Cinema

இது நம்ம லிஸ்டுலேயே இல்லையே!.. விஜயின் புதிய கெட்டப்.... வெளியானது மாஸ் அப்டேட்!

actor vijay
actor vijay

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் நடித்து முடித்து வெளியாக இருக்கும் படம் லியோ, படத்தின் சூட்டிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அடுத்தபடியாக தளபதி 68 படத்தின் பேச்சுகளும் தொடங்கியது. லியோ படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து பட குழுவினர் கொடுத்த நிலையில், ரசிகர்களின் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பில் மூழ்கியுள்ளனர். லியோ படம் இந்த மாதம் 19ம் தேதி வெளியாக உள்ளது.இந்நிலையில் படத்தின் ஆடியோ லான்ச் ஏற்பாடு செய்த படக்குழுவினருக்கு ஆளும் கட்சியான திமுக அரசு நெருக்கடி கொடுத்ததன் காரணமாக ஆடியோ லான்ச் இல்லை என்று படக்குழுவினர் இதையும் ஒரு அப்டேட்டாக வெளியிட்டனர். இதனால் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி தங்களது எதிர்ப்புகளை திமுக அரசுக்கு தெரிவித்தனர். எனினும் படம் 19ஆம் தேதி வெளியாவது உறுதியானது.ஏற்கனவே தளபதி விஜய் சட்டமன்றத் தேர்தலில் அரசியலில் களம் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக பேச்சுகள் எழுந்தன. அதற்கான பணிகளும் மக்கள் இயக்கம் மூலம் தொடர்ந்திருந்தார்.


எனவே படத்தில் நெருக்கடிக்கு எல்லாம் திமுக அரசே காரணம் என சமூக வலைதளத்தில் கருத்துக்களும் தொடங்கியது. அதையெல்லாம்  கண்டு கொள்ளாமல் விஜய் அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்கி விட்டார்.தமிழ் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற படத்தில் விஜய் ஒப்பந்தமாகி நடிக்க உள்ளார். வெங்கட் பிரபு ஏற்கனவே அல்டிமேட் ஸ்டார் அஜித்தை வைத்து மெகா ஹிட் படத்தை (மங்காத்தா) கொடுத்துள்ளார். தொடர்ந்து டைம் லூப், கிரிக்கெட்டை வைத்து காமெடி படம் உள்ளிட்ட பல படங்களை ஹிட் ஆக்கியுள்ளார். அந்த லிஸ்டில் தற்போது தளபதியை சேர்த்துள்ளார். தளபதி 68 படத்தில் முன்னதாக ஹீரோயினாக யாரை தேர்வு செய்யலாம் என்று விஜயிடம் கேட்டதற்கு 90 கிட்ஸ் நடிகை யாரையும் செலக்ட் பண்ண வேண்டாம், 2k கிட்ஸ் ஏற்றார் போல் இளம் நடிகையை தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தாராம். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பாளர் என்று படக்குழு அறிவித்தது ரசிகர்களிடம் உற்சாகத்தில் ஆழ்த்தியது. யுவன் சங்கர் ராஜா, விஜய் கூட்டணி முன்னதாக 2003 ஆம் ஆண்டு புதிய கீதை ஒன்று சேர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை பிரசாந்த் ஸ்டுடியோவில் இன்று தளபதி 68 பூஜை கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் ஏஜிஎஸ் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட படக் குழுவினர் பங்கேற்றனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். படத்தில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் யுவன் சங்கர் ராஜா போட்டு முடித்து விட்டதாகவும், லியோ படம் வெளியான பிறகு இந்த படத்தின் அப்டேட் வரும் என கூறப்படுகிறது. பூஜை நடந்து முடிந்தவுடன் அப்டேட்டுகள் வெளியாகி உள்ளன. அதாவது முன்னதாக இந்த படத்தில் கூறப்பட்டது விஜய் இரண்டு வேடத்தில் நடிக்க உள்ளார் என்று தெரிந்ததே, தற்போது விஜய் தளபதி 68-ல் 25 வயசு விஜயை பார்க்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.  இளம் வயது விஜயின் கதாபாத்திரம் 25 வயது எனவும், இந்தத் தோற்றத்திற்காக அட்வான்ஸ் டெக்னாலஜி கொண்டு எடுக்கப்பட உள்ளதாகவும் மேலும், 20 கேமராக்களை கொண்டு பிரத்தியேகமான சண்டை காட்சிகளும் இடம்பெறும் என படக் குழு இந்த மாஸ் அப்டேட்டை தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் குஷியில் மிதக்கின்றனர். படத்தின் காட்சிகள் நாளை அக் ., 03 தொடங்கி 16ம் தேதி வரை நடைபெறும் எனவும், சிறிய இடைவேளைக்குப் பிறகு வெளிநாட்டில் பட காட்சிகள் படமாக்கப்படும் என கூறப்படுகிறது.