Cinema

சிவன் பாடலை மறுத்தாரா ரஹ்மான்? பரவும் செய்தி முடிவிற்கு வருகிறதா PS-2 பயணம்?

Ponniyin selvan
Ponniyin selvan

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் இரண்டாவது வாரமும் திரை அரங்கில் கூட்டம் குவிந்து வருகிறது, இதற்கு பல்வேறு தரப்பிலும் பட குழுவிற்கு கிடைத்த இலவச வரவேற்பு தான் காரணம் என்று கூறப்படுகிறது.


இந்த சூழலில் படத்தின் திரைக்கதை மற்றும் காட்சிகள் போன்றவை வரவேற்பை பெற்ற நிலையில் இசைதான் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது குறிப்பாக சோழர்கள் குறித்த திரைப்படம் வருகிறது என்றால் அதில் நிச்சயம் சிவன் வழிபாடு குறித்தோ அல்லது சமய வழிபாடு குறித்து அழுத்தமான பாடல் அல்லது பின்னணி இசை இடம்பெற்று இருக்க வேண்டும் படத்தின் அடி நாதமாக அந்த பாடல் இடம்பெற்று இருக்க வேண்டும் ஏன் அவ்வாறு இடம்பெறவில்லை என்ற விமர்சனங்கள் அதிகரித்த சூழலில் அதற்கு ரஹமான் மீது கையை திருப்புகிறது பட குழு.

கடந்த ஒரு ஆண்டுகளாக திரைக்கதையை எழுதி முடிக்க படக்குழு நேரம் எடுத்து கொண்டு இருந்து இருக்கிறது அதில் முதலில் மூன்று இடங்களில் சிவனை குடும்பத்துடன் வணங்கும் விதமாக பாடல் வைக்க வேண்டும் என படக்குழு முடிவு செய்து இருந்ததாம், ஆனால் அதற்கு AR.ரஹ்மான் தரப்பில் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாடல் காட்சிகளுக்கு பதில் சண்டை காட்சி பிரமண்டைத்தை காட்ட படக்குழு முடிவு எடுத்து சிவன் புகழ் பாடும் பாடலை நீக்கி இருக்கிறதாம். முதலில் இந்த பாடலை உங்கள் குழுவை வைத்து இயற்றலாமே என ரஹ்மானிடம் கோரிக்கை வைத்த நிலையில், நாளை இந்த பாடல் நான் இசை அமைத்ததாகதான் பார்க்க படும் மேலும் ஒரே பாடலில் வேறு இசை அமைப்பாளரை பயன்படுத்தினால் அது மேலும் சர்ச்சையை உண்டாக்கும் என்றும் தெளிவு படுத்தப்பட்டு இருக்கிறதாம்.

இந்த சூழலில் இந்த தகவல் மெல்ல மெல்ல சினிமா துறையில் பேசு பொருளாக மாறி இருக்கிறது, ரஹ்மான் அப்படி செய்ய வாய்ப்பு இல்லை என்று ஒரு சிலர் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்தாலும், அதே நேரத்தில் ரஹ்மான் பழைய காலம் அறிந்தவர்கள் இந்த விவகாரத்தில் ரகுமான் பற்றி பரவும் தகவலை மறுக்க நினைக்கவில்லை.

காரணம் ஏற்கனவே இருவர் ரஹ்மான் செயல்பாடு குறித்து வெளிப்படையாக ஊடகங்களில் பேசி இருக்கிறார்கள் இதில் கவிஞர் பிறை சூடன் சொன்ன தவவல்கள் ரகுமான் உண்மை முகத்தை வெளிப்படுத்தியது, பாடல் ஆசிரியரான பிறைசூடன்  இதுவரை 400 திரைப்படங்களில் 1,400 பாடல்களும் 5000 பக்திப் பாடல்களும்,100 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்களும் இயற்றியுள்ளார். மேலும், இவர் ஏ ஆர் ரஹ்மானுடனும் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள அவர் பேசுகையில், ஒரு பொது நிகழ்ச்சியில் ஏர் ஆர் ரஹ்மானை சந்தித்த போது மறுநாள் எனக்கு ஒரு பாடலுக்காக என்னை அழைத்தார்.அப்போது அவரின் தாய் என்னிடம் விபூதி, குங்குமம் எல்லாம் இங்கே வைக்க கூடாதுனு சொன்னாங்க. ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை. நான் பிறந்ததிலிருந்தே வச்சிக்கிட்டு இருக்கேன். அதனால் யாருக்காகவும் வேஷம் போட விரும்பவில்லை என்று பிறைசூடன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

மேலும் இதே போன்று சினிமா துறையில் PRO பணியாற்றிய ஒருவரும் ரஹ்மான் இந்து மதம் குறித்து பாடல் ஒன்றை இசைக்க வேண்டி பின்பு மறுத்ததாகவும் பிரபல தொலைக்காட்சி சார்பில் பேட்டி எடுக்க சென்று தான் பட்ட நெருக்கடியை கூறினார்.

இவற்றையெல்லாம் வைத்து பார்த்தால் நிச்சயம் ரஹ்மான் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குறிப்பிட்ட அழுத்தமான வரிகளை கொண்ட சிவன் பாடலுக்கு நிச்சயம் இசை அமைக்க மறுத்து இருப்பார் என்று பரவும் தகவல் உண்மையாகதான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில் அவ்வளவு மத பற்று ரகுமானுக்கு இருந்தால் சோழர்கள் இந்துக்கள் வரலாறு தழுவிய திரைப்படத்திற்கு இசை அமைக்க ஏன் ஒப்பு கொள்ளவேண்டும் பணமும் வேண்டும் கொள்கையும் வேண்டும் என்றால் அவர்தான் தனியாக படத்தை எடுக்க வேண்டும் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதே சர்ச்சை நீடித்தால் PS -2 படத்தில் ரஹ்மான் திரைபயணம் தொடருமா அல்லது முடிவிற்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.