24 special

லேசாக சுண்டிவிட்ட நிர்மலா சீதாராமன், வசமாக வந்து சிக்கிய உதயநிதி!

udhayanithi, nirmala sitharaman
udhayanithi, nirmala sitharaman

கடந்த 3 தினங்களுக்கு முன்பு டெல்லியில் தமிழகச் செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பத்திரிகையாளர்கள் முன்வைத்த கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்ததோடு திமுக அரசை நோக்கி சில கேள்விகளையும் முன் வைத்தார். அதில் தமிழக அமைச்சர் உதயநிதி உன் அப்பன் வீட்டு பணமா என்று கேட்டுள்ளார் இந்த பேச்சுகள் அரசியலில் இருப்பது நல்லதல்ல அவரும் அவரது கட்சியும் அரசியலில் இன்னும் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் அதற்கு நாம் பேசும் மொழி முக்கியம் அவரது தாத்தா எப்பேர்பட்ட ஒரு தமிழ் அறிஞர். ஒரு முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் அந்த பதவிக்கு ஏற்ற வகையில் பேச வேண்டும் வார்த்தைகளும் அளந்து வர வேண்டும். மழையால் மக்கள் அவதியுற்று இருக்கும் பொழுது அனுப்பி வைக்கப்பட்ட தொகை மத்திய அரசுடையதா என்று பேசுவது ஏற்புடையதல்ல பாதிப்பு வருவதற்கு முன்பாக ரூபாய் 900 கோடியை அனுப்பி வைத்து விட்டோம் இருப்பினும் டெல்லி கூட்டணியில் ஆலோசனைகளை முடித்துவிட்டு பிரதமரை அவரது தந்தையான முதல்வர் மு க ஸ்டாலின் சந்தித்து விட்டு திரும்பினார்.


எனவே உதயநிதி ஸ்டாலின் சற்று பொறுமையாக இருந்து வாய் வார்த்தைகளையும் பொறுமையாக கையாள வேண்டும் என்று தெரிவித்திருந்தார். நிர்மலா சீதாராமனின் இந்த கருத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுக்கும் வகையில் பெரும் வம்பில் சிக்கி உள்ளார். அதாவது சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்டார் உதயநிதி ஸ்டாலின், அந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் அடக்கமாக இருக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளாரே அதற்கு உங்கள் கருத்து என பத்திரிகையாளர்கள் கேள்வியை முன் வைத்த போது நான் ஏதாவது கேட்ட வார்த்தையா பேசினேன் அல்லது பயன்படுத்தியா இருந்தேன் மரியாதைக்குரிய நிதி அமைச்சரிடம் மரியாதையாக தான் கேட்கிறேன்!

என்னுடைய சொந்த செலவிற்காகவும் நான் கேட்கவில்லை! தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பேரிடரை மத்திய அரசு பேரிடர் என்று ஒத்துக்கொள்வதே இல்லை! சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்ட மக்களும் தென் மாவட்ட மக்களின் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் வெள்ள பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் மீளாமல் உள்ளனர், அவர்களை பாதிப்பில் இருந்து மீட்பதற்காகவே தற்போது நாம் செலுத்திய வரியை கேட்கிறோம். நிதி வேண்டும் என்பதை மீண்டும் நிதி அமைச்சருக்காக மரியாதையாக கேட்கிறேன் அப்பன் என சொன்னது கேட்ட வார்த்தையா? நிதி அமைச்சரின் மரியாதைக்குரிய வணக்கத்திற்குரிய அப்பா என வேண்டுமானால் சொல்லிக் கொள்கிறேன் என்று நிதியமைச்சர் கூறிய அறிவுரைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். இது அவருக்கே பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது ஏற்கனவே உதயநிதியை பொதுவெளிகளில் அதிகமாக பேச வேண்டாம் சனாதனம் குறித்து அவர் பேசிய கருத்துகளால் ஏற்பட்ட பின்னடைவுகளும் தோல்விகளும் போதும் என INDI கூட்டணி திமுகவை கேட்டுக்கொண்ட வேளையில் இப்படி நிர்மலா சீதாராமன் பேசியதற்கு உதயநிதி எதையாவது பேசி வைத்து வம்பு இழுத்து விடுவாரோ? அதனால் கூட்டணிக்கு அடுத்து பெரும் ஆபத்து வந்துவிடுமோ என INDI கூட்டணியின் தலைவர்கள் திமுகவை அழைத்து உதயநிதி பேச வேண்டாம் அமைதியாக இருக்கச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளனராம். நிர்மலா சீதாராமன் உதயநிதியை, "அப்பன் வீட்டு காசா என கூறியுள்ளார்" என்ற விமர்சனத்தை வைத்து உதயநிதியை பேசவிட்ட காரணத்தினால் தற்பொழுது மீண்டும் INDI கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.