
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தனது சினிமா வாழ்க்கையில் சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை யாருக்கும் கொடுக்காமல் இருந்து வருகிறார். ரஜினிகாந்த்க்கு இரண்டு மகள்கள் உள்ளன, அதில் மூத்த மகளான ஐஸ்வர்யா காதலித்து நடிகர் தனுஷ் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அவர்களது திருமண வாழ்கை முடிவுக்கு வந்து உள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவகாரத்தில் சிம்பு பழி வாங்கிட்டாரே என சிலர் கிசுகிசுத்து வந்த நிலையில் பிரபல திரை விமர்சகர் அந்தணன் தன்னுடைய பேட்டி ஒன்றில் இதுகுறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகர் தனுசும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அந்த வகையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது இவர்கள் திருமண வாழ்க்கையை முடித்து கொல்லும் எண்ணத்திற்கு வந்துள்ளனர். இது போன்ற விஷயங்கள் சினிமா துறையில் பெரிதாக பேசப்படுவதில்லை. இருப்பினும் தனுஷ் ஐஸ்வர்யா விவகாரத்தில் பெரிய அளவில் பேசுவதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் என்பதே முக்கிய காரணம்.
இந்த சூழ்நிலையில், திரை விமர்சகர் அந்தணன் இது குறித்து கூறுகையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா, விவகாரத்து கோரி மனுதாக்கல் செய்திருக்கின்றனர் இந்த மனுவானது இறுதி கட்டத்தை நோக்கியுள்ளது. இந்த விவாகாரத்திற்கு பின்னால் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதிலும் நடிகர் சிம்புவுக்கு தொடர்பு படுத்தி பேசுவது குறித்து பேசியுள்ளார் அந்தணன். ஐஸ்வர்யா சினிமாவில் தயரிப்பாளராக அறிமுகமாகி தனுஷை கரம் பிடித்தார். ஆனால், சிம்புவுக்கு இருந்த காதல் டீன் ஏஜ் பருவத்தில் தான் ஆனால், மெச்சுரிட்டி வந்த பின்னர் அவர்களுக்கு புரிந்ததால் பிரிந்துவிட்டார்கள். அதன்பின்னரே தனுஷை ஐஸ்வர்யா காதலித்து திருமணம் செய்தார்.
சினிமா துறையை பொறுத்தவரையில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் பின்னர் பிரிவது சாதாரணமாகி விட்டது. ஐஸ்வர்யா விவகாரத்துக்கு முன்னாள் காதலனான சிம்புவை வம்பு இழுப்பது சரியா? நடிகர் சிம்புவும் முன்பு போல் எல்லாம் கிடையாது. இப்போ இருக்கும் சிம்புவிடம் அறிவும், பக்குவமும் நிறைய இருக்கிறது. அவருக்கு பழைய காதலிகளின் வாழ்க்கையை கெடுக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. அவர் அப்படி யோசித்தால் ஹன்சிகா வாழ்க்கையை கெடுத்து இருக்கலாம். ஆனால் அவர் செய்யவில்லை. ஒரு இடத்தில் கூட அவரை பற்றி தப்பாகவே பேசவில்லை. இதே கதை தான் நயனுக்கும். எங்கேயாவது தவறாக பேசியிருக்கிறாரா ? பேசியதே கிடையாது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதற்கு நெட்டிசன்களோ எதற்காக இந்த விவகாரத்தில் சிம்புவை குறிப்பிட்டு பேசுகிறார்களோ என விமர்சகர்களை பங்கம் செய்து சினிமா துறையில் பெரிய விஷயம் இல்லை என்று கூறுகிறீர்கள் ஆனால், இது என்ன படத்தில் வருவது போல் ட்ராமா கல்யாணமா? அவர்களும் மனிதர்கள் தானே என்றும் வறுத்தெடுத்து வருகின்றனர். சிம்பு தற்போது வெளிநாடுகளில் ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.