24 special

ரஷ்யாவில் இருந்து இறங்கிய மினி ஹண்டர்.. பாக்.,விமானங்களை நொறுக்க போகும் ஏவுகணை! பாகிஸ்தானைஅலறவிட்ட நிஜ அரக்கன்

PMMODI
PMMODI

இந்தியா–பாகிஸ்தான் எதிரான நடவடிக்கைகளை மிக உன்னிப்பாக கவனித்து செய்து வருகிறது. எடுத்தோம் அடித்தோம் என இல்லாமல் பாகிஸ்தானுக்கு அனைத்து  தரப்பிலிருந்தும் செக் வைத்து வருகிறது. முதலில் பாகிஸ்தானின் பொருளாதரத்தை 15 நாட்களில் பாதாளத்தில் தள்ளியுள்ளது அணைத்து நாடுகளிலிலிருந்தும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தியுள்ளது. ஐ நாவும் பாகிஸ்தானை கைவிட்டுள்ளது. உலகநாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளது. ஆயுதங்கள் கொடுக்கவும் தயாராக உள்ளது மேலும்  இந்திய இராணுவம்  வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 


ரஷ்யாவைச் சேர்ந்த இக்லா-எஸ் குறுகிய தூர விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ரூ.260 கோடி செலவில் அவசர கொள்முதல் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டு அண்மையில் இந்திய எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது.தோளில் வைத்தே இயக்கக்கூடிய இந்த ஏவுகணைகள், மிகக் குறுகிய நேரத்தில் எதிரியின் விமானங்களை வீழ்த்த முடியும். பாகிஸ்தானிடமிருந்து பல முறை அனுப்பப்பட்ட ட்ரோன்கள் போன்ற புதிய அச்சுறுத்தல்களுக்கு இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.இக்லா-எஸ் ஏவுகணைகள் jammers, spoofers, laser systems உடன் இணைந்து செயல்படுகிறது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில், இதை பயன்படுத்தி பாகிஸ்தான் ட்ரோன் ஒன்றை இந்திய இராணுவம் துல்லியமாக அழித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய ராணுவம், ரஷ்யாவிடம் இருந்து அவசரமாக கொள்முதல் செய்துள்ள இக்லா-எஸ் என்ற ஏவுகணையின் சிறப்பம்சம் என்ன என்று பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.இந்த ஏவுகணைகள், குறுகிய தொலைவில் இருக்கும் இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்தவை. அதாவது, 6 கிலோமீட்டர் என்ற குறுகிய தொலைவுக்குள் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகள், இந்தியாவுக்கு மிகவும் வசதியானவை.இவை, அதிகபட்சம் 3.5 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கக்கூடியவை.இவற்றை ஒரே ஒரு தனி நபர் தோளில் வைத்து இலக்கு மீது ஏவி விட முடியும்.

ஒரு ராணுவ வீரரே ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு சுமந்தும் சென்று விடலாம். விண்வெளியில் இருக்கும் இலக்கு நோக்கி எளிதில் ஏவி தாக்குதல் நடத்த முடியும்.விண்வெளியில் குறைந்த உயரத்தில் பறக்கும் விமானம், டிரோன், ஹெலிகாப்டர் போன்றவற்றை குறி பார்த்து தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற 'இன்ப்ரா ரெட் ஹோமிங்' வசதி இதில் உள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.இந்த ஏவுகணையை, ஒரு முறை இலக்கு மீது குறி வைத்து ஏவி விட்டால் போதும்; குறி வைக்கப்பட்ட விமானம் அல்லது ஹெலிகாப்டர் அல்லது டிரோனின் இன்ஜின் வெப்பத்தை உணர்ந்து பின்தொடர்ந்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

இந்திய ராணுவத்திடம் ஏற்கனவே இக்லா ஏவுகணைகள் உள்ளன. அவற்றில் நவீன வசதிகள் சேர்க்கப்பட்டது தான் இந்த இக்லா எஸ் என்ற மாடல் என்கின்றனர் பாதுகாப்புத்துறை வல்லுநர்கள்.பழைய இக்லா ஏவுகணைகளும், தற்போதைய தேவைக்கு தகுந்தபடி இந்திய நிறுவனம் மூலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.போர் எந்த நேரத்திலும் துவங்கலாம் என்ற நிலையில் இந்த ஏவுகணைகள் இந்திய ராணுவத்தின் எல்லையோர முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த பாதுகாப்பு சிஸ்டம்  பாகிஸ்தானை குறிவைத்து மேற்கு எல்லையில் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியாவின் முன்னணி ஆயுத சப்ளையராக இருக்கும் ரஷ்யாவிடமிருந்து சக்திவாய்ந்த விமான எதிர்ப்பு ஏவுகணை கட்டமைப்பை இந்தியா வாங்கியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. இக்லா-எஸ் ஏவுகணைகள் சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் இந்திய பாதுகப்பு படைகளின் கரத்தை மேலும் வலுவாக்கும் என்று பாதுகாப்பு வல்லுநர்களால் தெரிவிக்கப்படுகிறது. .துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது என்பதால் பாகிஸ்தான் ராணுவம் பீதி அடைந்துள்ளது.