அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ள 500 கடைகள் மூடல் பின்னணியில் உள்ள பகிர் உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவந்துள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை தீர்வு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கீழ் வரும் டாஸ்மாக் துறையில் நிர்வாக குளறுபடிகள் அதிகமாக நடக்கின்றது, பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக வைத்து விற்கப்படுகிறது, குறிப்பாக டாஸ்மார்க் பார்கள் ஏலம் விடுவதில் முறைகேடு நடக்கின்றது, கரூர் கம்பெனியை சேர்ந்தவர்களே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வேறு வேறு பெயர்களில் டாஸ்மாக் பார்களை ஏலம் எடுத்து நடத்துகின்றன, வேறு யாரையும் பார்கள் ஏலம் எடுக்க அனுமதிப்பதில்லை, அது மட்டும் அல்லாமல் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வைத்து விற்கச் சொல்லி அவற்றை இரு தினங்களுக்கு ஒரு முறை வந்து வசூல் செய்து கொள்கின்றனர், ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளும் எவ்வளவு சேல்ஸ் நடக்கிறது என டாஸ்மாக் துறையில் இருந்து புள்ளி விவரங்கள் அவருக்கு செல்கின்றனர் அவற்றை வைத்து டாஸ்மாக் பணியாளர்களை மிரட்டி பணம் வாங்குகின்றனர் என்பது போன்ற குற்றச்சாட்டுகளை டாஸ்மார்க் கடையில் பணிபுரியும் ஊழியர்களும் அவர்களை சார்ந்த தொழிற்சங்கங்களும் மற்றும் எதிர்கட்சிகளும் குற்றம் சுமத்தி வந்தனர்.
இது எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த புகார்களை அடிப்படையாக வைத்தும், கடந்த ஆட்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஈடுபட்ட பண மோசடிகள் புகாரை அடிப்படையாக வைத்தும் வருமானவரித்துறை அதிரடி ரெய்டில் இறங்கியது. வருமானவரித்துறை கிட்டத்தட்ட எட்டு நாட்கள் செந்தில் பாலாஜி மற்றும் அவர்கள் தனது நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்கள், ஹோட்டல்களில் நடத்திய சோதனையில் கிட்டத்தட்ட 350 கோடி ரூபாயை அளவிற்கு வருமானம் மறைக்கப்பட்டு இருப்பதாகவும் மேலும் கணக்கில் வராத மூன்று கோடி ரூபாய் பணமும் சிக்கியது.
இது மட்டுமல்லாமல் பல ஆவணங்கள், பென்டிரைவுகள், ஹார்ட் டிஸ்க்கள், முக்கிய கோப்புகள் போன்றவை மூட்டை மூட்டையாக வருமானவரித் துறையினர் வசம் சிக்கியது. இதனை அடிப்படையாக வைத்து தற்போது வருமான வரித்துறையினர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக்கில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பாட்டிலுக்கு அதிகமாக வைத்து விற்கப்பட மாட்டாது என போர்டுகள் வேறு ஆங்காங்கே முளைத்தன. அதன் பின்னணியில் வருமானவரித்துறை ரெய்டு நடந்து வரும் காரணத்தினால் தற்பொழுது டாஸ்மாக்கில் அதிகமாக வைத்து விற்கக் கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக செய்திகள் உலா வந்தன. இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த இரு தினங்களுக்கு முன்பு 500 கடைகள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்தார்.
இதன் பின்னணியில் உள்ள பகிர் உண்மைகள் தற்பொழுது வெளிவந்து பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது இந்த 500 கடைகள் மூடும் என அறிவித்ததற்கு பின்னணியில் செந்தில் பாலாஜியின் வேலைகள் இருப்பதாக பல எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன. இந்த 500 கடைகளை மூடுகிறேன் என்ற பெயரில் புதிதாக மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் திமுகவினருக்கு சொந்தமான புது பார்களை திறக்க செந்தில் பாலாஜி தரப்பு முடிவெடுத்திருப்பதாகவும், இந்த 500 கடைகளை மூடிவிட்டு 5000 பார்களை திறப்பதற்கு அவர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி கூறியும் பொழுது, 'இந்த 500 கடைகள் மூடல் என்பது வெறும் கண்துடைப்புதான் இந்த 500 கடைகளை மூடிவிட்டு தமிழகம் முழுவதும் 5000 கடைகள் அதுவும் திமுகவினரே நடத்துவது போன்று 5000 கடைகளை திறப்பதற்காக செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்து வருகிறார். இந்த 5000 கடைகள் மூலம் வருமானம் திமுகவினருக்கு செல்லும், அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி திமுகவினருக்கு லாபத்தை ஏற்படுத்தும் இந்த நோக்கத்தை தான் தற்பொழுது செந்தில் பாலாஜி செய்து வருகிறார்' என்ற பகிர் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
இது மட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும் பொழுது கூறியதாவது, '500 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு செந்தில் பாலாஜி 5000 கடைகளை திறந்து விடுவார் எனக் கூறினார். தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 25 பேர் பலியாகி உள்ளனர் இதனால் தமிழகத்துக்கு பெரிய தலைகுறைவு ஏற்பட்டுள்ளது 500 கடைகளை மூடுவோம் என செந்தில் பாலாஜி கூறியுள்ளார் ஆனால் மாற்று வழியில் 5000 கடைகளை திறந்து விடுவார்' என கூறியதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி 500 கடைகளை மூடுவோம் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்த விவகாரம் பின்னணியில் பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ள நிலையில் இந்த சர்ச்சை குறித்து செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து எந்த அறிக்கையோ, விளக்கமோ கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.