Cinema

பிரபல இயக்குனர் வீட்டில் கொள்ளை... வருத்தத்துடன் கடிதம் எழுதி மன்னிப்பு கேட்ட கொள்ளையர்கள்..!

Director Manikandan
Director Manikandan

சினிமாவில் தொடர்ந்து தரமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வருபவர் மணிகண்டன். இவரது படங்கள் எல்லாம் சமூகத்திற்கு ஒரு கருக்களை பதிவு செய்யும் விதமாக எடுக்க கூடிய இவர் மதுரை மாவட்டத்தில் தனது அலுவலகத்தை வைத்திருக்கிறார். புதிய படம் இயக்குவதற்காக சென்னையில் தனது குடும்பத்தாருடன் இணைந்து வசித்து வருகிறார். இந்நிலையில் மதுரை உசிலம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர்கள் கடந்த வாரம் கொள்ளையடித்து சென்றனர். இது சினிமா வட்டாரங்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.


காக்கா மூட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மணிகண்டன், அதன் பிறகு கடைசி விவசாயி படம் இயக்கியிருந்தார். அந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. குறிப்பாக, தேசிய விருது வென்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் இவர். இந்நிலையில் மணிகண்டன் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த கொள்ளையில் அவரிடத்து வீட்டில் இருந்து 1லட்சம் பணம் மட்டும் அவரது தேசிய விருதையும் எடுத்து சென்றதாக தெரியவந்துள்ளது. கடைசி விவசாயி திரைப்படத்திற்காக, மத்திய அரசு வழங்கிய தேசிய விருதுக்கான இரு வெள்ளி பதக்கங்கள் திருடி சென்றதால் மிகவும் வருத்தத்துடன் இருந்தார் மணிகண்டன்.

சென்னையில் உள்ள இயக்குனர் மணிகண்டன் நேரில் வந்து ஆய்வு செய்த பின்னரே மேலும் பணம், நகை ஏதும் கொள்ள போனதா என தெரிய வரும் என கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக இணையத்தில் வைரலானது. மணிகண்டன் காக்கா முட்டை படத்தின் வெற்றியை தொடர்ந்து,விதார்த்த் நடிப்பில் 'குற்றமே தண்டனை' படத்தினை இயக்கினார். அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் 'ஆண்டவன் கட்டளை' படத்தினை இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே விமர்சனரீதியாக பெரும் வரவேற்பினை பெற்றது. இதனையடுத்து 'கடைசி விவசாயி' படத்தை இயக்கினார். விவசாயி நல்லாண்டி என்பவரை மையமாக வைத்து உருவான இப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றம் ஒன்றில் நடித்திருந்தார்.

இந்நிலையில் அவரது வீட்டின் வெளியே அந்த மர்ம நபர்கள் இரண்டு வெள்ளி பதக்கங்கள் தொங்கவிட்டு அத்துடன் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதாவது, 'அய்யா எங்களை மன்னித்து விடுங்கள்... உங்கள் உழைப்பு உங்களுக்கு என எழுதியுள்ளனர். இந்த மன்னிப்பு கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் அந்த மர்ம கும்பலுக்கு பாராட்டுகளை தெரிவித்து, திருடர்களில் இவர் நல்ல திருடன் என கமெண்டை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் இணையத்தில் அந்த புகைப்படத்தை பதிவிட்டு இந்த திருடனுங்க கிட்ட இருக்குற நேர்மையில துளி கூட உங்கக் கிட்ட இல்ல என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.