24 special

கஞ்சா தலைநகரமாகும் தமிழ்நாடு... வெளியான அடுத்த வீடியோ..!

Ganja
Ganja

தமிழகத்தில் தலைவிரித்தாடும் கஞ்சா நடமாட்டத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை தேவை என பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் ஆளும் கட்சியான முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தது வருகின்றனர். சமீபமாக போதை பொருள் மூலம் நடக்கும் பல பிரச்சனைகள் வெளியாகி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.


தமிழகத்தில் மது போதையை கடந்து பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. போதை பொருளை ஒழிக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு கூறினாலும் அது தொடர்பாக மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தாலும் தற்போது இளைஞர்களிடம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சுலபமாக கிடைக்கும் வகையில் வழி வகுத்துள்ளது என்றே சொல்லலாம்.

சர்வ சாதாரணமாக மாணவர்கள் கஞ்சாவை பயன்படுத்தி கொண்டு வகுப்பறையில் இருப்பதும், இதன் மூலம் ஏற்படும் பிரச்சனை எண்ணற்ற அந்த வகையில் ஒருவருக்கொருவர் தாக்கி கொள்ளும் அவலம் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக பலரும் கோரிக்கை வைத்தாலும் அரசு நடவடிக்கை எடுக்காத நிலைமை தான் தொடர்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் கஞ்சாவை பயன்படுத்தி இளைஞர்கள் செய்யும் செயல் கொஞ்ச நஞ்சம் இல்லை. இந்த சூழ்நிலையில், நேற்று இரவு மதுரையில் தெருவில் கும்பலாக வந்த இளைஞர்கள் போதையில் தள்ளாடி வந்துள்ளனர்.

அப்போது அந்த வழியில் வந்த அப்பாவி ஒருவர் பைக் ஓட்டி வந்துள்ளார் அவரை வழிமறித்து அந்த கும்பல் தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி காண்போரை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மட்டும் இந்த கஞ்சா போதை பொருளால் சென்னையில் கஞ்சா வியாபாரி காவல்துறையை தாக்குவது, கும்பகோணத்தில் இளைஞர்கள் கஞ்சா போதையின் உச்சத்தில் அரசு பேருந்து ஊழியர்களை தாக்குவது, தேனியில் கஞ்சா போதையில் மாமனாரை தாக்குவது போன்று கடந்த நாட்களில் ஏற்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரிசையில் இந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

தமிழகம் கஞ்சா தலைநகரமாக மாறி வருகிறது. கூட்டம் நடந்த பிறகு குற்றவாளிகளை கைது செய்யும் காவல் துறையினர். கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கைது செய்யவும் தடுக்கவும் என் தாமதம் காட்டுகிறது என விமர்சனம் வந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் மூன்று ஆண்டுகளாக போதை கடத்தி வந்ததை கண்டுகொள்ளாதது போல் கஞ்சா புழக்கத்தை தடுக்க அரசு எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறினார்.  ஒவ்வொரு சம்பவமும் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.