24 special

மும்பை அணியின்தோல்விக்கு காரணம் என்ன..? ரசிகர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள்..!

MI vs RR
MI vs RR

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் டாப் 3 வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து இருப்பது அந்த அணி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. மேலும் கோவம் முழுக்க ஹர்திக் பாண்டியா மீது திரும்பியுள்ளது.


இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த சீசனில் இருந்து இம்பாக்ட் பிளேயர் என்ற ஒரு புதிய மெத்தடை கொண்டு வந்தனர். இதன் மூலம் இந்த சீசனில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ஒவ்வொரு போட்டியிலும் புதிய ரெக்கார்டை படைத்தது வருகின்றனர். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. மும்பை அணி புள்ளி பட்டியலில் தற்போது ஆறு புள்ளிகளுடன் ஏழாம் இடத்தில் இருக்கிறது. 

மும்பை அணி இனி விளையாட போகும் 7 போட்டியில் ஐந்து போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் அபாரமாக பந்து வீசி மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களை மிரள வைத்திருக்கிறார்கள். ரோகித் சர்மா சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேற மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் விளையாடிய சூரியகுமார் வந்த வேகத்தில் விக்கெட்டை கொடுத்துவிட்டு திரும்ப பெவிலியன் சென்றார்.

திலக் வர்மா மட்டுமே அடித்து ஆட மீதம் உள்ள வீர்கள் ராஜஸ்தான் பவுலிங்கை தாக்கு பிடிக்க முடியாமல் வெளியேறினார்கள். சந்தீப் ஷர்மா அதிரடியாக நான்கு ஓவர்களை வீசி ஐந்து விக்கெட் எடுத்து ரசிகர்களை சிலாக்க வைத்தார். 180 ரன்கள் இலக்குடன் களத்திற்கு வந்த ராஜஸ்தான் வீரர்கள் அதிரடியாக விளையாட தொடங்கினார். மேட்ச் பாதியில் மழை குறுக்கியிட்டத்தால் நாற்பது நிமிடம் போட்டி தாமதமானது. திறமையான தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் மீது தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வைத்திருந்த நம்பிக்கையை நேற்றை ஆட்டத்தில் சதம் அடித்து நிரூபித்தார். தொடர்ந்து விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன் முப்பதுக்கும் மேல் ரன்களை குவித்து அந்த அணி வெற்றியை சூடியது.

இந்த போட்டியின் வெற்றி மூலம் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் 14 புள்ளிகளுடன் இருந்து வருகிறது. மும்பை இந்தியன் ஏழாம் இடத்தில் இருந்து வருகிறது. மேலும், சந்தீப் ஷர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார். மும்பை இந்தியன் வரக்கூடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் உள்ள செல்லும் நிலை உள்ளது. அனைத்து சீசனிலும் டாப் ஆஃப் தி டேபிளில் இருக்கும் மும்பை இந்த சீஸனில் அது சோபிக்காமல் உள்ளது. இதனால் கேப்டன் பதவி ஹர்திக் பந்தியாவுக்கு கொடுத்ததே காரணம் என ரசிகர்கள் பொங்கி வருகின்றனர். சீனியர் வீரர் ரோஹித்துக்கு ஹர்திக் ஐடியா கேட்காமல் இருப்பதாலேயே தொடர் தோல்வியை சந்தித்து வருவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.. வரும் போட்டியில் என்ன மாற்றம் மும்பை இந்தியன்ஸுக்கு நடக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.