24 special

சமூக வலைதளத்தில் டிரெண்ட் ஆகி வரும் சரண்யா ஜெயக்குமார்! யார் இவர்..

SARANYA JAYAKUMAR
SARANYA JAYAKUMAR

இன்றைய உலகம் சமூக வலைத்தளத்திற்குட்பட்ட உலகமாக பார்க்கப்படுகிறது. இதில் எந்த தவறும் இல்லை என்பதும் ஒரு பக்க கருத்தாகவும் சமூக வலைத்தளம் என்றாலே மிகவும் தவறான செயல்கள்தான் என்று மறு பக்கம் பேசப்படுகிறது. இருப்பினும் இந்த சமூக வலைத்தளத்தின் மூலம் பல நன்மையான கருத்துக்களையும் இன்றைய காலத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் சந்திக்க கூடிய பிரச்சனைகள் குறித்தும் மொபைல் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து  இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய சில கருத்துக்களை குறித்தும்  பேசி வீடியோக்கள் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் சமூக கருத்துக்கள் பலவற்றை பேசி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் சிலர் பெற்று வருகிறார்கள் அதிலும் குறிப்பாக பெண்களை எடுத்துக் கொண்டால் மருத்துவம் சார்ந்த, பெண்கள் சார்ந்த, இளைஞர்கள் சார்ந்த பல நல்ல கருத்துக்களையும் அவர்கள் தவிர்க்க வேண்டிய பல முக்கிய கருத்துகளையும் பேசி இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் பெற்றோர்களுக்கும் கூட நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.


அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிற ஒரு பெண்மணிதான் டாக்டர் சரண்யா ஜெயக்குமார். சமீப காலமாகவே இவர் பேசும் பல வீடியோக்கள் மற்றும் கலந்து கொள்ளும் பல நிகழ்ச்சிகள் பேட்டிகள் அனைத்துமே சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து பலரால் பகிரப்பட்டும் வருகிறது. இவர் டாக்டர் மட்டுமின்றி தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக உள்ளார். இவர் பேசும் பல வீடியோக்கள் மற்றும் கொடுக்கும் பல தகவல்கள் இக்காலத்தில் உள்ள இளைஞர்களை சமாளிக்க  பல யுக்திகளை அவர் கொடுத்து வருகிறார். அதனாலே இவரது பேட்டி என்றால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் இவரை பெரும்பாலான கல்லூரி நிறுவனங்கள் வணிகங்கள் வர்த்தகங்கள் என பல தரப்பில் இருந்து பல நிகழ்ச்சிகளுக்கு விருந்தினராக அழைத்து சிறப்பு பேச்சையும் வழங்க வைக்கிறார்கள்.

இவரது பேச்சை பல பெற்றோர்கள் கூர்ந்து கவனிப்பது மட்டுமின்றி பல இளைஞர்களும் பெண்களும் கூட இவரின் பேச்சைக் கேட்க மிகவும் ஆர்வமாகவே உள்ளார்கள். அந்த வகையில், ஒரு தனியார் youtube சேனல் ஒன்றுக்கு இவர் அளித்த பேட்டி பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. அதில் இக்காலத்தில் உள்ள இளைஞர்கள் என்ன மாதிரியான ஒரு கட்டமைப்பில் வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில் என்ன மாதிரியான சூழ்நிலைகள் வாழ்கிறார்கள் என்பது பற்றியும் மொபைல் போனில் இளைஞர்கள் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் அடிமையாகி உள்ளதன் விளைவு என்ன எப்படி அடிமையாக்கப்படுகிறார்கள் என்பது குறித்த முழு தகவலையும் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளையும் இவர் கூறியுள்ளார். அதாவது, சமூக வலைதளத்தில் பல கருத்துக்கள் பெறப்படுகிறது என்று வைத்துக் கொண்டாலும் கூட சமூக வலைதளத்தாலே நமது வாழ்க்கை தரம் மிகவும் பின்தங்கி இருப்பதை நம்மை போலியாக நம்ப வைக்கப்படுகிறதாக அவர் கூறியுள்ளார்.

ஏனென்றால் விளம்பரத்திற்காகவும் அவர்களை வைத்திருப்பதை போன்று நானும் வைத்திருக்க வேண்டும் என்ற ஒரு ஆடம்பர ஆசைக்காகவும் இதை நான் மற்றவர்களுக்கு காட்ட வேண்டும் அதன் மூலம் எனக்கு பல லைக் மற்றும் பாலவர்ஸ் வருவார்கள் என்பதற்காக பல கடன்களையும் வாங்கி அந்த பொருளை வாங்குகிறார்கள் ஆனால் உண்மையில் அதனால் அவர்கள் அந்த கடனை கட்ட முடியாமல் திண்டாடும் நிலைமைதான் தற்போது நடந்து கொண்டு வருகிறது என கூறியுள்ளார்.மேலும், படிப்பது முழுவதும் மறந்து விடுகிறதா அல்லது படிப்பது  எதுவும் ஞாபகத்தில் நிற்கவில்லை என்றால் அதற்கு முக்கிய காரணம் மொபைல் போன் பயன்பாடு தான் அதன் மூலமாகவே தற்போது குழந்தைகள் இளைஞர்களின் ஞாபக சக்தி திறன் குறைந்து கொண்டே வருகிறது என்றும் கூறியுள்ளார். இப்படி இவர் சமூகத்திற்கு வேண்டிய பல கருத்துக்களையும் அதிக ஆதிக்கத்தை பெற்றிருக்கும் மொபைல் போனின் தாக்கத்தை குறித்தும் தெளிவாக விளக்கமாக கூறியுள்ளது பலரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. அதனால் இவரது வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி கொண்டு வருகிறது.