Cinema

மீண்டும் முதலில் இருந்தா இப்போது கருப்பும் இணைந்து விட்டார் சினிமா பளார் ஸ்டார்ட்!

Actor Kanja karuppu
Actor Kanja karuppu

ராஜ ராஜ சோழனை இந்துவாக சித்தரிக்க பார்ப்பதாக வெற்றி மாறன் சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவிக்க தற்போது பல தரப்பில் இருந்தும் பதிலடியை பெற்று வருகிறார் குறிப்பாக அரசியல் தரப்பில் இருந்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடுமையான பதிலடியை கொடுத்து வருகின்றன.


எதிர்பாராத விதமாக சினிமா துறையில் இருந்தும் கடுமையான பதிலடிகள் கிடைத்து வருகின்றன அந்த வகையில் இயக்குனர் பேரரசு கடுமையான பதிலடியை கொடுத்தார், அதன் பிறகு நடிகை குஸ்பு வரலாறு தெரிந்து பேசுங்கள் என காட்டமாக பதிலடி கொடுத்தார்.

இதனை தொடர்ந்து நேற்றைய தினம் சுப்ரீம் ஸ்டார் சரத் குமார் கடுமையாக வெற்றிமாறன் கருத்திற்கு பதிலடி கொடுத்தார் குரங்கில் இருந்துதான் மனிதன் வந்தான் அதற்காக இப்போது மனிதனை குரங்கு எனலாமா என சரத்குமார் எழுப்பிய கேள்விகள் இணையத்தில் வைரலாக்கின, ஏற்கனவே இயக்குனர் பேரரசு.. நாட்டில் எத்தனை பிரச்சனை தீர்க்க படவேண்டி இருக்கு இப்போது இந்த விவாதம் தேவையா என பொளேர் பதிலடி கொடுத்தார்.

இந்த சூழலில் இந்த வரிசையில் கஞ்சா கருப்புவும் இணைந்து இருக்கிறார், சினிமா துறையில் ஏதாவது சொன்னோம் என்றால், அது பெரும் சர்ச்சையாக மாறி விடுகிறது. அதனால் சரியாக பேச வேண்டும். அதை விட்டுவிட்டு ராஜராஜ சோழன் இந்துவா... இல்லையா என பேசி வருகிறார்கள்.

இதெல்லாம் நமக்கு தேவையா, சினிமாவுக்கு வந்தோமா.. வேலைய பார்த்தோமா..  வீட்டை வாங்குனோமா என்று இல்லாமல் எதற்கு தேவையில்லாத பேச்சு" என கஞ்சா கருப்புவும் வெற்றிமாறன் கருத்திற்கு வலுவாக பதிலடி கொடுத்து இருக்கிறார் மொத்தத்தில் வலுவாக சினிமா துறையில் இருந்தும் வெற்றி மாறன் கருத்திற்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பது ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

மீண்டும் முதலில் இருந்து வெற்றிமாறன் கருத்தை விமர்சனம் செய்ய பலர் கிளம்பி இருப்பது இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவிப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.