Cinema

கட்சி தலைவராக ரசிகர்களை சந்தித்த விஜய்..!

Vijay
Vijay

சினிமாவில் தளபதியாகவும் அரசியலில் தலைவராகவும் அறிமுகமானவர் விஜய், இவரின் அரசியல் பயணம் கடந்த ஒருவாரமாக பேசட்டப்பட்டு வருகிறது. கட்சியை ஆரம்பிப்பவர்கள் மக்களிடம் நேருக்கு நேராக இருந்து தனது கட்சியின் பெயரை அறிவிக்காமல் இணையத்தில் சொல்லிவிடுவது சாதாரண விஷயம் இல்லை என விஜய் மீது ஒரு விமர்சனம் வருகிறது. இந்நிலையில், கட்சியின் அறிவிப்புக்கு பின் நடிகராக இல்லாமல் தான் ஒரு அரசியல் தலைவராக முதன் முறையாக நேரில் ரசிகர்கள் கூட்டத்தை சந்தித்துள்ளார்.


விஜய் அரசியலில் இறங்கியதும் தான் சினிமாவில் ஒப்புக்கொண்ட படங்களை தாண்டி வேறு எந்த வித படத்திலும் நடிக்க மாட்டேன் என கூறியிருந்தார். இதனால் விஜய் தற்போது நடித்து வரும் கோட் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இயக்குனர் வெங்கட்பிரபுவுடன் கடந்த ஒருமாதமாக அந்த படத்தை முடித்துவிட விஜய் கூறி வருவதாக சில தகவல் வந்தன மற்றும் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்  ரசிகர்களை தொடர்ந்து சந்தித்து வந்ததால் விஜய் அரசியலில் குதித்து விடவுவார் என பெருவாரியாக கோடம்பாக்கத்தை சேர்ந்தவர்களே கூறினர். தற்போது விஜய் அரசியல் குறித்து அதிகாரபூர்வமாக கூறியது ரசிகர்களை மகிழ்ச்சியில் தள்ளியது.

இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படத்தில் அதிகமாக மகன் விஜய்க்குத் தான் ஸ்கோப் இருக்கிறது என தெரிகிறது. விஜயின் கெட்டப்பை பார்க்கும்போது, விஜய்யின் மகன் ரோலுக்கு தான் பெரும் மவுஸ் இருக்கும் என தெரிகிறது. மீசை இல்லாத லுக்கில் அதிக நாட்கள் நடித்து வரும் விஜய் பொங்கலுக்கு பின்னர் மீண்டும் இன்று ரசிகர்களை சந்தித்துள்ளார். இதற்கு முன் இல்லாத ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும் விதமாக இருந்தது அங்கு விஜய்க்கு கூட்டத்தில் இருந்து ரசிகர் ஒருவர் மாலையை தூக்கி போட்டார். அப்போது விஜய் அந்த மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டு ரசிகர்கள் முன்னிலையில் செல்ஃபி வீடியோ எடுத்து இணையத்தில் வைரலாகி பல கட்சிகளுக்கு பயத்தை உண்டாக்கி இருக்கும் என்றே தெரிகிறது.

இந்த கூட்டத்தில் இளைஞர்கள் இன்றையை மற்றும் நாளையே வாக்காளர்கள் என அவர்களை ஒட்டுமொத்தமாக விஜய் கவர்ந்து விட்டால் பெரியளவில் வெற்றியடைவார் என்றே தெரிகிறது. கூடிய சீக்கிரமே கோட் பட சூட்டிங் முடிந்து இந்த ஆண்டு படம் ரிலீஸ் ஆகும் போது மிகப்பெரிய வசூல் வேட்டையை அந்த படம் நிகழ்த்தும் என்றும் கூறுகின்றனர். விஜய் அரசியலுக்கு வருவதால் பல இயக்குனர்கள் சினிமாவில் இனி எப்படி கல்லா கட்டப்போறம் என வருந்துகின்றனர். ரஜினிக்கு இனி சினிமாவில் போட்டியாக யாரு இருக்க போகிறார் அஜித்துக்கு போட்டியாகவும் இனி ஒரு நடிகர் உருவாக பல வரும் ஆகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிகின்றனர்.