
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரம் ரவுண்டான அருகே சுபம் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் அப்பள்ளி வளாகத்தில் இளம் விஞ்ஞானிகளின் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற்றது, இதில் இஸ்ரோ விஞ்ஞானி சுப்பிரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து அறிவியல் ஆராய்ச்சிகளில் மாணவர்களின் பங்கு குறித்து விளக்கினார்.மேலும் இதில் முதல்நாள் நிகழ்வாக செயற்கைக்கோள்களை எவ்வாறு ட்ராக்கிங் செய்து அதன் சமிக்ஞைகளை பெறுவது மற்றும் அதன் பயன்கள் பற்றியும் எடுத்து கூறி, பள்ளி மைதானத்தில் நின்றவாரறே அமெரிக்க செயற்கைக்கோள் ஒன்றினை நேரடியாக ட்ராக்கிங் செய்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தார்.
அதன் ஒரு பகுதியாக மாணவர்கள் ஒரு குழு நேரடியாக செயற்கை கோளை எவ்வாறு வானில் அனுப்புவது அதன் மூலம் வானிலை ஆய்வு நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை எவ்வாறு கணக்கிடுவது என விளக்கம் அளித்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலான நிலையில் பொதுமக்கள் பலரும் மாநில அரசு முறையாக எச்சரிக்கை கொடுக்கவில்லை என வானிலை ஆய்வு மையத்தை தற்போது குற்றம் சுமத்தி வரும் வேலையில் இது போன்ற மாணவர்களை கண்டறிந்து ஊக்க படுத்தினாலே நாளை நல்ல வீங்காணிகள் தமிழ்நாட்டிற்கு கிடைப்பார்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.