24 special

வடிவேலுவை அடிக்கலையா என கேட்ட விஜயகாந்த்! .....வடிவேல் - விஜயகாந்த் மோதல் உண்மையை உடைத்த நடிகரின் பகீர் தகவல்!....

vijayakanth, vadivelu
vijayakanth, vadivelu

கேப்டன் விஜயகாந்த் சினிமாவில் கலக்கி வந்த நேரத்தில் வடிவேலுவை சினிமா வாழ்க்கையில் அறிமுகப்படுத்தியவர் நடிகர் விஜயகாந்த், ஒரு கட்டத்தில் நடிகர் விஜயகாந்திற்கு வடிவேலுக்கும் மோதல் ஏற்பட்டு இது நாள் வரை இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொள்ளவில்லை என்பது தான் உண்மை. வடிவேலு விஜயகாந்த் மட்டுமின்றி திரையுலகில் பலரிடமும் மோதல் ஏற்பட்டு படவாய்ப்பு இழந்தார் என பல தகவல் வந்துள்ளது.தேமுதிக கட்சி தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த 18ஆம் தேதி காய்ச்சல், இருமல், நுரையீரல் தொற்று காரணமாக ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் குறித்து பல்வேறு தகவலை வந்தன,. அந்த நேரத்தில் அவரது மனைவி விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் உள்ளார் என்றும் அவர் கூடிய விரைவில் வீடு திரும்புவார் என கூறினார். இதையடுத்து அவருக்கு 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.


இந்த நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் வழக்கமான பரிசோதனைக்காக மியாட்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு காலமானார். இந்த நிலையில், திரை வாழ்க்கையில் நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கும் கேப்டன் விஜயகாந்துக்கும் ஏற்பட்ட மோதல் என்றவென்றால் வடிவேலுக்கு சின்னக்கவுண்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார் நடிகர் விஜயகாந்த். அப்போது, வடிவேலுவுக்கு சம்பளம் குறைவு தானாம். அதன் பிறகு வடிவேலுக்கு நிறைய படத்தில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததும் விஜயகாந்த் தானம். குறிப்பாக இந்த அளவிற்கு நடிகர் வடிவேலு வளர்ந்ததற்கு காரணம் விஜயகாந்த் என்று தான் மொத்த சினிமா வட்டாரமும் கூறுகிறது. வடிவேல் வளர்ந்த பிறகு விஜயகாந்த் வீட்டிற்கு முன்னே வீடு வாங்கினார். 

அந்த நேரத்தில் விஜயகாந்தின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். அவருக்கு வடிவேலின் வீட்டிற்கு எதிர் வீடு. துக்கம் விசாரிக்க வந்த சொந்தக்காரர்கள் வடிவேல் வீட்டுக்கு முன்பக்கம் வாகனத்தை நிறுத்தினர். இதனால் வடிவேல் கோபப்பட்டு வண்டியை எடுக்குமாறு கூறினார். சடலத்தை எடுத்தவுடன் வண்டியை எடுத்துவிட்டு புறப்படுவோம் என விஜயகாந்த் உறவினர்கள் கூறினர். இங்கு தான் விஜயகாந்துக்கும் வடிவேலுக்கும் மோதல் ஏற்பட்டதாக கூறுகின்றனர். அதன் பிறகு விஜயகாந்துக்கு நெருக்கமான துணை நடிகர் மீசை ராஜேந்திரன் படவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி அலுவலகத்திற்கு அழைத்துள்ளார் அப்போது வடிவேலு மீசை ராஜேந்திரனை அவமானப்படுத்தி வெளியில் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் விஜயகாந்துக்கு வர உடனே மீசை ராஜேந்திரனை அழைத்து வடிவேலுக்கு தொலைபேசியில் தொடர்பு கொன்டுள்ளார் அழைப்பை எடுக்காததால் மீசை ராஜேந்திரன் சொன்னதை கேட்டு அவர் அப்படி செய்தார் என்றால் அவரை சும்மா ஏன் விட்டு வந்தீங்க என்று கேட்டுள்ளார். இல்ல கேப்டன் அவர் பெரிய நடிகர் என்று சொல்ல என்ன பெரிய நடிகர் இப்படி பண்ணலாமா என்று கேட்க, நடிகர் சங்கம் வரும் என்று ராஜேந்திரன் பதில் அளித்துள்ளார். என்ன நடிகர் சங்கம் நம்மை மீறி நடிகர் சங்கம் வந்துவிடுவமா என்று கேட்டுள்ளார்.  அவனுக்கு சின்னக்கவுண்டர் படத்தில் வாய்ப்பு வாங்கி கொடுத்தது நான் தான். மாற்று துணி இல்லாமல் இருந்தவனுக்கு 8 வேட்டி 8 சட்டை வாங்கி கொடுத்தது நான் தான் என்று கூறியதாக மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தின் பிறகு அடையாளம் தெரியாத சிலர் வடிவேலு வீடு, அலுவலகம் மீது கறைகளை வீசி தாக்குதலை நடத்தினர். இதனால் வடிவேலு விஜயகாந்தின் தேமுதிக கட்சியின் மீது காவலநிலையில் புகார் அளித்தது பெரிய சம்பவமாக மாறியதும். இதனால் விஜயகாந்த் மற்றும் வடிவேலு பகை நீடித்து வந்தது, மேலும் விஜயகாந்துக்கு எதிர்க்கா வடிவேலு அரசியல் செய்ய ஆரம்பித்தார் இது ரசிகர்களுக்கு மிகுந்த வேதனை அளித்தது. அதோடாது வடிவேலுவின் திரைப்பயணம் முடிவுக்கு வந்தது.