24 special

தளபதி வழியில் புரட்சி தளபதி..? முற்றுப்புள்ளி வைத்த விஷால்..!

Vishal
Vishal

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வரும் வரிசையில் சமீபத்தில் நடிகர் விஜய்யும் இணைந்து தனது அரசியல் கட்சியின் பெயரையும் அறிவித்துவிட்டார். தற்போது படத்தில் கவனம் செலுத்தி வரும் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் களம் இறங்குவதாக கூறி அதற்கான பணிகளை நிர்வாகிகள் களத்தில் செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் நடிகர் விஷாலும் வரும் 2026ல் தானும் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.


விஜயை பின் பற்றி தான் விஷால் அரசியலுக்கு வருகிறார் என பலரும் விமர்சனம் செய்து வந்த நிலையில், அதற்கு விளக்கம் கொடுத்து வருகிறார் விஷால். சினிமாவில் புரட்சி தளபதி பட்டத்திற்கு சொந்தக்காரர் விஷால் ஆக்சன் படத்தில் கவனம் செலுத்தி வரும் விஷால் தற்போது அரசியலும் கவனம் செலுத்தியுள்ளார். வஹஸலின் ஒவ்வொரு நடவடிக்கையும் தளபதி விஜயை போன்று உள்ளதாக பேச்சுக்கள் தொடங்கியுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்தினம் படத்தில் நடித்து முடித்த விஷால் அந்த படத்திற்கான புரமோஷனில் கலந்து கொண்டு வருகிறார்.

ஒரு பக்கம் சினிமாவும் இன்னொரு பக்கம் அரசியல் குறித்து பேச தொடங்கியுள்ள விஷால் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் அன்று சைக்கிளில் சென்று வாக்களித்தது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இது தொடர்பாக பலரும் விஜயை பின் பற்றுகிறார் விஷால் அவருடன் கூட்டணி ஏற்படுத்துவார் என கூறிய நிலையில், விஷாலிடம் இது குறித்த கேள்விக்கு பதிலளித்தது, நடிகர் விஜய்யை பொறுத்தவரை அவரது தன்னம்பிக்கை பிடிக்கும். சைக்கிளில் போனதற்கு காரணம், விஜய்யின் இன்ஸ்பிரேஷன் என சொல்ல முடியாது. என்னிடம் வண்டியில்லை. அப்பா, அம்மாவிடம் வண்டி உள்ளது. என்னுடைய வண்டியை விற்றுவிட்டேன்.

இன்றைக்கு இருக்கும் ரோடு கண்டிஷனைப் பார்த்தால் சஸ்பென்ஷனை ஆண்டுக்கு 3 முறையெல்லாம் மாற்ற முடியாது. என்னிடம் காசில்லை. அதனால், சைக்கிள் வாங்கினால் ட்ராஃபிக் இல்லாமல் சீக்கிரம் சென்றுவிடலாம் என்று சென்றேன் என்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால் நான் அரசியலுக்கு வருவது உறுதி மக்களுக்கு நல்லது செய்வேன் ஆனால் மக்களுக்கு நல்லது செய்து என்னை வரவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மக்களுக்கு நீங்கள் நல்லது செய்திருந்தால் நிச்சயம் நான் அரசியலை எதிர்பார்த்திருக்க மாட்டேன் நடிப்பில் எனது கவனத்தை செலுத்தியிருப்பேன் என்று கூறினார்.

தொடர்ந்து, நீங்கள் திமுகவாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும் நீங்கள் செய்ய வேண்டியது மக்கள் நலப்பணிகள். மக்களுக்கு எதாவது என்றால் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். எம்எல்ஏ, எம்.பிக்கு எதாவது என்றால் அவர்கள் தனியார் மருத்துவமனையை நாடுவார்களாம். என்ன கொடுமை இது?. மக்களுக்கு நிறைய மாற்றம் தேவை, நிறைய பிரச்சினைகள் இங்கே உண்டு மாற்றம் ஏற்படுத்துவோம் என கூறினார். விஷால் அரசியலுக்கு வந்ததும் விஜயுடன் கூட்டணி வைப்பாரா என்பது சந்தேகம் தான் ஆனால், பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. ஏற்கெனவே ஒருமுறை ஐபிஎஸ் தனக்கு பிடிக்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.