24 special

விஜய்யின் ஆர்டர்... வேகமெடுத்த வெற்றி கழகத்தின் நிர்வாகிகள்..!

Vijay
Vijay

தமிழ் திரை உலகில் முன்னனி நடிகராக இருக்கும் விஜய் தற்போது அவரின் செயல்பாடுகள் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. சினிமாவில் டாப் பத்து பேரில் முதல் ஆளாக இருக்கும் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்திற்கு வந்துள்ளார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரெடேஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு மேலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் விஜய். அதன் பிறகு அரசியலில் கவனம் செலுத்தும் விஜய் அவரின் உத்தரவின் பேரில் களத்தில் இறங்கி தீவிரமாக பணிகளை செய்து வருகின்றனர்.


கடந்த கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அரசியல் குறித்த நகர்வுகளை படிப்படியாக மேற்கொள்ள ஆரம்பித்த விஜய். 2026 தேர்தலை குறி வைத்த விஜய் கடந்த சில ஆண்டுகளாக அதற்கான வேலைகளை செய்து வந்தார். தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கொள்கை மற்றும் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான வேலைகளை செய்து வருவதாக கூறியிருந்தார். இதனை அடுத்து விஜய் அரசியலுக்கு வந்தால் யார் பக்கம் நிற்பார் யாருடன் கூட்டணியை அமைப்பார் யாருக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற வகையிலான கிசுகிசுகளும் விமர்சனங்களும் அரசியல் வட்டாரங்களில் முன்வைக்கப்பட்டு வந்தது.

விஜயின் பிறந்தநாளுக்கு மாபெரும் கூட்டம் கூட்டி அதில் வெற்றி கழகத்தின் ஆதரவை காட்டுவதாக சில தகவல் வெளியானது. அரசியலில் நுழைந்த பிறகும் பல வகையான சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வரும் விஜய் 2026 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக அறிவித்திருந்தது அரசியல் வட்டாரம் முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளது. விஜயும் தனது கட்சியில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க அறிவுறுத்தியிருந்தார். அதற்கான வேலைகளை செய்து வரும் நிர்வாகிகள் தற்போது வேகமெடுத்துள்ளனர்.

மக்களவை தேர்தலுக்காக எந்த பணிகளும் செய்யாமல் இருந்த நிலையில், விஜய்க்கு பின்னால் இருக்கும் பலர் இந்த தேர்தலில் யாருக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. விஜய் இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை நமது இலக்கு 2026 என்று உறுதிப்படுத்தினார். இந்த சூழ்நிலையில், விஜி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவும் தொகுதி தோறும் ஏழை மாணவர்களுக்கு பயிலகம் மற்றும் நூலகத்தை அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளவும் கோடை காலத்தில் மக்களுக்கு தாகத்தை தணிக்க நீர் மோர் பந்தல் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு கட்சி தமிழக வெற்றி கழகத்தை கட்டமைக்க முழு பணிகளும் செய்திட விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதால் களத்தில் நிர்வாகிகள் தீயாக வேலைகளை செய்து வருகிறார்களாம். கூட்டணி யார் உடன் என்பது குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.