24 special

வாய்ப்பே இல்லை செந்தில் பாலாஜி கனவில் கூட இது நடக்காது...!

SENTHILBALAJI, JOTHIMANI
SENTHILBALAJI, JOTHIMANI

லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மாட்டின் மீதும் மற்ற சிலர் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வந்தது. இதனை அடுத்து கடந்த 2018 சிபிஐ வழக்கை அடிப்படையாகக் கொண்டு மார்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிராக பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை புதிய வழக்கை பதிவு செய்தது. ஆனால் 2019-ல் சிபிஐ வழக்கிலிருந்து விடுவிக்க கூடிய மார்ட்டின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையிலே இருந்தது! மேலும் முதன்மை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி மார்ட்டின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உத்தரவு வெளியாகும் வரை அமலாக்க துறையின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சிறப்பு நீதிமன்றத்தில் மார்ட்டின் தரப்பு மனு தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரணைக்கு எடுத்த சிறப்பு நீதிமன்றம்  அமலாக்க துறையின் விசாரணைக்கு தடை விதிக்க கோரி மாட்டின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது.


                                                                                                                 

அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் மார்டின் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட இந்த மனு மீதான விசாரணை கடந்த 10 ஆம் தேதி விசாரணைக்கு வந்த பொழுது,, மார்ட்டின் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்ட்டின் மீது அமலாக்கத்துறை பதிந்த வழக்கின் மீதான விசாரணைக்கு தடை விதித்தது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகு மார்ட்டினுக்கு சாதகமான ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி இருப்பது அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது ஏனென்றால் இவரின் வழக்கை ஒத்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு இருப்பதால் மார்ட்டின் வழக்கில் நடந்தது போன்று செந்தில் பாலாஜியின் வழக்கில் நடக்குமா என்ற கேள்வியும் ஒருவேளை நடந்தால் செந்தில் பாலாஜி ஜாமினில் வெளிவருவார் என்ற வகையிலான பேச்சுக்களும் உலா வந்தது. இதனை அறிந்த திமுகவும் தேர்தல் நேரத்தில் செந்தில் பாலாஜி வெளியில் வந்தால் நமக்கு தான் பலம் என்ற வகையில் கனவு கோட்டைகளை கட்டிக் கொண்டிருந்த நிலையில் இது குறித்த பின்னணியை விசாரித்த பொழுது மார்ட்டின் வழக்கில் நடந்தது போன்று செந்தில் பாலாஜியின் வழக்கில் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற கருத்துக்களை மூத்த வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். 

                                                                                                           

அதாவது  2011 முதல் 2015 வரை தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுகவின் ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மக்களிடம் பண மோசடி செய்துள்ள புகார் கடந்த வருடத்தில் விஸ்வரூபம் எடுத்ததோடு செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை வருமான வரித்துறை சோதனை நடத்தி அவரை கைதும் செய்தது, இதனை அடுத்து இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி பல ஜாமின் மனுக்களை தாக்கல் செய்தும் அவை அனைத்துமே நிராகரிக்கப்பட்டு வருகிற நிலையில் இவர் மீதான வழக்கை  சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த நிலையில் எப்படி மார்ட்டின் தரப்பில் அமலாக்க துறை வழக்கு விசாரணையை தொடங்கக்கூடாது என்ற மனு தாக்கல் செய்யப்பட்டதோ அதேபோன்று செந்தில் பாலாஜியின் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

                                                                                                       

ஆனால் மார்ட்டினுக்கு நடந்தது போன்று செந்தில் பாலாஜிக்கு நடக்க இயலாது என்றும் இருவேறு முகமைகள் ஒருவர் மீது வழக்கு தொடர்ந்தால் அதனை ஒரே நேரத்தில் தான் விசாரிக்க வேண்டும் மார்ட்டின் வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கும் தரவுகளும் வேறு, சட்டப்பிரிவுகளும் வேறு அதனால் தான் மார்ட்டின் வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிட்டியது ஆனால் செந்தில் பாலாஜியின் வழக்கை பொறுத்தவரையில் இது போன்ற தீர்ப்பு கிடைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்று சில மூத்த வழக்கறிஞர்கள் கூறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலால் செந்தில் பாலாஜியின் தரப்பும் கரூர் தொகுதியில் போட்டியிடும் ஜோதி மணியும் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்களாம்.. கடந்த தேர்தலில் நம் துணை நின்று நம்மை வெற்றி பெற வைத்த செந்தில் பாலாஜி இந்த முறை வரப்போவதில்லை நமக்கு தோல்வி தான் நிச்சயம் என்ற வகையில் ஜோதிமணி அரை மனதுடன் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.