
இந்தியாவில் கால் வைத்த அடுத்த நொடியே புதின் செய்த சம்பவம் உலக நாடுகளை அதிரவைத்தது. ரஷ்ய அதிபர் புதின் உலகின் அதிக பாதுகாப்பு நிறைந்த ஆயுதம் ஏந்திர ஆர்னஸ் சென்ட் காரை பயன்படுத்தி வருகிறார். இவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால் இந்த காரில் தான் எங்கு சென்றாலும் பயணம் செய்வார். வெளிநாடுகளுக்கு செல்லும் போது கூட இவரது கார் முதலில் வெளிநாடு சென்று இவரது பிக்கப் செய்ய தயாராக இருக்கும். இப்படியாக தான் இந்த கார் இந்தியாவிற்கு வந்தது .
ஆனால் இங்கு நடந்தது பிரதமர் மோடி அவர்கள் ஒரு சிரிப்புடன் புடினை , “வாங்க… நம்ம கார்ல போகலாம்” என்று அழைத்து சென்றார். அந்த ஒரு நொடியே, உலக நாடுகள் இந்தியாவை ஆச்சிரியத்தில் நின்று பார்த்த தருணம் அது. புதின் , ரஷ்ய அதிபர் புதின் அவர்கள் எந்த நாடு சென்றாலும் தன் ஆர்னஸ் சென்ட் காரைத் தவிர வேறு கார் ஒன்றிலும் காலடி வைக்க மாட்டார் என்பதே உலக அரசியலில் ஒரு ‘அழியாத விதி’. அந்த ஆர்னஸ் சென்ட் என்ன ஒரு சாதாரண வாகனம்? பல அடுக்கு குண்டு தடுப்பு, ஏவுகணை தாக்குதலைத் தாங்கும் கவசம், ரசாயன ஆயுத பாதுகாப்பு, ரகசிய எஸ்கேப் சிஸ்டம்—இவை எல்லாம் பொருத்தப்பட்ட, உலக தலைவர்களில் சிலருக்கே உரித்தான ஒரு ‘கோட்டை’ மாதிரியான கார்.
அதற்குள் அவர் இருக்கும் வரை ரஷ்ய பாதுகாப்பு துறை நிம்மதியாக இருக்கும். உலகத்தில் எந்த நாட்டிற்குச் சென்றாலும், ஒரு நொடி கூட அந்த வாகனத்தை மாற்றுவதில்லை. ஏன் சீனா அவருக்காக குறிப்பாக ஆடம்பரமாகத் தயார் செய்த கார் இருந்தபோதும், “நான் இனி வேறு கார் ஏற மாட்டேன்” என்று நேரடியாக மறுத்து, தன் ஆர்னஸ் சென்ட் காரிலியே தான் பயணம் செய்தவர்.ஆனால் இன்று நம்ம இந்தியாவில்? மோடி அவர்கள் அழைத்த அந்த ஒரு வார்த்தைக்கே, பதில் சொல்லாமல் நேராக இந்தியா தயாரித்த ஃபார்ச்சூனரின் பின்சீட்டில் வந்து அமர்ந்தார். இது ஒரு நிமிடக் காட்சி தான்… ஆனால் உலகமே மூச்சை பிடித்து பார்த்த ஒரு காட்சி.
ஏனென்றால் இதுவரை புதின் அவர்கள் தனது ஆர்னஸ் சென்ட்’ என்பதே உயிர் என்று நினைத்தவர். அதிலிருந்து வெளியேறி வேறு நாட்டின் வாகனத்தில் அமர்வது என்பதே அவருக்கு பாதுகாப்பு காரணங்களால் ‘இல்லை’ என்ற பதில். இதே போல, சீன அதிபரும்! அவருடைய சொந்த கார்—உலகத்தின் எந்த ஒரு தலைவருக்கும் கொடுக்காத கார் அதை மோடிக்கு மட்டுமே கொடுத்த சம்பவம் உலகத்தை திரும்பி பார்கவைத்து.
இந்த காட்சி நமக்கு சாதாரணமாகத் தோன்றலாம். “ இரண்டு தலைவர் ஒரே கார்ல போனாங்க” என்று நினைக்கலாம். ஆனால் உலக சக்திகள் இப்படிப் பார்க்காது. அமெரிக்கா சீனா போன்ற பெரிய சக்திகள் இந்த கார் சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது, அதன் அர்த்தம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள பல முறை ரிவைண்ட் செய்து பார்த்துக்கொண்டிருக்கும். காரணம், இந்த கார் சம்பவத்தில் இந்தியா இன்று எவ்வளவு பெரிய சக்தி என்பதற்கான பதிலை கொடுத்துள்ளது.
