Cinema

ஃபஹத் ஃபாசில் மாதிரியே இருக்காரே இவரு யாரு தெரியுமா?

FAHAD FASIL
FAHAD FASIL

ஃபஹத் ஃபாசில் என்ற நடிகர்  மலையாள திரைப்படங்களில் ஒரு பிரபல நடிகராக இருந்து வருபவர் ஆவார். இவர் தற்போது மலையாள திரைப்படங்களில் மட்டும் அல்லாமல் பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு தமிழ்நாட்டிலும் தற்போது வரவேற்புகள் அதிகம் இருக்கிறது. இதுவரை 50 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள ஃபஹத் ஃபாசில் மலையாளத்தில் எப்படி சூப்பர் லீக் திரைப்படங்களை கொடுத்து வந்தாரோ அதேபோல தமிழிலும் தற்போது பல சூப்பர் கிட் திரைப்படங்களை தொடர்ந்து நடித்து அதை அனைத்தும் திரையரங்குகளில் பெரும் அளவு வெற்றி பெற்றும் வருகிறது. மேலும் இவர் தனது பணியை நடிப்பில் மட்டும் தொடராமல் தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்து வருகிறார். எனவே ஃபஹத் ஃபாசில் ஒரு நடிகர் மட்டுமின்றி அவர் ஒரு தயாரிப்பாளரும் கூட!!!  2002 ஆம் ஆண்டு முதல் மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த ஃபஹத் ஃபாசில் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து கேரள மக்கள் மனதில் இடம் பெற்று வந்தார்.


அதன் பின் அங்கு கண்ட வெற்றியை போலவே தமிழ் சினிமாவிலும் தொடர வேண்டும் என்று தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். சமீபத்தில் கூட உலக நாயகன் கமலஹாசன் இணைந்து விக்ரம் எனும் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றி அதில் வில்லன் கேரக்டர் நடிப்பு அசத்தியிருப்பார். அந்த திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும் எந்த அளவிற்கு கமலஹாசன் அவர்களுக்கு அந்த திரைப்படத்தில் வரவேற்க இருக்கிறதோ அதே அளவிற்கு ஃபஹத் ஃபாசில் அவர்களின் நடிப்பிற்கும் இந்த திரைப்படத்தில் ரசிகர்கள் அதிகமாக இருந்தனர்.அதன் பின் மலையாள திரைப்படங்களில் நடித்த இவருக்கு மாமன்னன் என்னும் திரைப்படத்தில் வில்லன் கேரக்டரில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் இவருடைய நடிப்பு மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாக அமைந்திருந்தது. அந்தத் திரைப்படத்தில் என்னதான் பெரிய வில்லன் கேரக்டரில் நடித்தாலும் கூட அவரின் கதாபாத்திரமானது அவரின் மனைவியை மதிப்பு அன்பு காட்டும் ஒருவராகவே அந்த திரைப்படத்தில் இவருடைய ரோல் அமைந்திருந்தது. 

எனவே அந்த திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு முன்பு இவர் நடித்த வில்லன் கேரக்டரை விட இது மிகவும் பிடித்த ஒன்றாகவே மாறிவிட்டது. நிஜ வாழ்க்கையில் இவருடைய மனைவி யார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்!! மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் ஹீரோயின் ஆக நடித்த வரும் நஸ்ரியா தான் ஃபஹத் ஃபாசில் மனைவியாவார். இவர்கள் இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து வருவதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். உலகத்தில் ஒருவரை போலவே ஏழு பெயர்கள் ஒன்றாக இருப்பார்கள் என்று நாம் கேட்டிருப்போம்!! ஆனால் தற்போது  அதை உண்மை என உணர்த்தும் வகையில் அசல்  ஃபஹத் ஃபாசில் போலவே ஒருவர் இருக்கிறார். அவர் ரீல் செய்து இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதனை பார்க்கும்போது ரசிகர்கள் அனைவரும் இது ஃபஹத் ஃபாசில் தான் என்று ஆர்வமுடன் பார்த்தனர். ஆனால் உண்மையில் அவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா???  அந்த வீடியோவில் வரும் நபரின் பெயர் அக்கிபக்கர் ஆகும். கேரளமாநிலம் கொடுங்கல்லூரைச் சேர்ந்த இவர் மஸ்கட்டில் பணிபுரிகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இவர் ஃபஹத் ஃபாசில் போலவே மேக்கப் செய்துள்ளார். எனவே இவரின் ரீல்ஸ்களை பார்க்கும் ரசிகர்கள் இது உண்மையில் அவர்தான் தான் என்றும் விரும்பிப் பார்க்கின்றனர் மேலும் இவருக்கு பல லைக்குகளும் குவிந்த வண்ணமே இருந்து வருகிறது. தற்போது இது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது!!