Tamilnadu

முன்னாள் இன்ஸ்பெக்டர் போட்ட "மனு" வெளிவர இருக்கிறது மிக பெரிய சம்பவம் "வடிவேல் பாணியில் அதே மெத்தேட்"

Stallin and edapadi
Stallin and edapadi

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெபமணி அவர்களின் மகனும் முன்னாள் காவல்துறை ஆய்வாளருமான மோகன் ராஜ் பொதுநலன் சார்ந்த பல விஷயங்களில் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர், கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அரசு அதிகாரிகளின் ஊழல் ஆகியவற்றை நேர்மையுடன் வெளிக்கொண்டு வரும் திறனை பெற்றவர்.


அப்படி பல்வேறு விவகாரங்களை  "வெளிக்கொண்டுவந்தவர்" தற்போது வித்தியாசமான முறையில் புகார் ஒன்றை காவல்துறை சார்பு ஆய்வாளருக்கு அனுப்பியுள்ளார், இது குறித்து அவர் கடந்த 16.08.2021 அன்று அனுப்பிய புகார் மனுவில் குறிப்பிட்டது பின்வருமாறு :- உயர்திரு சார்பு ஆய்வாளர் அவர்கள் கரியாபட்டினம் காவல் நிலையம் நாகை மாவட்டம் - 614 806 அன்புடையீர் வணக்கம்,

பொருள் : வீடுகள் காணவில்லை - கண்டுபிடித்துத் தரக் கோருதல் - குறித்து.நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, நாகக்குடையான் ஊராட்சியில் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் (அனைவருக்கும் வீடு) கீழ் கட்டப்பட்ட 114 வீடுகள் காணாமல் போய்விட்டன. தயைகூர்ந்து காணாமல் போன வீடுகளை கண்டுபிடிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,தங்கள் உண்மையுள்ள, நாட்டுப்பணியில் ஜெ. மோகன்ராஜ் என குறிப்பிட்டுள்ளார்.. அதாவது காட்டாத வீட்டினை கட்டியதாக கூறி மத்திய அரசு பணத்தை பலர் ஏமாற்றி பணம் பெற்றுள்ளதாகவும். இதற்கு மாநில அதிகாரிகள் பலர் உடந்தை என குற்றம் சாட்டிய ஜெபமணி மோகன்ராஜ், போலியாக வீடு கட்டாமல் ஏற்கனவே கட்டிய வீடு அல்லது காலி இடத்தை காட்டி பணத்தை சுருட்டிய அதிகாரிகளை சிக்க வைக்கவும் மேலும் இது போன்ற திருட்டுக்கள் நடைபெறாமல் இருக்கவும் இந்த புகாரினை மோகன்ராஜ் அளித்துள்ளார்.

இந்த புகார் மனுவை அவரது சமூகவலைத்தள பக்கத்திலும் மோகன்ராஜ் பகிர்ந்துள்ளார், விரைவில் இந்த புகார் குறித்து விசாரணை நடைபெறும் பட்சத்தில் மிக பெரிய ஊழல் அரசு அதிகாரிகள் பிடிபடுவார்கள் என்று கூறப்படுகிறது.வடிவேல் கிணற்றை காணோம் என "புகார்" அளித்த காமெடி காட்சி போன்று  முன்னாள் காவல்துறை ஆய்வாளர் ஒருவரே வீட்டை காணோம் என புகார் அளித்து இருக்கும் சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.