24 special

சோகத்தில் முதல்வர் ....! கிறிஸ்மஸ் அப்பவா இப்படி ஆகணும்...!

mk stalin, tejashwi yadav
mk stalin, tejashwi yadav

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்டு வரும் வேலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த போன் கால் தான் திமுகவின் முக்கிய நிர்வாகிகளை சற்று அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது. தேஜாஸ்வி யாதவ் முதல்வர் ஸ்டாலினிடம் தொடர்பு கொண்டு உங்களை போன்ற நல்ல தலைவர்கள் உள்ள கட்சியில் இப்படி நடக்கலாமா என தனது ஆதங்கத்தை கொட்டி இருப்பதாக வட இந்திய மாநிலங்களில் உள்ள ஊடகங்களும் பெரும் செய்தியாக வெளியிட்டு வருகின்றனர். உதயநிதி சர்ச்சை அடங்குவதற்குள் தயாநிதி மாறன் பீகார் மற்றும் உத்திரபிரதேச தொழிலாலர்கள் குறித்து பேசிய வீடியோ வட இந்தியாவை கொந்தளிக்க செய்து இருக்கிறது,  தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர்பிச்சை, 'கூகுள்' நிறுவனத்தில், தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். அவர், 'ஹிந்தி கற்றுக் கொண்டிருந்தால், கட்டுமானத் துறையில் ஒரு தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்திருப்பேன்' என்று கூறியிருப்பதை, கவனத்தில் கொள்ள வேண்டும்.


தமிழகத்தைச் சேர்ந்த குழந்தைகள், நன்கு படிக்கின்றனர். ஆங்கிலத்தில் புலமையுடன் உள்ளனர். அதனால், தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை கிடைத்து, கை நிறைய சம்பாதிக்கின்றனர். ஆனால், ஹிந்து மட்டுமே பயின்ற உ.பி., பீஹார் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், இங்கு வந்து தமிழில் பேசுகின்றனர். ஆனால், வீடு கட்டுவது, சாலைகள் அமைப்பது, கழிப்பறை கட்டுவது போன்ற பணிகளைத்தான் செய்கின்றனர். ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என, எல்லா நிலைகளிலும் வலியுறுத்தப்படுகிறது. ஆனால், ஹிந்தி மட்டும் கற்றுக் கொண்டால், இது தான் நிலைமை. இவ்வாறு அவர் பேசியுள்ளார். இந்தப் பேச்சு அடங்கிய வீடியோ பதிவுதான், தற்போது வட மாநிலங்களின் அரசியல் வட்டாரங்களில், பெரும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில், 2022 மே 11ல் நடந்த கூட்டத்திலும், இதே போன்றதொரு சர்ச்சை கருத்தை, தயாநிதி பேசியுள்ளார் என, சமூக வலைதளப் பதிவாளர்கள் சிலர் தகவல் பரப்ப, அது தொடர்பான வீடியோ பதிவை, எதிர்க்கட்சியினர் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பீகார் மாநில துணை முதல்வர் தேசஸ்வி யாதவ் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்,  தயாநிதி மாறன் சமூகத்தில் நிலவும் தீண்டாமை குறித்து கருத்து சொல்லி இருந்தால் பரவாயில்லை ஆனால் ஒட்டுமொத்த பீகார் மற்றும் உத்திர பிரதேச மக்களை இழிவாக பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது என நேரடியாக விமர்சனம் செய்துள்ளார் இது குறித்து முதல்வர் ஸ்டாலினிடமும் தனது கடும் கண்டனத்தை தேஷாஸ்வி யாதவ் பதிவு செய்துள்ளாதக கூறப்படுகிறது. விரைவில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் வருகின்ற இண்டி கூட்டணியில் இந்த பிரச்சனை குறித்து பேசவும் திட்டமிட்டு இருக்கிறாராம்,  ஏற்கனவே உதயநிதி சனாதனம் குறித்து பேசியதால் காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் படு தோல்வியை சந்தித்தது, இப்போது திமுக எம் பி தயாநிதி மாறன் வட மாநில தொழிலாளர்கள் குறித்து பேசியது ஒட்டு மொத்த வட மாநில மக்களையும் கொந்தளிக்க செய்து இருப்பதால் இண்டி கூட்டணியில் திமுக வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்க இருக்கிறார்காலம். இனியும் திமுகவினர் வாயை அடக்கவில்லை என்றால் இந்திய அளவில் இண்டி கூட்டணியில் இருந்தும் திமுக வெளியேறும் சூழல் வந்து இருப்பதால் முதல்வர் ஸ்டாலினுக்கு தற்போது பெரும் பிரச்சனை கிறிஸ்துமஸ் தினத்தில் வந்து சேர்ந்து இருக்கிறது.