24 special

டெல்லியில் நடந்த அந்த நள்ளிரவு மாற்றம்! பிரிட்டிஷ் விசுவாசக் கும்பலுக்குப் பலத்த அடி மோடியின் மாஸ்டர் பிளான்

PMMODI
PMMODI

பாரத தேசத்தின் இதயமாகத் திகழும் டெல்லியில், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த ஒரு மாயத்திரை கடந்த சில ஆண்டுகளில் அதிரடியாகக் கிழிக்கப்பட்டிருக்கிறது. 1911-ல் ஆங்கிலேயர்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட கல்கத்தாவிலிருந்து டெல்லிக்குத் தலைநகரை மாற்றியபோது, எட்வின் லுட்யன் என்ற பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞரைக் கொண்டு ஒரு பிரம்மாண்டமான அதிகார மையத்தை உருவாக்கினார்கள். இன்று நாம் காணும் பழைய நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை (ராஷ்டிரபதி பவன்) போன்றவை அந்த அந்நிய ஆதிக்கத்தின் அடையாளங்களாகவே திகழ்ந்தன. ஆனால், பிரதமர் மோடியின் வருகைக்குப் பிறகு, அந்த 'லூட்டியன்ஸ் டெல்லி' என்ற போலி கௌரவம் சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது. அதன் உச்சக்கட்டமாக, ராஷ்டிரபதி பவனில் நீண்டகாலமாக இருந்த லுட்யனின் அடையாளங்கள் அகற்றப்பட்டு, அந்த மாளிகையில் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றிய ஒரே இந்தியரான, தமிழகத்தின் பெருமை மூதறிஞர் ராஜாஜியின் சிலை கம்பீரமாக நிறுவப்பட்டுள்ளது. இது அந்தப் பதவிக்கான கௌரவம் மட்டுமல்ல, அந்த மாளிகை இனி இந்தியர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதை உலகுக்குச் சொல்லும் அதிரடித் திட்டமாகும்.


இதே அதிரடிதான் இந்தியா கேட் பகுதியிலும் அரங்கேறியது. பல தசாப்தங்களாக அங்கே நின்றிருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னனின் காலியான பீடம், அடிமைத்தனத்தின் வடுவாகத் தெரிந்தது. அந்த இடத்தை மோடியின் அரசு நள்ளிரவு மாற்றமாக, இந்திய விடுதலைப் போராட்டத்தின் சிம்மசொப்பனமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரம்மாண்ட சிலையைக் கொண்டு நிரப்பியது. வெறும் சிலைகளை மாற்றுவது மோடியின் நோக்கமல்ல; அந்தச் சிலைகள் சுமந்து நின்ற அந்நியச் சிந்தனைகளை வேரோடு அறுப்பதே அவரது 'மாஸ்டர் பிளான்'. இதன் தொடர்ச்சியாகத்தான், ஆங்கிலேயர் ஆட்சியில் 'ராஜ்பாத்' (மன்னர் பாதை) என்று அழைக்கப்பட்ட சாலை, இன்று இந்தியக் குடிமகனின் பொறுப்பை உணர்த்தும் 'கர்த்தவ்யா பாதை' (கடமைப் பாதை) என உருமாறியுள்ளது. மேலும், தேசத்திற்காக ரத்தம் சிந்திய வீரர்களின் நினைவாக 'தேசிய போர் நினைவகம்' எழுப்பப்பட்டு, அங்கு எரியும் அணையா ஜோதி பாரதத்தின் வீரத்தை உலகிற்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

நிர்வாக ரீதியாகவும் பாரதம் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் மாளிகைக்கு இணையான பாதுகாப்பு மற்றும் நவீன வசதிகளுடன் பிரதமருக்காக உருவாக்கப்பட்ட புதிய அலுவலகத்திற்கு 'சேவா தீர்த்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது வெறும் கட்டிடம் அல்ல; பாரதத்தின் இறையாண்மையை யாராலும் அசைக்க முடியாது என்பதற்கான சான்று. மோடி அரசின் இந்த அதிரடி மாற்றங்கள் இத்துடன் நின்றுவிடப்போவதில்லை. புதிய ஜனாதிபதி மாளிகை கட்டப்படும்போது, பழைய பிரிட்டிஷ் கட்டிடங்கள் அனைத்தும் வெறும் காட்சிப் பொருட்களாக மாற்றப்படும். தேசப்பற்றாளர்களின் அடுத்த பெரிய எதிர்பார்ப்பு, முகலாயர்களின் அடையாளமான செங்கோட்டைக்கு மாற்றாக, சுதந்திர இந்தியாவின் வீரத்தைக் குறிக்கும்  'சுதந்திர இந்திய சதுக்கம்' அமைய வேண்டும் என்பதுதான். டெல்லியில் நடக்கும் இந்த மாற்றங்களைக் கண்டு, அந்நிய விசுவாசம் கொண்ட திராவிடக் கும்பல் இன்று அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. ஜார்ஜ் கோட்டையையும், கால்டுவெல்லையும் இன்னும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் இவர்களுக்கு, பாரதத்தின் இந்தச் சுதந்திர எழுச்சி வேப்பங்காயாகக் கசக்கிறது. ஆனால், காலம் மாறிவிட்டது; பாரதம் இன்று தன் வேர்களை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறது!