபல பொருளதார நிபுணர் ஸ்டீவ் வான்கே எச்சரித்துள்ளார். இதனால் இந்தியா சீனா ரஷியா உள்ளிட்ட நாடுகள் ஒன்றுசேரும். அமெரிக்கவுக்கு தான் ஆபத்து என உலக அரசியல் வல்லுநர்கள் கூறியுள்ளார்கள்.