
தமிழகத்தில் திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை பிரிக்க களமிறக்கப்பட்டவர் தான் நடிகர் விஜய்,திமுகவின் பி டீம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக இதுவரை உதயநிதி ஸ்டாலின் கருணாநிதி என பெயரை கூட உச்சரிக்காமல் இருக்கிறார் நடிகர் விஜய். விஜயுடன் இணைந்துள்ளவர் தான் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனன். லாட்டரி மன்னன் என்று அழைக்கப்படும் கோவையைச் சேர்ந்த மார்ட்டின், தனது லாட்டரி வியாபாரத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டுவதாக,தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேற்குவங்க ஆளும் கட்சியான திரிணமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடையாக பெற்ற மொத்த நிதி 1592 கோடி ரூபாயில், மார்ட்டின் நிறுவனம் மட்டுமே 542 கோடி நிதி வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி தி.மு.க.,வுக்கு 503 கோடி ரூபாய், மார்ட்டின் நிறுவனம் நன்கொடை வழங்கியுள்ளது.தி.மு.க., தேர்தல் பத்திர நன்கொடையாக பெற்ற 632 கோடி ரூபாயில், மார்ட்டின் நிறுவனம் மட்டுமே 503 கோடி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமலாக்கத்துறை விசாரணையில் மேலும் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன சொத்துக்களை வாங்கி குவிப்பதற்காகவே, 350 கம்பெனிகளையும், ஸ்பெஷல் பர்பஸ் வெகிக்கிள் நிறுவனங்களையும் மார்ட்டின் தொடங்கியுள்ளார்.
ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் டர்ன் ஓவர் இருந்தாலும் மார்ட்டின் நிறுவனம் மிகக்குறைந்த லாபத்தையே கணக்கு காட்டி உள்ளது. இந்த நிறுவனம் சிக்கிம் லாட்டரி தான் பிரதானமாக விற்கிறது. பெரும் தொகை சம்பாதித்த போதும் சிக்கிம் மாநில அரசுக்கு 2014ம் ஆண்டு வரை வருவாய் பகிர்வாக 8 முதல் 10 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் தான் தாவி அர்ஜுனை வைத்து திமுக விஜயை இயக்கி வருகிறது, என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பாஜக மீதான விமர்சனம் தான் அதிகமாக வைக்கவேண்டும் விஜய்க்கு உத்தரவுபோட்டுள்ளது திமுக தலைமை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.. விஜய் மற்றும் இதர கட்சிகளை இணைத்து கொண்டு ஆட்சிக்கு வந்தாலும் அல்லது திமுகவுடன் கைகோர்த்து கூட்டணி ஆட்சி அமைந்தாலும் தமிழகத்தில் லாட்டரி தொழிலை மீண்டும் தொடங்க லாட்டரி மார்ட்டின் குடும்பத்தினருக்கு உதவ விஜய் உத்தரவாதம் கொடுத்ததாக தகவல். இதன் பேரில் தான் ஆதவ் அர்ஜுனா விஜய்க்கு அனைத்து உதவியும் செய்து வருகிறாராம். ஏற்கனவே தி.மு.க., தேர்தல் பத்திர நன்கொடையாக பெற்ற 632 கோடி ரூபாயில், மார்ட்டின் நிறுவனம் மட்டுமே 503 கோடி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையேதிமுக மேல்மட்டமும் விஜய் தரப்பும் அடிக்கடி ரகசிய சந்திப்புக்களை நடத்தி வருகிறதாம். மேலும் திமுக அதிக சீட்களில் போட்டியிடவும் முடிவெடுத்துள்ளது. இதற்கு கூட்டணி கட்சிகள் தடையாக இருக்க ஆரம்பித்துள்ளன. அவர்களை தனியாக அதிமுக கூட்டணிக்கு போவதை தடுக்க விஜய் என்ற ஆயுதத்தை எடுத்துள்ளது. மக்கள் நல கூட்டணி போல் அமைக்க தான் விஜயை களமிறக்கி உள்ளது திமுக. இதற்காக அவர்கள் மீண்டும் தமிழகத்தில் லாட்டரி விற்பனை.
நடிகர் விஜய் "திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதைக் கூறிவிட்டார். அதே நேரம், அதிமுகவும் தவெக கூட்டணிக்கு வர ஆர்வம் காட்டாது.எனவே அதிருப்தியில் இருக்கும் சிறிய கட்சிகளுக்குத் தனது அறிக்கை மூலம் மறைமுக அழைப்பு விடுத்துள்ளார் நடிகர் விஜய்