24 special

கை விரித்த அறிவாலயம் கடுப்பில் பொன்முடி

mk stalin, ponmudi
mk stalin, ponmudi

2006 - 2011 ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2011 இல் அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. இருப்பினும் அந்த வழக்கில் இருவரையும் விடுதலை செய்வதாக விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து. இதனை அடுத்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது ஆனால் பெரிதும் கவனிக்கப்படாத அமைச்சர் பொன்முடியின் வழக்கு கிடப்பிலே கிடந்தது! அந்த நிலையில் சிறப்பு நீதிமன்றங்களின் நீதிபதியாக இருந்த ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர் பொன்முடியின் வழக்கை பார்த்து மிகவும் ஆச்சரியம் அடைந்து இது போன்ற குளறுபடி நிறைந்த வழக்கு விசாரணையை இதற்கு முன்பு நான் எங்கும் பார்க்கவில்லை இதனால் இந்த வழக்கை மறு ஆய்வுக்கு உத்தரவிடுகிறேன் என்றும் இது குறித்து அமைச்சர் பொன் முடியும் அவரது மனைவியும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.


அதுவும் தற்பொழுது திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பிலிருந்து மேலும் உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடியின் வழக்கு மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது திமுக தரப்பிற்கு அதிர்ச்சியையும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் திமுகவிற்கு ஏற்படுத்தியது. இதனை அடுத்து கடந்த சில மாதங்களாக தீவிரம் பெற்றிருந்த அமைச்சர் பொன்முடியின் இந்த வழக்கு தற்பொழுது ஒரு முடிவை எட்டி உள்ளது அதாவது அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதாக நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார் இந்த உத்தரவு குறித்த அறிவிப்புகள் வெளியானதில் இருந்து பொன்முடி தரப்பிற்கு என்ன செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை முன்னதாக அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதும் அதனை தொடர்ந்து விசாரணை செய்வதற்காக அமலாக்கத்துறை பொன்முடியை கைது செய்து சென்றதும் பரபரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி அன்று பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் நீதிமன்றத்தில் ஆஜரானார் அப்பொழுது இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாகவும் ஒரு மாதத்திற்கு தள்ளி வைத்து தண்டனைகளை தீர்ப்பளித்தார் நீதிபதி ஜெயச்சந்திரன். இதற்கிடையில் அமைச்சரின் விடுதலை செய்வதாக அறிவித்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதாக நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கபட்டிருக்க வேண்டும் ஆனால் திமுக அமைச்சரவை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தது அதற்கு பிறகு அமைச்சர் பொன்முடி மற்றும் விசாலாட்சி இருவரும் தண்டனைகளை பெற்றவுடன் பொன்முடி பதவி பறிக்கப்பட்டதாகவும் அவருக்கு வழங்கப்பட்ட சேவைகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. 

இந்த நிலையில் அறிவாலயம் பக்கம் உதவிகளை நாடி சென்ற பொன்முடிக்கு அறிவாலய தரப்பு பொன்முடியை கை கழுவி விட்டது போன்ற தகவலை கொடுத்துள்ளது. அதாவது பொன்முடி தன் வழக்கை தானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவாலய தரப்பில் குறிப்பாக முதல்வர் தரப்பில் இருந்து பொன்முடியை கைவிட்டு விட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதுகுறித்து மூத்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், அவர் கேஸை அவர்தான் பாத்துக்கும். இதுக்கு கட்சி என்ன செய்ய முடியும் என முதல்வரின் உதவியாளர் தினேஷ் என குறிப்பிட்டு இதற்கு கீழே அமைச்சர் பொன்முடியின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது தற்பொழுது இணையத்தில் வைரலாவது மட்டுமல்லாமல் இதனால் பொன்முடி தரப்பு கடும் கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.