
2014 மற்றும் 2019 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் மத்தியில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்து வருகிறது. இதற்கு முன்பு இந்தியா காணாத பல வெற்றிகளையும் சாதனைகளையும் முன்னேற்றங்களையும் தற்போது இந்தியா கண்டுள்ளதற்கு காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் அவர் நாட்டிற்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிகள் எனவும் கூறப்படுகிறது. மேலும் மூன்றாவது முறை பாஜக ஆட்சி அமைத்து நாட்டின் முன்னேற்றத்தை இன்னும் உயர்த்துவதற்கு பல முக்கிய இலக்குகளையும் அதற்கான நடவடிக்கைகளிலும் தற்பொழுது தீவிரமாக இறங்கி உள்ளது. இப்படி ஒரு பக்கம் பாஜக தனது செல்வாக்கை உயர்த்தி கொண்டே இருக்கும் நிலையில் காங்கிரஸ் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே INDI கூட்டணியை அமைத்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
அப்படி INDI கூட்டணி அளித்த தெம்பில் ஐந்து மாநிலங்களின் தேர்தலை காங்கிரஸ் தீவிரமாக எதிர்கொண்டது இருப்பினும் அந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று காங்கிரசை தோல்வியடைய செய்தது. அதிலும் குறிப்பாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்த ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் இரண்டையும் பாஜக வென்றது காங்கிரஸ் தனது செல்வாக்கை ஒவ்வொரு பகுதியிலும் இழந்து வருவதை காட்டியது. இதற்கு முக்கிய காரணமாக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் தோல்வி அடைந்தது காங்கிரசே! அதனால் இந்த தோல்வி INDI கூட்டணியிலும் எதிரொளித்து சில சச்சரவுகளை பெற்றது. முன்னதாக தமிழகத்தில் கடும் அதிருப்திகளை பெற்று வந்த திமுக அரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் சமீப காலத்தில் பெய்த மழை அந்த மழையால் ஏற்பட்ட பாதிப்பு அந்த பாதிப்புகளை சீரமைக்கும் வகையில் திறன் இல்லாமல் இருந்த திமுக அரசின் மீது மக்கள் கொண்ட கோபம் என அனைத்துமே திமுக அரசு 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியை தழுவுவதற்கு அடி கற்களாக மாறியது.
கொங்கு மண்டலம் தென் தமிழகம் தமிழகத்தின் தலைநகர் என அனைத்து பகுதிகளிலும் சரிவுகளை சந்தித்துக் கொண்டிருக்கும் திமுகவிற்கு 2024 ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்கொள்வதற்கு ஒரு வலுவான கட்சி தேவைப்படுகிறது. முன்னதாக தன்னிடமே பல கூட்டணி கட்சிகளை வைத்திருக்கும் திமுகவிற்கு அதில் உள்ள பின்னடைவுகள் திமுகவிற்கு உள்ள பின்னடைவுகளோடு சேர்ந்து தமிழகத்தில் திமுகவின் தோல்வியை தான் உறுதி செய்யும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரசை தற்பொழுது திமுக கழட்டி விட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் எம்எல்ஏக்கள் முதல்வர் மு க ஸ்டாலினை சந்திக்க வரும் பொழுது முதல்வர் செய்த காரியம் அமைந்துள்ளது. அதாவது சென்னை மற்றும் தென் தமிழக பகுதிகளில் மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு நிவாரண நிதியை தமிழக முதல்வரிடம் வழங்குவதற்காக கடந்த 22 ஆம் தேதி தலைமைச் செயலகத்திற்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி மற்றும் கட்சியின் பல உறுப்பினர்கள் வந்துள்ளனர்.
அவர்கள் வரும்போது தலைமைச் செயலகத்தில் முதல்வர் இல்லை என்றும் அதனால் அழகிரி மற்றும் அவருடன் சென்ற எம் பி, எம் எல் ஏக்கள் காத்திருக்கும் படியும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து அழகிரி தலைமையில் வந்த காங்கிரஸ் குழு அரை மணி நேரம் காத்திருந்தது இருப்பினும் முதல்வர் வருவது இயலாது அதனால் காசோலையை அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரியிடம் வழங்கி விட்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். எனினும் அழகிரி தலைமையிலான குழு முதல்வரை சந்தித்து தான் நிவாரண நிதி வழங்க முடியும் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணியை விசாரிக்கும் பொழுது காங்கிரசை கழட்டி விட முடிவெடுத்திருக்கும் திமுக தலைமை அந்த காரணத்திற்காகவே முதல்வர் வேண்டுமென்று அவர்களை காத்திருக்க வைத்து திருப்பி அனுப்பியுள்ளார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.