Tamilnadu

தரம் வேணும் தராதரம் வேணும் தூத்துக்குடிக்கு சிபி சிஐ டி போலீஸ் போயிட்டாங்க அண்ணாமலை தரமான மறு சம்பவம் !

annamalai ips
annamalai ips

காலையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசி விமர்சனம் செய்து இருந்தார் , ஆதாரம் இருந்தால் அண்ணாமலை வெளியிடவேண்டும் , அண்ணாமலை குறிப்பிடுவது எல்லாம் ஆதாரம் இல்லை என குறிப்பிட்டார் , மேலும் அண்ணாமலை மன்னிப்பு கேட்க  வேண்டும் எனவும் செந்தில்பாலாஜி வலியுறுத்தி இருந்தார் .


இந்த சூழலில் அண்ணாமலை செந்தில்பாலாஜி கருத்திற்கு மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது முடிந்தால் நீதிமன்றம் செல்லுங்கள் அங்கு பார்த்து கொள்கிறோம் என அதிரடி காட்டி இருந்தார் அண்ணாமலை , இந்நிலையில் தற்போது அண்ணாமலை மாலை செய்தியாளர்களை சந்தித்தார் , பாஜக மாநில பொதுச்செயலாளர் அருண் சிங் வருகையை  முன்னிட்டு நடந்த கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை .,

ஒருவருக்கு தகுதி தராதரம் வேண்டும் , போக்குவரத்து துறையில் ஊழல் செய்தவர் , போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ஊழல் செய்தவர் , இப்போது மின்துறையில் ஊழல் செய்கிறார் , நாங்கள்  ஊழல் சம்பவம் குறித்து குறிப்பிட்ட பிறகு தற்போது பணம் நிலுவையில் இருக்கும் நிறுவனங்கள் பட்டியலை கேட்டு மெயில் வருகிறது , இதெல்லாம் ஏன் ? மிகுந்த நுட்பமாக ஊழல்  செய்ய செந்தில் பாலாஜி திட்டம் போட்டு இருக்கிறார் , அடுத்த மூன்று மாதத்தில் BGR   நிறுவனத்தின் வளர்ச்சியை பாருங்கள் எனவும் குறிப்பிட்டார் அண்ணாமலை .

சமூகநலத்துறை அமைச்சர் மீது  குற்றம் சுமத்திய அண்ணாமலை அரசு பணியில் இருக்கும் பணியாளர்களை தனது வீட்டில் மூன்று வேலை ஷிப்ட் அடிப்படையில் வேலை வாங்கி வருவதாகவும் , ஆடியோ உள்ளது அதனை வெளியிட்டால் அந்த பெண்ணின்  வேலை பாதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார் , நாங்கள் சொல்வது முதல்வர் கவனத்திற்கு சென்றுள்ளது , தூத்துக்குடியில் சிபிசிஐடி போலீசார் 4% கமிஷன் வாங்கினார்களா? என சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் விசாரணை செய்து இருக்கிறார்கள் .

பொறுத்து இருந்து பாருங்கள் செந்தில் பாலாஜி ஒவ்வொன்றாக பேச பேச ஒவ்வொரு ஆதாரமாக நாங்கள் வெளியில் கொண்டுவருவோம் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார் . மீதி பணத்தை விடுவிக்க  4% கமிஷன் வாங்கினார்கள்  என எந்த நிறுவனத்தின் பெயரை அண்ணாமலை  குறிப்பிட்டாரோ அங்கு சென்று லஞ்ச ஒழிப்புத்துறை  அந்த நிறுவனத்திடம் விசாரணை நடத்தி இருப்பது அண்ணாமலை தெரிவிக்கும் கருத்துக்கள் ஆளும் கட்சிக்கு கடும் நெருக்கடியை உண்டாக்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது . அண்ணாமலை சற்றுமுன் இதுகுறித்து விரிவாக அளித்த பேட்டியை பார்க்க கிளிக் செய்யவும் .