24 special

போதை கடத்தல் விவகாரத்தில் அடுத்த சிக்கப்போகும் வாரிசு தலைவர்...யார் அவர்!!

JAFFER SADIQ, UDHAYANITHI
JAFFER SADIQ, UDHAYANITHI

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு சம்பவமாக பார்க்கப்படுவது போதைப்பொருள் கடத்தல் விவகாரம். இந்த விவகாரத்தில் முக்கிய புள்ளியாக தேடப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் தமிழகத்தில் ஆளும்  அதிகாரத்தில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அயலக அணி செயலாளராகவும் இருந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகிருடன் மிகுந்த நெருக்கம் கொண்டவராக இவர் இருந்துள்ளார் என்ற செய்தியும் தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் டெல்லியில் கைது செய்யப்பட்ட ஒரு போதை கும்பலின் தலைவனாக ஜாபர் சாதிக் என்பவர் தேடப்பட்டு வந்த பொழுது அவர் திமுகவின் ஒரு அதிகாரியாக இருந்துள்ளார் என்பதும் செய்திகளில் பரபரப்பாக வெளியாக உடனடியாக திராவிட முன்னேற்ற கழகம் ஜாபர் சாதிக்கை அவசர அவசரமாக தனது கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கியது. மேலும் ஜாபர் சாதி கைது செய்யப்பட்ட பிறகு தனக்கு தெரிந்த உண்மைகள் அனைத்தையும் கூறுவதாக வாக்குமூலம் அளிக்க ஒப்புதல் தெரிவித்தார்.


இவர் ஒப்புதல் தெரிவித்த அடுத்த சில தினங்களிலேயே ஜாபர் சாதிக்கு முக்கிய வலது கரையாக இருந்து வந்த இப்படிக்கு சதா கைது செய்யப்பட்டதும் இவர்களின் முக்கிய குடோனாக செயல்பட்டு வந்த ஒரு குடோன் இடத்தை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்து அங்கு சோதனை மேற்கொண்டு பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றதும் முக்கிய செய்திகளாக பரபரப்பாக வெளியானது. அதுமட்டுமின்றி ஜாபர் சாதிக் திமுகவின் ஒரு முக்கிய பொறுப்பாளராக இருந்தது மட்டுமின்றி தமிழ் சினிமாவின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார் ஏற்கனவே திமுகவிற்கும் சினிமாவிற்கும் அதிக நெருக்கம் இருப்பதாக ஒரு பேச்சு அரசியல் வட்டாரம் முழுவதும் உலா வருவது அனைவரும் அறிந்த ஒன்று!  அந்த வகையில் ஜாபர் சாதிக்கும் தயாரிப்பாளராக இருப்பதும் திமுகவின் முக்கிய நிர்வாகியாக இருப்பதுமே ஒரு முக்கிய மற்றும் அதிக சம்பந்தம் கொண்ட சந்தேகத்தை அதிகாரிகள் மத்தியிலும் அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் எழுந்தது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜாபருடன் அதிக நெருக்கம் காட்டி வந்த இயக்குனர் அமீர் தனக்கும் ஜாஃபருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி வந்த நிலையில் ஜாபர் குறித்து விவகாரத்தில் அமீருடன் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என டெல்லி போலீசார் அமீருக்கு சம்மன் நோட்டீசை அனுப்பி அமீருடன் ஒரு நாள் முழுவதும் விசாரணை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் டெல்லி போலீஸ்சின் விசாரணை வளையத்திற்குள் வருவார்கள் என்று கூறப்பட்டு வந்தது ஏனென்றால் ஜாஃபர் சாதிக் போலி பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு சென்ற பொழுது அவருடன் முக்கிய அரசியல் பிரபலங்கள் சென்று வந்ததும் ஜாஃபரின் வீட்டில் உள்ள அலுவலகத்திற்கு சினிமா பிரபலங்கள் அடிக்கடி வந்து சென்றதையும் மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டறிந்தது அறிவித்தது மக்களை மேலும் அச்சத்திற்கு உள்ளாக்கியது. 

ஏனென்றால் தமிழக அரசாக தற்போது ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள திமுகவின் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்த ஜாபர் சாதிக் போதை கடத்தல் கும்பலின் தலைவன் என்பதும் அவரைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் இதில் சிக்க வாய்ப்புள்ளதாக மத்திய போதை தடுப்பு பிரிவு போலீஸ் விசாரணையில் கண்டறிந்து அறிவித்தது, அதனை தொடர்ந்து அமலாக்கத்துறை ஜாபர் சாதி தொடர்புடைய இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது பரபரப்பு மற்றொரு திருப்பம் இந்த விவகாரத்தில் நிகழ்ந்துள்ளது. அதாவது இந்த விவகாரத்தில் ஜாபர் சாதிக் கொடுத்துள்ள வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டும் அடுத்து கிடைத்துள்ள பல உண்மை தகவல்களை அடிப்படையாகக் கொண்டும் முக்கிய அரசியல் புள்ளியாக இருக்கும் வாரிசு தலைவரை அமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் யார் அந்த வாரிசு தலைவர் என்ற ஒரு கேள்வியும் ஒருவேளை அவராக இருக்குமோ ஒருவேளை இவராக இருக்குமோ என்ற பலவகையிலான சந்தேகங்களும் தற்போது சமூக வலைதளங்களில் எழுந்து வருவது அரசியல் வட்டாரம் முழுவதையும் தேர்தலுக்குப் பிறகும் அனல் பறக்க வைத்துள்ளது.