24 special

ஆதினம் விவகாரம் விழி பிதுங்கி நிற்கும் திமுக... தேவையா இது?

Stallin and aadhinam
Stallin and aadhinam

ஏன் தருமை ஆதினம் பட்டினம் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்தோம் என்று கடும் சிக்கலை சந்தித்து வருகிறது தமிழக அரசு, தருமை ஆதினம் பட்டன பிரவேசம் நிகழ்ச்சிக்கு கோட்டச்சியர் மூலம் தடை விதித்து அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது தன் கையை கொண்டே தன் கண்ணை குத்தி கொண்ட வலியை திமுக அரசு பெற்றுள்ளது.


இதன் வெளிப்படாகதான் தருமை ஆதீனத்தை உளவு துறையை சேர்ந்த அதிகாரிகளை கொண்டு பேச்சு வார்த்தையில் தமிழக அரசு ஈடுபட்டு இருப்பதாக வெளியான தகவலில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் உண்டாகி இருக்கின்றன,அப்போது, பல்லக்கு வீதியுலாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுக்கு முதல்வர் சுமுகமான முடிவை எடுக்கும் வாய்ப்புள்ளதால், போராட்டங்கள் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று  காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டதாம்.

இதற்கு ஆதீனகர்த்தர், “அரசின் நல்ல முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். தருமபுரம் ஆதீனம் சார்பில் எந்தவித போராட்டங்களிலும் ஈடுபடவில்லை. வெளியில் நடைபெறும் போராட்டத்துக்கு நாங்கள் பொறுப்பு அல்ல” என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.இந்தப் பிரச்சினை தொடர்பாக சட்டப்பேரவையிலும் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில், அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு நல்ல முடிவு வரும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.இந்நிலையில், குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கட்டளை மடத்தில் தங்கியுள்ள

தருமபுர ஆதீனம்27-வது குருமகா சன்னிதானம்  மாசிலாமணி தேசிகஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை, மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில், உளவுத் துறை இன்ஸ்பெக்டர் சதீஷ், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆதீனத்தை பல்லக்கில் வைத்து வீதியுலா செல்லும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ஆதீனகர்த்தரை காவல் துறையினர் சந்தித்து பேசிய நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தருமை ஆதினம் பல்லக்கு விவகாரத்தில் தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகள் ஒன்று சேரலாம் மேலும் பல்வேறு பொதுமக்கள் அரசியல் கட்சிகள் என பல தரப்பிலும் தருமை ஆதினம் பட்டின பிரவேசதிற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்று வருவதால் தமிழகத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் கர்நாடக மாநிலத்தில் பாஜக வளர்ச்சிக்கு அந்த மாநிலத்தை சேர்ந்த மாடதிபதிகள் ஆதரவு முக்கிய காரணமாக உருவானது, அதே போன்று தமிழகத்தில் ஆதினங்கள் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் மாற்றம் வரும் எனவும், ஏன் என்றால் ஆதினங்களுக்கு என்று தமிழகத்தில் மிக பெரிய சொத்துக்கள் உள்ளன, அத்துடன் பல்வேறு குடும்பங்கள் ஆதினங்களை நம்பி வியாபாரம் உள்ளிட்ட பல தொழில்களை செய்து வருகின்றனர்.

இதே நிலை நீடித்தால் ஆதினங்களுக்கு ஆதரவாக அவர்களும் வீதியில் இறங்கும் நிலை உண்டாகும் என உளவு துறை சரியாக கணித்து அறிக்கையை சம்பந்தப்பட்ட தரப்பிடம் கொண்டுபோய் சேர்த்துள்ளது, தற்போது திமுக அரசாங்கம் முன் வைத்த காலை பின் வைக்க முடியாமலும் மேலும் முன்னேறி செல்ல முடியாமலும் தவித்து வருகிறது.

தமிழக ஆளுநரை அழைத்து தருமை ஆதினம் நிகழ்ச்சி நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக அரசு தருமை ஆதினத்தின் பட்டின பிரவேஷம் நிகழ்ச்சிக்கு தடை விதித்ததாக கூறப்படும் சூழலில், இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடிக்கும் என நினைக்கவில்லையாம், பட்டின. பிரவேசதிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கினால் வீரமணி போன்ற திராவிட அமைப்புகள் நம்பிக்கையை இழக்க நேரிடும்.

அதே நேரத்தில் தடையை தொடர்ந்தால் மத ரீதியாக பாஜக வலுப்பெறும் வாய்ப்பை நாமே உண்டாக்க வேண்டி இருக்கும் இதனால் என்ன செய்வது என கடுமையான அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறதாம் திமுக அரசு. இந்த சூழலில்தான் ஆதீனத்தை நீதிமன்றம் செல்லுங்கள் அங்கு உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் அதே நேரத்தில் நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி எங்களுக்கு எந்த வித எதிர்வினையும் திராவிட கழகம் போன்ற நாத்திக அமைப்புகளிடம் இருந்து வராது என பேச்சு வார்த்தை நடத்துகிறதாம் அரசு தரப்பு.

மொத்தத்தில் புலி வாலை பிடித்த கதையாக தற்போது தமிழக அரசின் நிலை மாறி இருப்பதும் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவை காட்டிலும் இந்துக்கள் ஒற்றுமை அதிகரித்து வருவதும் ஆளும் அரசின் தூக்கத்தை கெடுத்துள்ளதாம்.