Cinema

12 நாள்ல இவோலோ வசூல்-ஆ??? தெறிக்கவிடும் சேட்டன்கள்....

guna gugai, manjummel boys
guna gugai, manjummel boys

பொதுவாக சின்ன படம் என்று நினைத்து வெளிவரும் படங்கள் பெருமளவில் வெற்றி பெறும் பொழுது அது வியக்கத்தக்கதாகவே உள்ளது. சாதாரண வாழ்க்கையை எடுத்துக் கூறுவது  போன்ற கதைகளும் மக்களால் அதிக அளவில் விரும்பி பார்க்கப்படுகிறது. அந்த வரிசையில் இப்பொழுது நீங்காத இடம் பெற்றுள்ள படம் தான் இந்த  மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம். இயக்குனர் சிதம்பரத்தின் வரவிருக்கும் படம் மஞ்சும்மேல் பாய்ஸ், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் படப்பிடிப்பை முடித்திருந்தது, மேலும் இப்படம் 2024 பிப்ரவரி 22 வெளிவந்தது. இது நட்பைப் பற்றிய திரைப்படம்! சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி மற்றும் லால் ஜூனியர் ஆகியோர் முன்னணியில் இருக்கும் சர்வைவல் த்ரில்லர், கொடைக்கானலில் உள்ள ஒரு சுற்றுலாத் தலத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு, வெளியிடப்பட்ட சமீபத்திய டிரெய்லர் இந்த நூலை உறுதிப்படுத்துகிறது.


நண்பர்கள் குழுவில் ஒரு இளைஞன் எப்படி குணா குகைக்குள் விழுந்து மாட்டிக் கொள்கிறான் என்பதைச் சுற்றியே திரைப்படம் நகர்கிறது, மற்றவர்கள் நம்பிக்கை அற்றுப் போனாலும் தன் நண்பரை காப்பாற்றாமல் அங்கிருந்து செல்ல மாட்டோம் என்று இருக்கிறார்கள் இந்த மஞ்சுமமல் பாய்ஸ்!கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைகளில் விழுந்து கிடந்த இளைஞரைக் காப்பாற்றிய உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது மஞ்சும்மல் பாய்ஸ், பல ஆண்டுகளாக, குகையின் ஆழத்தில் விழுந்து பல சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர். ஆரம்பத்தில் டெவில்ஸ் கிச்சன் என்று அழைக்கப்பட்ட இந்த குகை, பின்னர் கமல்ஹாசனின் 1991 ஆம் ஆண்டு ஹிட் படமான குணா படம் எடுக்கப்பட்ட பிறகு குணா குகைகள் என்று பிரபலமடைந்தது.இப்படிப்பட்ட மஞ்சுமமல் பாய்ஸ் திரைப்படம் தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படக்குழு தனது படத்தை எடுப்பதற்கு போட்ட பட்ஜெட் என்னமோ 5 கோடி தான், ஆனால் தற்பொழுது இந்த படம் திரையரங்குகளில்  வெளிவந்து பண்ணிரெண்டே நாட்கள் ஆன நிலையில் படத்தின் வசூல் 100 கோடிக்கும் மேல் வந்துள்ளது.

இதன் மூலம் சிறிய பட்ஜெட் என்றாலும் கதை நல்லதாக இருந்தால் மக்கள் அனைவரும் விரும்பி பார்ப்பார்கள், மற்றும் அந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும் பெரும் அளவில் வசூல் ஈட்டும் என்பதற்கு இதுவே உதாரணமாகவும் உள்ளது. ஆனால் சமீபகாலமாக தமிழ் திரைப்பட உலகத்தின் அதிக பட்ஜெட் திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், அதிக பணம் சம்பளமாக வாங்கும் நடிகர்கள் மத்தியில் கேரளா திரைப்பட உலகில் குறைந்த பட்ஜெட்டில் குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு நடிக்கும் நடிகர்களின் படம் அதிக வசூல்களை பெற்றுக் கொண்டிருக்கிறது. இது திரை உலக வட்டாரங்களில் அதிக கவனத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு மலையாள படங்களின் மீது ஆர்வமும் அதிகரித்துள்ளது. மலையாள படங்கள் பெரும்பாலும் அன்றாட வாழ்க்கைகளை இயல்பாக எடுத்துக் கூறும் கதையில் அமைந்திருக்கின்றது. இந்தக் காரணத்தினால் தான் மொழியைத் தாண்டியும் தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை எடுத்து சொல்லும் வகையில் அமைந்த படமே இந்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம். இந்தப் படம் வெறும் 12 நாளில் இவ்வளவு வசூல் ஆகும் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாத அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது. மேலும் அதிக அளவில் ரசிகர்களையும் படத்தின் மூலம் கட்டி இழுத்து உள்ளது. தற்போது இது குறித்த வீடியோ  இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் பிரண்ட்ஷிப் பற்றி வருவதனால் அதிக இளைஞர்கள் விரும்பும் படமாக உள்ளது. இப்படி மலையாள திரையுலகம் அசால்ட்டாக ஒரு படத்தை எடுத்து 100 கோடி வசூலை அடித்துள்ளது கண்டு பிதுக்கப்பட்டோம், நசுக்கப்பட்டோம் என படமெடுக்கும் போராளிகளுக்கு ஒரே எரிச்சலாக இருப்பதாக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.