24 special

பெருகிவரும் டிஜிட்டல் முறை திருட்டு!! மக்களே உஷார்!!

DATA THEFT
DATA THEFT

இன்று உள்ள உலகத்தில் உழைத்து வாழும் மக்களை விட ஈசியாக அடுத்தவர்களின் பணத்தை திருடி அதன் மூலம் சொகுசாக வாழும் பலர் ஒரு வகைக் கொண்டே உள்ளனர். முதலில் எல்லாம் வீட்டுக்கு சென்று கூட்டினை உடைத்து வீட்டில் உள்ள பணத்தையும் நகைகளையும் திருடி செய்வார்கள். இன்றளவும் கூட இது போன்ற திருட்டுக்கள் நடந்து கொண்டு தான் உள்ளது. ஆனாலும் இன்று திருட்டிற்கு ஒரு புதிய வழிமுறைகளும் உருவாகிக் கொண்டுதான் உள்ளது. இந்த விதத்தில் தான் திருட்டு நடைபெறுகிறது என்று சொல்லிவிட முடியாத அளவிற்கு பல வழிகளை உருவாக்கி அதனை வெற்றிகரமாகவும் செய்து தங்களின் திருட்டுக்களை செய்தி வருகின்றனர். மேலும் இவர்கள் திருடர்கள் தான் என்று கண்டறிய முடியாத வகையிலும் தற்போது உள்ள திருடர்களின் முகம் மற்றும் அடையாளங்கள் மாறிவிட்டது. நன்றாக ஆஃபீஸர் போல இருந்து மற்றவர்களை நம்ப வைத்து அவர்களிடம் உள்ள பணத்தை திருடுவது தற்போது உள்ள ட்ரெண்டாக மாறிவிட்டது. முதலில் சாலையில் நடந்த செல்பவர்களிடமும் வீட்டில் நகைகள், பணங்கள் அதிகமாக வைத்திருப்பவர்களிடமும் நடந்து கொண்டிருந்த திருட்டு தற்போது டிஜிட்டல் மூலமாகவும் நடைபெற ஆரம்பித்துவிட்டது.


இந்த டிஜிட்டல் முறை திருட்டு என்பது தல டெக்னாலஜிகளை உள்ளடக்கி மொபைல்கள் மூலம் அவர்களின் பணத்தினை திருடும் ஒரு ஈஸியான டெக்னாலஜியாகவே மாறிவிட்டது. சில அப்பாவி மக்களுக்கு இது போன்ற டிஜிட்டல் முறையில் நடக்கும் திருட்டுக்களை பற்றி அறியாமல் இருப்பதினால் அவர்களே சுலபமாக ஏமாற்றி அவர்களின் வங்கி கணக்கு எங்களையும், otp மற்றும் பாஸ்வேர்ட் போன்ற மற்ற செய்திகளையும் அவர்களிடம் இருந்து ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வாங்கிவிட்டு அதனை பயன்படுத்தி அவர்களின் வங்கி கணக்குகளில் உள்ள பணத்தினை திருடி செய்கின்றனர். இது போன்ற பல திருட்டுக்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதினால் அனைத்து மக்களுக்கும் இது குறித்த எச்சரிக்கைகள்  கொடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது அதிக அளவில் மக்கள் தங்களின் ஓடிபிக்களையும் வங்கி கணக்கு எங்களையும் மற்றும் பாஸ்வேர்டுகளையும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு சற்று யோசனை செய்கின்றனர் மற்றும் இது போன்ற திருட்டுக்கள் கொஞ்சம் குறைவாகவே உள்ளது. தற்போது இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு திருட்டு செய்யும் முறை தற்போது உருவாகியுள்ளது!! அதுதான் ஜிபி போன் பே மூலம் திருடும் முறை!! இது எங்கு எப்போது நடந்தது என்று விரிவாக காணலாம்!!!

வீடு வாடகைக்கு விடப்படும் என்று வெப்சைட் ஒன்றில் விளம்பரம் செய்துள்ளனர். அதனை பார்த்துவிட்டு  கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி  சிவ சங்கர திவாரி என்ற ஒருவர் இந்திய விமானப்படையில் வேலை செய்வதாகவும், தற்போது சென்னையில் உள்ள தாம்பரத்தில் வேலைக்காக மாறி வருவதாகவும் உடனடியாக வீடு தேவைப்படுவதாகவும் கூறியிருக்கிறார். மேலும் நேரில் வந்து வீட்டினை பார்த்து செல்வதற்கு இயலாது என்றும் வீட்டின் சொந்தக்காரரான முதியவருக்கு தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. மேலும் வீடு வாடகைக்கு கேட்ட நபர் அவருடைய ஆவணங்களையும் அனுப்பி அதன் பின் அந்த முதியவருக்கு  அட்வான்ஸ் ஆக பணம் அனுப்புவதாகவும் அதற்காக ஜி பே அக்கவுண்ட் நம்பர் கேட்டு அந்த முதியவரும் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த முதியவரின் வங்கி கணக்கிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் திருடப்பட்டதாகவும், இதன் தொடர்ச்சியாக அந்த வீடு கேட்ட நபருக்கு தொடர்ந்து அலைபேசியில் அழைக்கும் பொழுது அவர் போன் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது போன்று வயதானவர்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் திருட்டு கும்பல்களை பிடிக்கும் பாரு சோசியல் மீடியாக்கள் மூலம் பதிவினை செய்து வந்துள்ளனர் வீட்டினை வாடகைக்கு விட்டவர்கள்!! தற்போது இது குறித்த செய்திகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது!!