Tamilnadu

திமுக காரன்னு சொன்ன பிறகுதான் அடிக்கவே ஆரம்பித்தார்கள் உண்மையான விடியலை காட்டிய பொதுமக்கள் !

Sample picture
Sample picture

அரசியல் வாதிகள் ஆளும் கட்சியினர் மிரட்டலுக்கு பயந்த காலம் தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னரே மலையேறிவிட்டது என்று கூறலாம், என்று சமூக வலைத்தலங்களின் பயன்பாடும், மக்கள் அனைவரும் 4ஜி செல்போன் பயன்படுத்த தொடங்கினார்களோ அன்றே அரசியல் வாதிகள் அடக்கி வாசிக்க தொடங்கிவிட்டனர்.


இன்னும் ஒரு சில முக்கிய இடங்களில் CCTV பெரும் முக்கிய பங்கு வகிக்கிறது, ஓசி பிரியாணி கேட்டு பாக்ஸிங் சண்டை போட்டது முதல், அழகு நிலையத்தில் புகுந்து பெண்களை தாக்கியது முதல் திமுகவினருக்கு பல இடங்களில் எதிராக மாற காரணமாக அமைந்தது CCTV, தற்போது ஆளும் கட்சி என்பதால் அதே போன்று ஒரு கடையில் வம்பிழுக்க விடிய விடிய அடி வாங்கி பாதி பேர் காரில் ஏறி ஓடியும் மீதி நபர்கள் பொது மக்களிடம் சிக்கிய பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.

மன்னார்குடி நகர தி.மு.க., இளைஞரணி செயலர் சுதாகர், 42, விவசாய தொழிலாளர் அணி நகர அமைப்பாளர் பாண்டவர், 54, மாணவரணி நகர துணைச் செயலர் முருகேசன், 48 உள்ளிட்ட எட்டு பேர், இரண்டு நாட்களுக்கு மமுன்னர் மாலை காரில் வந்துள்ளனர்.சூரக்கோட்டையில் உள்ள ஆற்றில் குளித்துவிட்டு, பேக்கரியில் டீ குடித்தனர்.

அருகில் உள்ள பெட்டிக்கடையில் சிகரெட் கேட்டு உள்ளனர், சிகரெட் வாங்க சில்லறை கேட்ட பெண்மணியை தவறாக பேசி தகராறு செய்த அவர்கள், கடையில் இருந்த ரேவதி என்ற பெண்ணிடம் ஆபாசமாக பேசி, அவரது துப்பட்டாவை பிடித்து இழுத்துள்ளனர்.

இதையடுத்து அந்த கடையில் வேலை பார்த்த ஆனந்தன் மகன் வசந்தன், மற்றும் ஊழியர்கள், இதை தட்டிக் கேட்டுள்ளனர். ஆத்திரமடைந்த கும்பல், அவர்களை கடுமையாக தாக்கி, பேக்கரியில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர். இதில், ரேவதி, வசந்தன், பேக்கரி ஊழியர்கள் திருப்பதி, , பாஸ்கர்,  வாடிக்கையாளர் கார்த்திகேயன், ஆகியோர் காயமடைந்தனர்.

உடனடியாக செல் போன் மூலம் உறவினர்கள் ஊர் பொதுமக்களுக்கு தகவல் பறக்க இரண்டு சக்கர வாகனம், கார் ஆகியவற்றில் வந்து கிராம மக்கள், தி.மு.க.,வினரை மடக்கிப் பிடித்தனர் அப்போது நாங்கள் ஆளும் கட்சி எனவும் கைவைத்தால் நிலைமை மோசமாகும் எனவும் அடிதடியில் ஈடுபட்ட திகுகவினர் எச்சரிக்கை விடுக்க.. ஆளும் கட்சியாக இருந்தால் என்ன யாராக இருந்தால் என்ன என அடித்து உதைத்தனர்.

அடி தாங்க முடியாமல் Iஅவர்களில், இருவர் காரில் தப்பியோடினர் . கிராம மக்கள் தாக்கியதில், சுதாகர், பாண்டவர், முருகேசன் உட்பட ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக, ரேவதி புகார்படி, தி.மு.க., பிரமுகர்கள் ஆறு பேர் மீதும், தி.மு.க., நிர்வாகி பாண்டவர் புகார்படி, சூரக்கோட்டையைச் சேர்ந்த ஒன்பது பேர் மீதும், தஞ்சாவூர் தாலுகா போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு தகவல் செல்ல விஷயத்தை அப்படியே விடுமாறும், கடையில் CCTV இருக்கிறதா எனவும் மட்டும் கேட்டு புகார் கொடுத்த மனுவை வாபஸ் வாங்கவும், பேக்கரியில் சேதமான பொருள்களுக்கு பைசல் பண்ணவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

ஆளும் கட்சின்னு சொன்னபிறகுதாம் தலைவரே அடிக்கவே ஆரம்பிச்சாங்க என திமுக நிர்வாகி கதறிய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது.