Tamilnadu

தன்னைப்பற்றி தவறான புகைப்படத்தை வெளியிட்ட திமுக பிரமுகர் மீது காயத்ரி ரகுராம் அதிரடி நடவடிக்கை நடந்தது என்ன?

gayathri raguram jayachandran
gayathri raguram jayachandran

சமூக வலைத்தளங்களில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன, இந்த சூழலில் திமுகவை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் பாஜக நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராம் குறித்த தவறான புகைப்படத்தை பகிர்ந்து பாஜக தலைவர்கள் சிலருடன் ஒப்பிட்டு அருவருக்கத்தக்க வகையில் கருத்து பதிவிட்டுள்ளார்.


இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள காவல்துறை கமிஷ்னர் அலுவலகத்தில் காயத்ரி ரகுராம் பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் பால் கனகராஜ் மற்றும் கட்சியினர் உடன் சென்று புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார், ஜெயச்சந்திரன் என்ற நபர்  ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார் .. என் ஆடை திடீரென நழுவியது. பொங்கல் தினத்தன்று 10 பெண்கள் மாட்டு வண்டியில் இருந்து கீழே விழுந்து அவர்கள் என் முந்தானியை மிதித்தனர். அப்போது ஆடை விலகியது அந்த வீடியோவை எடிட் செய்து தவறாக பரப்பியுள்ளார்.

தொடர்ந்து ஆபாசமாக பல பதிவுகளை அந்த நபர் பகிர்ந்துள்ளார்,அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து காவல்துறை அந்த நபரை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என காயத்ரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார், இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது ட்விட்டர் ஐடியை மூடிவிட்டு தான் போட்ட ட்விட்களை டெலிட் செய்து உள்ளார்.

மற்ற கட்சியினர் செய்யும் தவறுகள் மீது நடவடிக்கை எடுக்கும் காவல்துறை மிகவும் அறுவருக்கதக்க வகையில் பல்வேறு பதிவுகளை வெளியிட்ட திமுகவை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்ற நபரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தலுக்கு முன்னர் ஸ்டாலின் உறுதி அளித்தார், இப்போது திமுகவினரே குற்றசெயல்களில் ஈடுபட்டு வருவது பொது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.