24 special

இஸ்லாம் குறித்து படித்து படித்து சொல்லிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் !மதம் மாற்றம் காணாத வரை வரை தீவிரவாதம் இருக்கும்!

rashya
rashya


தற்போது உள்ள இந்தியா பாகிஸ்தான் சூழலில் பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், கூறிய கருத்து  உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது. கடந்த மாதம் இந்தியாவின் சுற்றுலாத்தலமான பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியத்தில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டார்கள்இந்த  சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அங்கு இயல்பு நிலை திரும்பியது. இப்போது தேர்தல் நடத்தப்பட்டு மக்களாட்சியும் நடக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் இயற்கை அழகை ரசிக்க, நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகிறார்கள்.இதனை பொறுக்கமுடியாமல் பாகிஸ்தானும் அதன் ஸ்லீப்பர் செல்களும் இணைந்து இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளார்கள். 

இதனிடையே துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பாக சுற்றுலா பயணிகளின் பெயர் மற்றும் அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் மிரட்டிக் கேட்டதாகவும் உயிர் தப்பியவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். ஒரு சில பயணிகளின் ஆடைகளை களைந்த பின்னர் அவர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. இந்த தாக்குதலுக்கு .பின்னர் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து என அடுத்தடுத்து இந்தியா பதிலடி கொடுத்ததுவருகிறது. 

இதற்கிடையே பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடந்த இலக்கிய விழாவில் கலந்து கொண்டார். அப்போது, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலும், 2016-ஆம் ஆண்டு தாகாவில் நடந்த தாக்குதலும் ஒன்றே என தெரிவித்தார்.

“இஸ்லாம் 1,400 ஆண்டுகளில் மாற்றம் காணவில்லை. மாற்றம் காணாத வரை, அது தீவிரவாதங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கும்,” என்று கூறினார்.இஸ்லாம் இருக்கும் வரை தீவிரவாதம் நீடிக்கும். ஐரோப்பாவில் தேவாலயங்கள் இப்போது அருங்காட்சியகங்களாக மாறிவிட்டன. ஆனால் முஸ்லிம்கள் எங்கு பார்த்தாலும் புதிய பள்ளிவாசல்கள் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஏராளமான பள்ளிவாசல்கள் இருக்கின்றன. அதிலிருந்து ஜிஹாத்கள் உருவாகிறார்கள்.”

“மதரஸாக்கள் தேவையில்லை. குழந்தைகள் எல்லா புத்தகங்களையும் படிக்க வேண்டும். ஒரே ஒரு மதபுத்தகத்தை மட்டும் அல்ல.”

“நான் அமெரிக்காவில் 10 ஆண்டுகள் வாழ்ந்தேன். ஆனால் கொல்கத்தாவுக்கு வந்தபின் தான் உண்மையான வாழ்க்கை எது என்று எனக்கு தோன்றியது . மேற்குவங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகும், டெல்லி என்னை ஆதரித்தது. இந்த நாடு எனக்கு சொந்த நாட்டை விட அதிக பாசிட்டிவ் உணர்வை அளித்துள்ளது. இந்தியாவை நான் நேசிக்கிறேன். இது என் வீடு போலவே இருக்கிறது.

பங்களாதேஷில் பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் இல்லை. ஒற்றுமையான குடிமைப் பட்ச சட்டம் இருக்க வேண்டும் என்றும் தஸ்லிமா நஸ்ரின் வலியுறுத்தினார்.எல்லா நாகரிக நாடுகளிலும் மக்களின் உரிமைகள் மதத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது. கலாசாரம், மதம் அல்லது மரபு பெயரில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என்றால், அந்த கலாசாரத்தையே கேள்விக்குள்ளாக்க வேண்டும். ஒரு சமூகத்தில் பாதி மக்களாகிய பெண்கள் பாதுகாப்பாக இல்லையெனில், அது தோல்வியடைந்த சமூகம்தான்.தஸ்லிமா நஸ்ரின் 1994-ஆம் ஆண்டு பிளாஸ்பெமி குற்றச்சாட்டுகளால் பங்களாதேஷிலிருந்து வெளியேறி, ஸ்வீடன், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் தங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது,