Cinema

இதுதான் சூப்பர் ஸ்டார்...

rajinikanth, livingston
rajinikanth, livingston

இயற்கையாக முரட்டுத்தனத்தையும் பிடிவாத குணத்தையும் கொண்ட ஒரு நடிகர் தற்போது தனது புகழையும் பாராட்டுகளையும் எனது ரசிகர்களுக்கு கொடுத்து என்று இன்றளவும் மக்கள் மனதில் என்றும் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் தன்னை நம்பி வந்தவர்களுக்கும் சினிமா துறையில் முன்னேறுவதற்கு முன்பு தனக்கு உதவி அவர்களுக்கும் சினிமா துறையில் நல்ல ஒரு இடத்தையும் பட்டத்தையும் பெற்ற பிறகு தன்னுடன் இருந்தவர்களுக்கும் செய்துள்ளார். அவை அனைத்துமே அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை பெரும்பாலானவை மக்கள் மத்தியில் வெளிவராமல் உள்ளது. கண்டக்டராக தனது பணியை மேற்கொண்ட ரஜினிகாந்த் அதிலும் தனது ஸ்டைலை வெளி காட்ட தனது நண்பர்களின் உற்சாகத்தில் சென்னைக்கு வந்து சினிமாவை வாய்ப்பு தேடி அலைய கே பாலச்சந்திரன் அவர்கள் கொடுத்த வாய்ப்பால் அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதற்குப் பிறகும் சில படங்களில் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! 


அன்று தொடங்கிய இவரது சினிமா பயணம் இன்று வரை நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது அதோடு எந்த இடத்திலும் தனது ரசிகர்களை விட்டுக் கொடுக்காமலும் ரசிகர்களின் பட்டாளத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறார். ஒரு சமயத்தில் அவ்வளவுதான் சூப்பர் ஸ்டார் எல்லாம் இக்காலத்தில் உள்ள இளைஞர்களின் மனதில் இடம் பிடிக்கவே முடியாது! அவரது சினிமா பயணம் அவ்வளவுதான் என்ற விமர்சனங்களை முன்வைத்த பொழுது அவை அனைத்தையும் முறியடித்து சூப்பர் ஸ்டார் பல 2k கிட்ஸ் இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதோடு அவர்களைக் கவரும் வகையிலான படங்களிலும் நடித்து அவர்களின் அன்பையும் பெறுகிறார் சூப்பர் ஸ்டார்! இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை உலக பிரபலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு செய்த உதவி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாகவும் வில்லனாகவும் காமெடியனாகவும் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்திய லிவிங்ஸ்டன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு செய்த உதவி குறித்து சமீபத்தில் தனியார் youtube சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார். 

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான அண்ணாத்த மற்றும் லால் சலாம் திரைப்படத்திலும் சூப்பர் ஸ்டாருக்கு நண்பராக நடித்துள்ளார். அப்படி சூப்பர் ஸ்டாருடன் லால் சலாம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது லிவிங்ஸ்டன் மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது, இந்த செய்தியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உதவி இயக்குனர் மூலம் தெரிந்து கொண்டு உடனே லிவிங்ஸ்டனை அழைத்து விவரம் கேட்டதோடு, " என்ன ஆயிற்று என்று சொல்ல மாட்டியா உன்னை நான் என்னோட ஒரு பிரதராதான பாக்குற மருத்துவத்திற்கு எவ்வளவு செலவாகும் என்று சூப்பர் ஸ்டார் கேட்டுள்ளார்"  அதற்கு லிவிங்ஸ்டனும் அவரிடம் பணம் குறித்து கூறுவதற்கு தயங்கப்பட லிவிங்ஸ்டன் மனைவியின் மருத்துவச் செலவிற்கு வேண்டிய 15 லட்சம் ரூபாயையும் சூப்பர் ஸ்டாரே கொடுத்துள்ளார். 

இதனை லிவிங்ஸ்டன்னே சமீபத்தில் பேட்டி ஒன்றை கூறியுள்ளார் அதாவது பைபிளில் ஒரு கை கொடுப்பது மற்றொரு கைக்கு தெரியக்கூடாது என்று ஒரு வசனம் உள்ளது அந்த வசனத்திற்கு ஏற்ற வகையில் சூப்பர் ஸ்டார் பலருக்கு உதவி செய்கிறார் ஆனால் அவை அனைத்தையும் தனது மற்றொரு கைக்கு கூட தெரியாத வகையில் வைத்திருக்கிறார். நான் கடன் பிரச்சனையில் இருக்கிறேன் என்பது அவருக்கு தெரியும் அதற்காகவே என் மனைவியின் மருத்துவத்திற்கு 15 லட்சம் கொடுத்து அதோடு இன்னும் பணம் தேவைப்பட்டால் கேளு என்றும் என்னிடம் கூறியுள்ளார். இவ்வளவு பெரிய உதவியை என் வாழ்க்கையில் திரை உலகை சேர்ந்த ஒரு மிகப்பெரிய பிரபலம் எனக்கு கொடுத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அதனால் அவரது புகைப்படத்தை எனது பூஜை அறையில் வைத்திருக்கிறேன் என்று லிவிங்ஸ்டன் மன நெகிழ்ச்சியில் கூறி உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.