24 special

உங்க தலைவிதி நல்லபடியா மாறனுமா...? முன்வினைப் பாவத்தால் கஷ்டப்படுறீங்களா..? அப்போ இந்த கோவிலுக்கு கண்டிப்பா போயிட்டு வாங்க!!

SHIVAN TEMPLE
SHIVAN TEMPLE

மனிதராக பிறந்த ஒவ்வொருவருமே வாழ்க்கையில் பணமோ பொருளோ பெரும் வசதியோ இல்லாவிட்டாலும் மனதில் நிம்மதி வேண்டும் அன்றாட பொழுதை நிம்மதியாக கழித்து இடைஞ்சல் இல்லாமல் படுத்தவுடன் உறக்கம் வந்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை என்றால் எண்ணத்தையும் மனப்பான்மையையும் கொண்டிருப்பார்கள். அதோடு பரவலாக பேசப்படும் கருத்தும் இது! இருப்பினும் சிலருக்கு கிட்டும் பலருக்கு இது கிட்டாது! ஒருவர் செல்வந்தராகவும் பல வசதியுடனும் பொருள் வசதியுடனும் ஆடம்பரமாக வாழ்ந்து வருவார் ஆனால் அவரால் ஒரு பொழுது கூட நிம்மதியாக உறங்கி எந்திரிக்க முடியாது ஆரோக்கியத்துடனும் இருப்பார்களா என்று கேட்டால் அதுவும் கேள்வி குறி தான்! அப்படிப்பட்டவர்கள் தான் இறந்த பிறகாது எனது ஆன்மா விரைவில் சாந்தி அடைய வேண்டும் நிம்மதி அடைய வேண்டும் என்பதற்காக பல தர்மங்களை செய்ய முற்படுவார்கள் பல கோவில்களுக்கு ஏறி இறங்குவார்கள், பல பூஜைகள், யாகங்கள் என அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள்.


                                                                                                                   
அதுமட்டுமின்றி ஒருவர் எந்த விரத தவறும் செய்யாமல் நேர்மையாக பணியாற்றி தன் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென்று சம்பந்தமே இல்லாமல் ஏதோ ஒரு கஷ்டம் ஏதோ ஒரு நஷ்டம் தடை போன்றவை ஏற்படுவது அவர்களின் முன்வினை பயனாலும் நடக்கும்! அதேபோன்று அவர்களது ஜாதகத்தில் ஏதேனும் சூரிய அல்லது சந்திரனின் தசை நடக்கும்! சாதாரணமாக சென்று கொண்டிருக்கிற ஒரு நாளில் திடீரென்று ஏதேனும் ஒரு தடையோ தொடர்ச்சியான நஷ்டமோ ஏற்பட்டால் ஆன்மீக ஈடுபாட்டில் இருப்பவர்கள் ஜோதிடம் கேட்டு ஏன் இப்படி நடக்கிறது என்பதை அறிந்து கொள்வார்கள். இப்படி முன்வினைப் பயனால் சிரமப்படுபவர்களும் ஜாதகத்தில் சூரிய மற்றும் சந்திர தசை நடப்பவர்களும் எந்தவித தயக்கமும் இன்றி பதட்டமும் இன்றி சிவபெருமானே அழகர் என்று அழைக்கப்படுகின்ற அருள்மிகு திருமேனியழகர் திருக்கோவிலுக்கு சென்று வந்தால் நிச்சயமாக அவர்களுக்கு இருந்து வந்த முன்வினை பயன்கள் அனைத்தும் தீர்ந்து வாழ்வு சிறக்கும்! எதற்காக இந்த கோவிலை குறிப்பிட்டு சொல்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம்! அதற்கும் வரலாறு இருக்கிறது,, இந்திரன் கௌதம மகரிஷியின் மனைவியான அகலிகை மீது ஆசை கொண்டதால் கௌதம மகரிஷி இந்திரனின் உடம்பெல்லாம் கண்ணாகும் படி சாபமிட்டார்... அந்த சாபத்திலிருந்து விமோசனம் பெற வேண்டும் என்பதற்காக இந்திரன் பூலோகம் வந்து பல தலங்களுக்கு சென்று சிவபெருமானின் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வந்தார். 

                                                                                                               
அப்படி அவர் பிரதிஷ்டை செய்த இடங்களில் ஒன்றுதான் இந்த திருத்தலம் இந்த திருத்தலத்தில் இந்திரன் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட பிறகு தான் இந்திரனின் சாப விமோசனம் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது, அப்படிப்பட்ட மகா இந்திரனின் சாபத்தை நீக்கிய இந்த திருத்தலம் மகேந்திர பள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.அதனால் முன்வினை பயனால் சிரமப்படுபவர்களும் ஜாதக தோஷம் உள்ளவர்களும் இந்தக் கோவிலில் இருக்கும் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி வேண்டிக்கொண்டால் அவர்கள் துன்பப்பட வேண்டும் என்று எழுதப்பட்டிருந்த தலை எழுத்துக்கூட மாறி நல்ல விதி ஏற்படும் என்பது நம்பிக்கையாகும்! அதுமட்டுமின்றி கல்வியில் சிறக்கவும் நாகதோஷம் நீங்கவும் இக்கோவிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டு சென்றால் நல்ல பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த திருத்தலம் சிவனின் தேவாரப் பாடல்கள் பெற்ற 274 சிவாலயங்களில் ஆறாவது தேவார தலமாகும், அதோடு அருள்மிகு திருமேனியலக்க திருக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் கோயிலடிப் பாளையம், மகேந்திர பள்ளி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. அதனால் முன் ஜென்மத்தில் செய்த பாவங்களும் தலைவிதியால் துன்பப்படுபவர்களும் இந்த திருத்தலத்திற்கு வந்து பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சென்றால் தம்மை நெருங்கியிருக்கும் பாவ பயன்கள் அனைத்தும் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.