
தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கும் காங்கிரஸ் ஏதாவது உருட்டுகளை உருட்டி வரும் தேர்தல்களில் வெற்றி பெறவேண்டும் என ஒரு பொய்யை பரப்பி வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தேர்தல் ஆணையமே நேர்மையாக இல்லை, வாக்கு திருட்டு நடந்திருக்கிறது என்று பொய்களை அடுக்கி கொண்டே போனார். செய்தியாளர் சந்திப்பில், அவர் ஒரு PDF ஆவணத்தை வெளியிட்டு, “வீட்டு எண் கூட இல்லாத முகவரியில் எப்படி வாக்காளர்கள் இருப்பார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
தேர்தல் ஆணையம் உடனே பதில் கொடுத்து, “வீடற்ற மக்கள் கூட வாக்களிக்க உரிமை கொண்டவர்கள். அவர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த நடைமுறை இருக்கிறது” என்று விளக்கம் அளித்தது. மேலும், ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் இதுவரை எந்த ஆதராத்தையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கவில்லை ராகுல் காந்தி.
இதற்கிடையில், பிகாரில் தேர்தல் நெருங்கி வருவதால் ராகுல் காந்தி “வாக்காளர் உரிமை யாத்திரை” என்ற பெயரில் ஒரு பெரிய பிரச்சார யாத்திரையை பீகாரில் தொடங்கினார். ஒவ்வொரு ஊரிலும் செய்தியாளர்களை சந்தித்து தனது பொய் குற்றச்சாட்டை கூறிகொண்டே சென்றார். தேர்தல் ஆணையம் ஆதாரம் கேட்டும் தரவில்லை இதனால் காங்கிரஸ் – தேர்தல் ஆணையம் இடையே கருத்து போர் நடைபெற்றது
இதற்கிடையே தான் பாஜக தரப்பில் இருந்து ஆதரங்களோடு ராகுல் காந்தி மீது மிகப் பெரிய குற்றச்சாட்டு வைத்துள்ளது . இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பந்தாரி கூறியதாவது – ராகுல் காந்தி வெளியிட்ட PDF ஆவணம் இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை, மியான்மரில் தயாரிக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளார். இது, “ராகுல் காந்தியும் காங்கிரஸும் அந்நிய சக்திகளால் இயக்கப்படுகிறார்கள் என்பதற்கு இது 100% ஆதாரம்” என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவாலா, ராகுல் காந்தி எப்போதுமே வெளிநாட்டவர்களையே நம்புகிறார் என குற்றம் சாட்டினார். “பஞ்சாப், ஹிமாச்சலில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோதும் அவர் மலேசியாவுக்கு சுற்றுலா சென்றார். இது அவர் நாட்டைவிட வெளிநாட்டைப் பற்றியே அதிக அக்கறை காட்டுகிறார் என்பதற்கான சான்று” என்று சாடினார்.
இந்தியாவின் ஜனநாயகத்தை பாதிக்க அந்நிய சக்திகள் முயற்சி செய்கின்றன. அவர்களின் பொம்மையாக ராகுல் காந்தி செயல்படுகிறார்” ஆதரங்களோடு ராகுல்காந்தி முகத்திரையை கிழித்துள்ளார்கள்.மேலும் பாஜக தலைவர் ஆர்.பி.சிங், ராகுல் காங்கிரஸ் மற்றும் பன்னாட்டு நிதியாளர் சோரோஸ் (SOROS) இடையே தொடர்பு இருப்பது இப்போது தெளிவாகி விட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மொத்தத்தில், ராகுல் காந்தியின் “வாக்கு திருட்டு” குற்றச்சாட்டுக்கும் பாஜகவின் “அந்நிய சக்தி” குற்றச்சாட்டுக்கும் நடுவே அரசியல் சூழல் இன்னும் தீவிரமாகி வருகிறது. ராகுல் காந்தி இன்னமும் வாக்கு திருட்டு குறித்து ஆதாரங்கள் சமர்ப்பிக்கவில்லை மேலும் தமிழகத்தில் வாக்குதிருட்டு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அடுத்த சில நாட்களில் இந்த விவகாரம் நாட்டின் முக்கிய அரசியல் விவாதமாக மாற வாய்ப்பு அதிகம்.