24 special

காங்கிரசை நம்பி ஏமாந்த உலக நாயகன்..? இது நம்ம லிஸ்ட்-ல இல்லையே..!

Rahul, Kamal , Stalin
Rahul, Kamal , Stalin

காங்கிரஸ் கட்சியினர் மீது கமல்ஹாசன் கடுப்பில் இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்நிலையில், கமல்ஹாசன் காங்கிரசை வெறுத்து வந்ததற்கான காரணம் குறித்த சில தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் மூலம் கமல் ராகுல் மீதும் காங்கிரஸ் தலைமை மீதும் உள்ள கோபம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.


கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனித்துக் களம் கண்ட கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சமக, ஐஜேகே உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதையடுத்து நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக- காங்கிரஸ் உடன் கூட்டணி மேற்கொண்ட கமல், ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து பிரசாரம் மேற்கொண்டார்.சமீபமாக காங்கிரஸ் கட்சிக்கு தோல் கொடுத்து வந்த கமல் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையிலும் பங்கேற்றிருந்தார். இப்படி காங்கிரஸ் கட்சியிடம் நெருக்கமாக இருந்து வந்தார் கமல்.

இந்த சூழ்நிலையில் தற்போது கமல் நிலைமை பார்த்தால் பருத்தி மூட்டை பேசாமல் குடோனில் இருக்கலாம் என்ற நகைச்சுவை போன்று உள்ளது. தமிழக சினிமாவில் நம்பர் ஒன் ஸ்டாராகவும் அரசியல் தலைவராகவும் இருந்த கமல்ஹாசன் தொலைக்காட்சி தொகுப்பாளராக ராகுல்காந்தியை பேட்டி எல்லாம் எடுத்து வந்தார். கடந்த ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வீதி வீதியாக காங்கிரஸ் வேட்பாளரான இளங்கோவனுக்கு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போதே, மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக அவருக்கு ஒரு தொகுதி கொடுக்கப்படலாம் என சொல்லப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல் ஒதுக்கியதால் கோவை தொகுதி காங்கிரஸ் சார்பாக கமல் போட்டியிடலாம் என கூறப்பட்ட நிலையில், திமுகவிடமிருந்து காங்கிரஸ் 10 தொகுதிகளை கேட்பதற்க்கே போதும் போதும் என்ற நிலைமை ஏற்பட்டது. அதிலும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கஷ்டப்பட்டது. இதனால் கமலுக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. காங்கிரஸ் சீட் ஒதுக்கத்தால் காங்கிரெஸ்க் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்த கமல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யாமல் போனாராம்.

ஈரோடு, சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல் அருகில் உள்ள கரூர் தொகுதி பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை. அங்கு உதயநிதி ஸ்டாலின் தான் ஜோதிமணியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இதேபோல், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கு பிரசாரம் மேற்கொண்ட நிலையில் அருகில் உள்ள மயிலாடுதுறை பக்கம் செல்லவில்லை. அதேபோல், சென்னையில் தென் சென்னை, ஸ்ரீ பெரம்பத்தூரில் டி ஆர் பாலுவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட நிலையில், அருகில் உள்ள திருவள்ளுர் தொகுதி பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை. இதை விட கோவையில் காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி பங்கேற்ற பொதுகூட்டத்தில் திமுக உடன் உள்ள கூட்டணி கட்சி தலைவர் பாங்கற்றபோது அதில் கமல் பங்கேற்காமல் போனார்.

அதுபோலவே, கமல் மேற்கொண்ட பிரசாரத்தில் ராகுல் காந்தி குறித்து எந்த வித பேச்சும் எடுக்காமல் சைலண்டாக முடித்து விட்டார். காங்கிரஸ் நிச்சயம் தனக்கு ஒரு சீட் ஒதுக்கும் என கடந்த இரண்டு ஆண்டுகளாக நினைத்த கமலுக்கு ராகுல் காந்தி பல்பு கொடுத்ததை ஏற்று கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்துள்ளார் கமல்ஹாசன். இதனால் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்விக்கு அது உங்கள் விருப்பம் என தெரிவித்துள்ளாராம். மேலும், காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுவது கமல் பிரசாரம் செய்யவில்லை என்றால் எங்களுக்கு எந்த வித பிரச்சனையும் இல்லை என்று கூறுகின்றனர்.