24 special

என்ன நடக்கிறது தூத்துக்குடியில்? வெளியான பகிர் வீடியோ!

ctr nirmal kumar. thoothukudi
ctr nirmal kumar. thoothukudi

கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி தூத்துக்குடி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெய்து கன மழையானது அப்பகுதி மக்களை மீண்டும் மிகவும் அச்சுறுத்தியுள்ளது. ஏனென்றால் முந்தைய காலங்களில் மழை காலம் என்றால் எளிதாக கடக்க கூடிய நிலையில் தற்பொழுது மழைக்காலம் வந்தாலே அதிக அளவிலான மழை பொழிந்து ஆறு குளங்கள் நிரம்பி, சில ஏரிகள் உடைந்தும் மழை வெள்ளம் முழுவதும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுகிறது சென்னையில் தான் ஏரிகளில் வீடு கட்டி உள்ளார்கள் அதனால் அங்கு மழை நீர் தேங்க்கிறது என்றால் இங்கு ஆறு குளங்கள் இருந்தும் அவை உடைபட்டு வெள்ளப்பெருக்கு மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து விட்டது.


 அதிலிருந்து மீட்கப்பட்டு தண்ணீர் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை அரசு வழங்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் அரசின் நடவடிக்கைகள் நிகழ்ந்துள்ளதாக தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் திமுக அரசின் மீது அதிருப்தி தெரிவிக்கின்றனர்.மழை நின்ற பிறகும் மின்சார இணைப்புகள் இல்லாமல் மக்கள் அவதி உற்று வருவதாகவும், மழை வெள்ளத்தின் போது அரசு செய்த ஒரு செயல்கள் கூட ஏற்க்கத்தக்கதாக இல்லை என்றும் மழை பாதிப்பு இல்லாத பகுதிகளுக்கு மட்டும் திமுக அமைச்சர்கள் ஆய்வு செய்கிறார்கள் என்றும் மழை வெள்ள பாதிப்பு உள்ள பகுதி பக்கம் அவர்கள் எட்டி கூட பார்ப்பதில்லை என்று மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் கடும் கோபத்தில் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி மழை வெள்ளம் தேங்கி 5 நாட்கள் ஆன பிறகு மழைநீர் ஆங்காங்கே வடிய தொடங்கியுள்ளது. மேலும் தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலை, எட்டயபுரம் சாலை, ஜெயராஜ் சாலை போன்ற சில பகுதிகளில் இடுப்பு அளவு வரை தேங்கி இருந்த மழைநீர் அடிப்படையாகக் குறைய தொடங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து சில பகுதிகளில் தொடங்கியுள்ளதால் மின்சார இணைப்புகளும் சில பகுதிகளில் சீரானது.

இருப்பினும்  தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகர், மகிழ்ச்சி புரம், முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், முருகேசன் நகர், தபால் தந்தி காலனி, தேவர் காலனி, டைமண்ட் காலனி, இந்திரா நகர், மடத்தூர், கதிர்வேல் நகர், அம்பேத்கர் நகர், போன்ற பகுதிகளில் மழைநீர் இடுப்பளவு இன்னும் தேங்கிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பெரும்பாலான கிராம பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் பகுதிகளுக்கு பால் குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் கடந்த ஐந்து நாட்களாக பெரும் துயரத்தில் இருந்து வருகின்றனர். இப்படியே இதே நிலை. நீடித்தால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்ப்பட்டுள்ளது. இதனிடையே மழை வெள்ளத்தால் சில உயிர்கள் பலியானதும் இறந்த உடல்கள் ஆங்காங்கே கிடந்ததாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில், ஒரு வீடியோ வெளியாகி உள்ளது, அதாவது மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இருந்தவர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கை, தகவல் குறித்து எந்த அறிவிப்பையும் அரசு இதுவரை வெளியிடவில்லை! 

ஆங்காங்கே சில சடலங்கள் எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது, அதுமட்டுமின்றி தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் இறந்தவர்கள் அதிகம் பேர், அரசு இறந்தவர்களின் எண்ணிக்கை தெரிவிக்காமல் மறைக்க பார்க்கிறது என சிலர் கூறிவந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த சிடிஆர் நிர்மல் குமார் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார், அந்த வீடியோவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் பின்புறத்தில் வரிசை கட்டி ஸ்ட்ரெச்சர்களை மருத்துவமனை ஊழியர்கள் எடுத்துச் சென்று அதில் சடலங்களை கொண்டு வரும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாக உலா வருகிறது. ஆனால் இது குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.