Cinema

தளபதி 69 விஜய் எடுத்த முடிவு...போட்டி போடும் இயக்குனர்கள்! அதற்கு முன்னாடி விஜயின் பிளான் இதுதான்?

Vijay
Vijay

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற நிலையில் உள்ளார், ஒரு பக்கம் அரசியலில் நுழையவும், ஒரு பக்கம் சினிமாவிலும் அதிக ஆர்வம் காட்டி வரும் விஜய் தற்போது தளபதி 68 படத்தில் விறுவிறுப்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னையில் வெள்ளத்தில் பதிப்படைஞ்ச மக்களை பார்வையிட வாராமல் படத்தில் நடிப்பதில் பிசியாக இருந்து வந்தார். இந்த நிலையில் தளபதி 69 படம் குறித்து பிரபல திரை விமர்சகர் அந்தணன் புதிய தகவலை தெரிவித்துள்ளார்.


2023ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை. அதாவது பொங்கலுக்கு வெளியான வாரிசு படம் குடும்பத்தை மையப்படுத்தி ஜவ்வாக இழுத்ததால் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையவில்லை. அப்போது வெளியான துணிவு படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு லியோ படத்தில் கவனம் செலுத்திய விஜய் ரசிகர்கள் பெரும் எதரிப்பரப்பை வைத்திருந்தனர் அந்த படமும் வெளியாகி மிக பெரிய வெற்றி படமாக அமையாமல் ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியது. இதற்கெல்லாம் காரணம் விஜய் அரசியலுக்கு வரேன் என சொல்லிவிட்டு ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என படத்தில் ஒரு காலையும், அரசியல் சம்பந்தமான விஷயத்தில் ஒரு காலை வைப்பதும் தான் முக்கிய காரணம் என விமர்சனம் எழுந்தது.

லியோ படத்தின் தொலைவியினால் சினிமாவில் ஆதிக்கம் செலுத்த விஜய் வெங்கட்பிரபுவுடன் இனைந்து தளபதி 68 என்ற படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் இரண்டு வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வந்தன இதனால் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது. படத்திற்கான பெயர் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில், இணையத்தில் பாஸ் என்ற பெயர் தான் தளபதி 68 என ஒரு தகவல் பரவியது. இந்நிலையில், தளபதி 68 படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க போவதாகவும், கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் விஜய் நடிக இருப்பதாகவும் ஒரு சில தகவல் வந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில் தளபதி 69 படம் குறித்து திரை விமர்சகர் அந்தணன் ஒரு புதிய தகவல் கொடுத்துள்ளார். அதாவது விஜய் அடுத்த இயக்குனர் பற்றி எதுவுமே யோசிக்கவே இல்லையாம். கோலிவுட்டில் அடுத்த சூப்பர்ஸ்டார் இடத்தில் இருப்பவர் என்னவோ விஜய் தான். பெரிய இடத்துக்கு வர வேண்டியவருக்கு திடீரென அரசியல் ஆசை வந்து இருப்பது அனைவருக்கும் தெரிந்த சேதி தான். இதன் மூலம் இந்த படத்தினை முடித்து விட்டு விஜய் மக்களை சந்திக்க சில சுற்றுப்பயணத்தில் இணைய இருக்காராம். அதன்மூலம் 2026 தேர்தல் முடிந்த பின்னரே தன்னுடைய அடுத்தப்பட இயக்குனர் குறித்து யோசிக்கலாம். படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறி இருக்கிறார். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். விஜய் அரசியலுக்கு வருவது உறுதி தான் என ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.